Showing posts with label பாலகுமாரன். Show all posts
Showing posts with label பாலகுமாரன். Show all posts

Thursday, 10 February 2011

வலைமனை பற்றி பாலகுமாரன்

சமீபத்தில் பாலகுமாரனின் "புருஷவதம்" நாவலை பல்சுவை நாவலில் படித்தேன். நாவலுக்கு முன்பு ஒரு கேள்வி பதில் பகுதி இருந்தது , அதில் ஒரு கேள்வி "நீங்கள் ஏன் இணைய தளத்தில் பேசுவதில்லை?". இதற்கான பதிலின் சுருக்கம் இதோ,

1. கணினியை இயக்கும் பொறுமை எனக்கில்லை. இணையதளத்தில் / வலைபின்னலில் போய் பின்னூட்டம் இடுவது ஒரு போதை.
2. இணையத்தில் ஆத்திரமூட்டுவதர்கென்றே பல கிறுக்குத்தனமான மனிதர்கள் இருக்கிறார்கள் , அந்த ஆத்திரமூட்டலில் சிக்கி கொண்டால் பதிலுக்கு ஆத்திரப்பட்டு அந்த வலைப்பின்னல் முழுவதும் நாறடிப்போம்.
3. என்னை பற்றி என்ன வேண்டுமானாலும் நினைத்து கொள் என்று ஒதுங்கி விட்டால் இந்த வலைபின்னல் சண்டைகள் வராது.
4.எனது புத்தகத்தை வாசகர்கள் நிச்சயம் தேடி படிப்பார்கள், அப்படி படிப்பவர்கள் ஐந்து அல்லது பத்து சதவீதம் நேரே பார்க்கும்போது பாராட்டுவார்கள் , அது போதுமானது.
5.விலாசம் தெரிந்து பாராட்டுபவர் வீட்டிற்கு போக வேண்டியதில்லை.
6.எதிரே நின்று வாசகர் பாராட்டுகின்ற போதே அந்த பாரட்டுதலில் இருந்து விலகி அவரை பார்த்து கொண்டு இருப்பது சுகமானது.
7.ஒரு புதினத்தை எழுதும்போதே இது இன்னவிதமான வாசகரை தொடும் என்று நான் அறிவேன்.
8.வலைபின்னலில் பாராட்டை எதிர்பார்த்து போகிற மனப்பான்மை அதிகம் ஏற்படுகிறது.
9. எனவே வலையும் வேண்டாம் பின்னலும் வேண்டாம்.

இதுதான் எழுத்து சித்தர் பாலகுமாரன் அவர்களின் கூற்று.

நான் எதையும் கூட்டவோ குறைக்கவோ இல்லை.

இதில் என்ன பிரச்சனை என்றால் அந்த பதில் முழுவதும் நான் எதிர்பார்த்த வார்த்தை வரவே இல்லை அந்த வார்த்தை "விமர்சனம்". ஆம் , விமர்சனம் என்ற வார்த்தையே வரவில்லை. எழுத்து சித்தர் எதிர்பார்ப்பது ஒன்றேதான் , அது பாராட்டு ,

அது வலைமைனையில் இல்லையென்றால் அது மிகவும் "ஆத்திரமூட்டும்" மக்களின் கூட்டம்.

பின்னூட்டத்தில் ஆத்திரமூட்டும் வாசகங்கள் வரும்.. இல்லையென்று எவரும் சொல்ல முடியாது . ஆனால் அவரின் மற்ற வார்த்தைகளும், அவரின் புதினங்களும் ஆச்சர்யமூட்டும் வகையில் வேறுபடுகின்றது.

பாலா சொல்கிறார் "எதிரே நின்று வாசகர் பாராட்டுகின்ற போதே அந்த பாரட்டுதலில் இருந்து விலகி அவரை பார்த்து கொண்டு இருப்பது சுகமானது.", இது விமர்சனத்திற்கு (ஆத்திரமூட்டும் பின்னூட்டுங்களுக்கு) பொருந்தாதா? சாதாரண மனிதருக்கு வேண்டுமானால் பொருந்தாமல் இருக்கலாம் , ஆனால் சித்தருக்குமா?

கனிவு நிறைந்த பார்வையோடு  புகைப்படங்கள் , ஒரு துறவிக்குரிய தோற்றம், "நான் தெளிவடைந்து விட்டேன்" என்ற முழக்கம். பாராட்டும் மனிதரை தள்ளி நின்று பார்க்கும் 'பக்குவம்'.எல்லாம் இருந்தும் விமர்சனம் என்ற வார்த்தையே அவரின் வாயில் இருந்து வராதது துரதிர்ஷ்டமே.இத்தனைக்கும் அந்த புதினம் முழுவதும் அவர் அலசி இருப்பது மனம், கர்வம், மனோசக்தி , அகந்தை போன்றவற்றை.

புருஷவதம் நாவலின் இரண்டாம் பாகத்திலும் இப்படி ஒரு கேள்வி பதில் ,

கேள்வி: நீங்கள் ஏன் இலக்கிய கூட்டம் எங்கள் ஊரில் நடத்த கூடாது?

