மாட வீதியில் கூட்டம்
இறைவன் மேல் பூமாரி பொழிய கருடன் தயாராகிறார்
கருடன்
அதிகார நந்தி
மயிலை கபாலி கோவில் பங்குனி விழா துவங்கிவிட்டது. இன்று அதிகார நந்தி. காலை ஆறு மணிக்கு கபாலீஸ்வரரை தரிசித்தேன்.ஆறு மணிக்கு கார் பார்க்கிங்கில் இடம் இல்லை.ஒரு மாதிரி சமாளித்து கிடைத்த இடத்தில நிறுத்தினேன்.வழக்கம் போல் நல்ல கூட்டம்.எழுத்து சித்தர் பாலகுமாரன் தன் குடும்பத்துடன் வந்திருந்தார். அவருக்கு வணக்கம் சொன்னேன். சிரித்தபடி சென்றார். நல்லி குப்புசாமி அவர்கள் தான் கோவில் நிர்வாக குழு தலைவர். அவரும் குடும்பத்துடன் வந்திருந்தார்.
பொதுவாக ஸ்வாமி கோவிலை விட்டு வெளியே வரும் வரை வெளியூர் கலைஞர்கள் வாசிக்க கோவிலின் ஆஸ்தான நாதஸ்வர-தவில் கோஷ்டி அனுமதிக்க மாட்டார்கள்.கபாலி கோவிலும் இதற்கு விதிவிலக்கில்லை. வெளியே வந்தவுடன் வெளியூர் கோஷ்டி ஒன்று மாட வீதி அதிர மல்லாரி வாசித்தது. எந்த ஊரை சேர்ந்தவர்கள் என்று கேட்க நினைத்து மறந்துவிட்டேன்.கற்பகாம்பாள் மெஸ்ஸில் பொங்கல் சாப்பிடலாம் என்று சென்றால் நல்ல கூட்டம். திரும்பி வந்து காரை எடுத்துக்கொண்டு ஆபீஸ் வந்து சேர்ந்தேன்.
4 comments:
Hey vasu,
Nice that you met Balakumaran,believe you took one photograph.
-gokul
No gokul, he was busy chatting with his family. Thought he would feel bad if i disturb him.
வாசு,
பொதுவாக கருடன் பெருமாளுடைய வாகனம் இல்லையா? மயிலாப்பூர் சிவன் கோவிலில் கருடன் எப்படி?
-Gokul
Gokul,
Ingu garudan vaaganam illai. It is used more as a toy for showering the flowers on the lord.
Post a Comment