Thursday, 12 August 2010

பாலகுமாரன்

ரொம்ப நாளாக பாலகுமாரன் அவர்களை பற்றி எழுத வேண்டும் என்று நினைத்துக் கொண்டு இருந்தேன். தீப்பொறி திருமுகம் a.k.a சாரு நிவேதிதா தனது வலைதளத்தில் தனக்கு "ல லே லா லலி ல லா" என்று பாடியிருந்த ஒருவரின் பதிவை வெளியிட்டிருந்தார். அதை பார்த்தவுடன் ஒரு எதிர்வினை ஆற்ற வேண்டும் என்று தோன்றியது.

"தடி எடுத்தவன் தண்டல்காரன்" என்பது போல யார் வேண்டுமானாலும் எவரை/எதை பற்றி வேண்டுமானாலும் இணையத்தில் எழுதலாம் என்றாகிவிட்டது. நம்ம எங்க இருக்கோம்னு கண்டுபிடிச்சு வரவா போறான் என்கிற எண்ணமே இதற்கு முக்கிய காரணம். உதாரணமாக சாரு அபிமானி எழுதியுள்ள இந்த பதிவை பார்ப்போம்.

http://sathish777.blogspot.com/2010/08/blog-post_03.html

பாலகுமாரனின் "தலையணை" நாவல் என்கிறார். பாலா "தலையணை மந்திரம்" என்று எழுதியாக தான் நினைவு. முதல்ல நாவலை படிங்கப்பா. எதையாவது படிச்சிட்டு எழுதாதீங்க. பாலாவுக்கு குடி பழக்கம் கிடையாது. புகை பிடித்து கொண்டிருந்தவர் பின்னாளில் அதையும் நிறுத்திவிட்டார். பாலா குடித்து விட்டு சுஜாதாவிடம் கலாட்டா செய்தார் என்பதெல்லாம் கொடூரமான கற்பனை.சிறுகதை எழுத சுஜாதாவிடம் சில "டிப்ஸ்" பெற்றார். அவ்வளவு தான்.

சினிமாவில் பாலா சில அற்புதமான வசனங்கள் எழுதினர். ரஜினி ரசிகரான சதிஷுக்கு "நான் ஒரு தடவை சொன்ன நூறு தடவை சொன்ன மாதிரி" மட்டும் தான் நினைவில் உள்ளது. உல்லாசம், முகவரி, மாதங்கள் ஏழு போன்ற படங்கள் பாலாவின் வசனம் எழுதும் திறமைக்கு நல்ல உதாரணங்கள். பாலாவின் சினிமா அனுபவங்கள் பற்றி தெரிந்து கொள்ள சதீஷ் அவர்கள் "இதற்குத் தான் ஆசைப்பட்டாயா பாலகுமாரா?" படிக்கலாம்.

பாலா நிறைய எழுதுவதால் ஒரே விஷயம் பல முறை கூறப்படுகிறது என்று ஒரு குற்றச்சாட்டு உண்டு. அது ஓரளவுக்கு உண்மையும் கூட. ஆனால், இதை நிறைய எழுத்தாளர்களிடம் காணலாம். பீமா, சண்டக்கோழி, தாம் தூம், உன்னாலே உன்னாலே போன்ற படங்களுக்கு வசனம் எழுதிய எஸ்.ராமகிருஷ்ணன் சில படங்களில் ஒரே வசனத்தை மீண்டும் பிரயோகம் செய்திருப்பார். அந்த இடத்துக்கு அது தேவைப்பட்டிருக்கலாம். அதற்காக அவர் எழுத்தாளரே இல்லை என்பீர்களா? கும்பகோணத்தையும் காவிரியையும் மீண்டும் மீண்டும் எழுதிய தி.ஜா எழுத்தாளர் இல்லையா? சுத்த பேத்தல்.

பாலாவுக்கு தெளிவில்லையாம். நேரக் கொடுமைடா சாமி. "காலடி" என்கிற பாலாவின் நூலை நேரம் கிடைத்தால் படியுங்கள். சிக்கலான அத்வைத தத்துவங்களை மிகச் சுலபமாக புரிய வைத்திருப்பார் பாலா. படித்து தெளிவு பெறுங்கள்.