இதற்கான பதிலின் சுருக்கம்:

(i) ஒரு இடத்தில் ஒரு மணி நேரத்திற்கு மேல் உட்காருவதற்கு எனக்கு பிடிக்கவில்லை.
(ii) மேலும் இலக்கிய கூட்டங்கள் எல்லாம் வெறுமே பரஸ்பரம் புகழுகின்ற விஷயமாகவே இருக்கின்றன(!!?)
(iii) எதிர்பாராது எங்கேனும் வாசகரை சந்திக்கும்போது அவர்கள் சொல்லும் பாராட்டு போதுமானது.

பாராட்டு, பாராட்டு,பாராட்டு, பாராட்டு,பாராட்டு, பாராட்டு,பாராட்டு, பாராட்டு .................

இணையத்தில் ஆயிரமாயிரம் விமர்சனங்களை பார்க்கும் சாரு, ஜெயமோகன், எஸ்.ரா போன்றோரை நினைத்து கொண்டேன்.....

Sunday, 20 June 2010

ஆயிரத்தில் ஒருவன் குறித்து பாலகுமாரன்?

சோழர்களை பற்றி மிகவும் எழுதியவர் பாலகுமாரன். சமீபத்தில் வெளிவந்த ஆயிரத்தில் ஒருவன் படத்தில் சோழர்களை சித்தரித்த விதம் பற்றி பாலகுமாரன் அவர்களின் கருத்து என்ன? இது பற்றி அவர் எங்கேனும் எழுதி / சொல்லி இருக்கிறாரா? அறிந்தவர்கள் சொல்லலாம்!

Saturday, 29 August 2009

விமர்சிக்க முடியாத பாலகுமாரன்


சமீபத்தில் பாலகுமாரன் பேசுகிறார் (http://balakumaranpesukirar.blogspot.com/) என்ற ப்ளாக்கில் பாலகுமாரனின் உடையார் நாவல் பற்றி ஒரு வாசகர் எழுதிய கடிதத்தை படிக்க நேர்ந்தது.அந்த நாவலை பற்றி மிகவும் உயர்வாக எழுதி பாலகுமாரனுக்கு ஒரு பெரிய பாராட்டு ஒன்றை வழங்கி இருந்தார் அந்த வாசகர்.

அதனை படிக்கும்போது, அந்த உடையார் என்ற 6 பாக நாவலை படிக்க வேண்டுமென்ற ஆவல் வந்தது, அதனை விட அந்த நாவலை பற்றி ஒரு தேர்ந்த விமர்சகர் விமர்சனம் செய்ய வேண்டும் , அந்த விமர்சனத்தை படிக்க வேண்டும் என்ற ஆவலும் வந்தது.
அதனை ஒரு கடிதமாக எழுதி ஒரு பின்னூட்டம் இட்டேன். நான் சொல்ல வந்தது என்னவென்றால்,
என்னதான் உடையார் நாவலை பற்றி வாசகர்கள் உயர்வாக சொன்னாலும், இந்த புகழ்ச்சிகள் அந்த வாசகர்கள் பாலகுமரான் என்ற எழுத்தாளர் மேல் இருக்கும் ஒரு பிரியம் காரணமாக வந்தது என்று சந்தேகப்பட வைக்கிறது, ஆகவே இந்த படைப்பை பற்றி தீவிர வாசகர்களும், மற்ற எழுத்தாளர்களும் என்ன நினைக்கிறார்கள் என்று தெரிய வேண்டும். அந்த தீவிர வாசக மற்றும் சக எழுத்தாளர்களின் விமர்சனமே, அந்த புத்தகத்தின் உண்மையான் இடத்தை அடைய வைக்கும்.

இதுதான் நான் அந்த கடிதத்தில் எழுதியது, ஆனால் இந்த பின்னோட்டத்தை அந்த வலைமனை வெளியிடவே இல்லை...

இந்த கடிதத்தில், பாலகுமாரனை பற்றி நான் என்ன தவறாக எழுதி விட்டேன் என்று இன்று வரை புரியவில்லை. இது பற்றி நான் ஏற்கனவே எழுதி இருந்தாலும் மீண்டும் மீண்டும் பாலகுமாரனின் ரசிகர்கள் ஒரு சிறு விமர்சன குரலையும் தாஙக முடியாமல் இருப்பது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது.

Tuesday, 14 July 2009

காலடித்தாமரை

பாலகுமாரன் அவர்களின் "காலடித்தாமரை" படித்துக்கொண்டு இருக்கிறேன். ஆதிசங்கரரின் வாழ்க்கை வரலாறு. அத்வைதத்தை மிக எளிதாக புரிய வைக்க முயற்சி செய்திருக்கிறார். அந்த முயற்சியில் வெற்றி பெற்றிருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். பதஞ்சலி முனிவர் யார், வ்யாஹரநம் என்பது என்ன, தனிமையின் சிறப்பு என்று பல நல்ல செய்திகளை கொண்ட நூல். அவசியம் படிக்க வேண்டிய ஒன்று.