ஒருவரை விமர்சிக்கும் முன்பு அவரை பற்றிய அறிதல் மிக முக்கியம். நம்மைப் போன்ற இன்று முளைத்த காளான்கள் பாலா, சுஜாதா பற்றி எல்லாம் பேசும் முன்பு நூறு முறை யோசிக்க வேண்டும். சுஜாதா சொல்வது போல,"எழத்து என்பது தனக்குத் தானே பேசிக்கொள்வது. அதிர்ஷ்டம் இருந்தால் ஒத்த மனதுடையவர்களுடன் பேசலாம்". சுஜாதா, பாலகுமாரன் எல்லாம் என்ன சதீஷ், வாசு, ராமசாமி, கந்தசாமி போன்றவர்களுக்கு புரியவில்லை என்றால் தாங்கள் எழுத்தாளனாக பிறந்த பயனை அடைய மாட்டோம் என்று நினைத்தா எழுதினார்கள்?முதிர்ச்சி பெறுங்கள் சதீஷ்.

14 comments:

பத்மநாபன் said...

//"காலடி" என்கிற பாலாவின் நூலை நேரம் கிடைத்தால் படியுங்கள். சிக்கலான அத்வைத தத்துவங்களை மிகச் சுலபமாக புரிய வைத்திருப்பார் பாலா. //
மிக அருமையான புத்தகம்.சங்கரரை பற்றி எழுதியிருப்பார் .புத்தகம் முழுவதும் தெளிந்த நீரோடயாக கருத்துக்களிருக்கும். அவரது கூடு புத்தகமும் அப்படித்தான்..பகிர்தலுக்கு நன்றி..அவதூறு சத்தங்களினால், சூரியன்களுக்கு ஒன்றும் ஆகிவிடாது.

சி.பி.செந்தில்குமார் said...

தலையணை மந்திரம் enpadhai சுருக்கி அப்படி போட்டிருக்கலாம்.அதே போல் இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா குமுதத்தில் தொடராக வந்தது.

Anonymous said...

//உதாரணமாக சாரு அபிமானி எழுதியுள்ள இந்த பதிவை பார்ப்போம்.

http://sathish777.blogspot.com/2010/08/blog-post_03.html

பாலகுமாரனின் "தலையணை" நாவல் என்கிறார். //
அண்ணே..தலையணை நாவல் என நான் சொல்ல வில்லை.உடையார் என்ற நாவலை தலையணை சைசில் எழுதி இருக்கிறார் என்பதைத்தான் அப்படி குறிப்பிட்டேன்.நான் சாரு அபிமானி மட்டுமல்ல.சுஜாதா,பாலகுமாரன் அபிமானியும் கூட.தடியெடுத்தவன் தண்டல்காரன் தான் அதுக்குத்தான் தலைவரே ப்ளாக் ஆரம்பிக்கிறோம்.நன்றி.

Anonymous said...

//சினிமாவில் பாலா சில அற்புதமான வசனங்கள் எழுதினர். ரஜினி ரசிகரான சதிஷுக்கு "நான் ஒரு தடவை சொன்ன நூறு தடவை சொன்ன மாதிரி" மட்டும் தான் நினைவில் உள்ளது/

மற்ற வசனங்கள் எதுவும் இந்த அளவு பிரபலமாக வில்லையே../

Anonymous said...

என்றால் தாங்கள் எழுத்தாளனாக பிறந்த பயனை அடைய மாட்டோம் என்று நினைத்தா எழுதினார்கள்?முதிர்ச்சி பெறுங்கள் சதீஷ்//
என்னை திட்டவே ஒரு பதிவா?

Vasu. said...

சதீஷ் சார்,
உங்கள எங்க திட்டி இருக்கேன் சொல்லுங்க? அவரைப் பத்தி அதிகம் தெரியாம எழுதி இருக்கீங்கன்னு சொன்னேன். அவ்வளோதான். வருகைக்கு மிக்க நன்றி

Vasu. said...

@செந்தில்/சதீஷ்,

"தலையணை" பற்றி சதீஷ் சொன்னதை நான் சரியாக புரிந்து கொள்ளவில்லை. மன்னிக்கவும்.

muralee said...

Nayagan,Manmadan dialogue written by BALAKUMARAN

muralee said...

NAYAGAN DIALOGUES WRITTEN BY BALAKUMARAN

Vasu. said...

@சதீஷ்,
வலிச்சா ஜெயிக்கற இல்ல, அப்போ வலி தாங்கு - உல்லாசம்
உலகம் ரொம்ப சின்னது, நல்லவங்க நல்லவங்களை சந்திச்சு தான் ஆகணும் - முகவரி
Gold at 10 feet - முகவரி
நாலு பேருக்கு நல்லது பண்ணனும்னா எதுவுமே தப்பில்ல - நாயகன்
நீங்க நல்லவற கெட்டவரா - நாயகன்
குணா பட வசனங்கள்

எல்லாமே அவர் எழுதினது தான் சார். "என் கண்மணித் தாமரை, கடலோர குருவிகள், அப்பம் வடை தயிர்சாதம்" எல்லாம் ரொம்ப நல்ல படைப்புகள். படிச்சு பாருங்க.

Gokul said...

சதீஷ்,
முதலில் ஒரு வேண்டுகோள்,
தயவு செய்து இரண்டு மாறுபட்ட எழுத்துகளை(நபர்களை) ஒரே பதிவில் எழுதாதிர்கள். நீங்கள் கவனித்தால் , இதில் சாருவின் எழுத்திற்கும் பாலகுமாரன் எழுத்திற்கும் சம்பந்தமே இல்லாமல் இருப்பதை உணரலாம், பிறகு ஏன் ஒரே பதிவில் இரு எழுத்தாளர் பற்றி எழுதுவது? உங்கள் பதிவில் வந்த பின்னூட்டத்தில் கூறியபடி, சாருவின் எழுத்தின் சுவாரஸ்யத்தை யாரும் மறுக்கவில்லை, ஆனால் அவர் ஒரு காளமிஸ்ட் மட்டுமே..

பாலகுமாரன் பற்றி வேறு விமர்சனமே இல்லையா? 'தலையணை சைஸ்' எழுதுவது குற்றமா? சாருவின் ராசலீலா இன்னொரு தலையணை தெரியுமா?! பாலகுமாரனை விமர்சித்து நூறு பதிவு போடலாம், ஆனால் நூறிலும் புத்தகத்தின் சைஸ் பற்றி குறிப்பிடுவது வேஸ்ட். பாலாவின் பக்கெட் சைஸ் புத்தகத்திலும் குப்பைகள் உண்டு, மாணிக்கங்களும் உண்டு.

வாசு,
தீப்பொறி திருமுகத்தோடு, உதார் பாண்டி, கைப்புள்ள, சீனா தானா ..இதெல்லாம் சேர்த்துக்கொள்ளலாம்!

Gokul said...

சாரு நிவேதிதாவையும் பாலகுமாரனையும் ஒப்பிட்டு ஏற்கனவே நான் சாருவிற்கு ஒரு கடிதம் எழுதி , அதை சாரு "ஏன் தேவை இல்லாமல் பாலகுமாரனை இழுக்கறீர்கள்?" என்று பதிலளித்தார்.

Ramesh said...

பாலகுமாரன் அவர்களை சாருவுடன் ஒப்பிடவேண்டிய அவசியம் இல்லை...ஒரு எழுத்தாளரை இன்னொருவருடன் ஒப்பிடுவது...ஏற்புடையதல்ல...ஒவ்வொருவருக்கும் தனித்துவம் இருக்கிறது...ஆனால் சாருவுக்கு தனித்துவம் என்று எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை...(நித்தியானந்தா புகழ் பாடிவிட்டு..அவர் மாட்டிய அடுத்த நொடியே அந்த ஆளைத் திட்டி தொடர் எழுதத் தொடங்கியவர்தானே அவர்)...

Muthu said...

வாசு,

சாவி அவர்கள் ஏற்பாடு செய்திருந்த விழா ஒன்றில் சுஜாதாவிடம் போதையில் சவால் விட்டது, சாவி அவரை கண்டித்தது, பின்னர் அவரே அதை நினைத்து வெட்கியது எல்லாமே பாலாவே பதிவு செய்திருப்பது. இதில் நீங்கள் ஏன் கொடூரமான கற்பனை என்றெல்லாம் சப்பைக்கட்டு கட்டுகிறீர்கள் ?

அன்புடன்
முத்து