அன்புள்ள சாருவிற்கு,
49-O குறித்து உங்களின் எதிர்வினை மிகவும் மிகவும் தவறான நிலைப்பாடு.நீங்கள் உங்கள் பதிலில் அரசியல்வாதியை பற்றி கொலைகாரர்கள் , கொள்ளைகாரர்கள் , பயங்கரவாதிகள் என்றெல்லாம் குறிப்பிட்டு இருந்தீர்கள் , எதையும் யாரும் மறுக்க முடியாது, ஆனால் ஜனநாயகத்திற்கு மேலான ஒரு அமைப்பை உலகம் இன்னும் காணவில்லை.
ஒரு அமைப்பை (system) எதிர்ப்பவர் அதனினும் மேலான ஒரு அமைப்பை காட்டியே இப்போதுள்ள அமைப்பை எதிர்க்க வேண்டும், அது இல்லாமல் மிக விரக்தியான மன நிலையில் வோட்டு போடாமல் இருப்பது நீங்கள் சொன்ன அதே அரசியல்வாதிகளுக்கு துணை போவது போல் இல்லையா?
இதனை மற்றவர் யாரவது சொல்லலாம் ஆனால் எழுத்தாளராகிய நீங்கள் சொல்லக்கூடாது.
உங்களை போன்றவர் ஜனநாயகத்திற்கு மேல் நம்பிக்கை இழக்க கூடாது.இந்த சிஸ்டத்தை உள்ள கெட்டவைகளை களைவதை பற்றியே நீங்கள் எழுதவேண்டுமே (நீங்கள் மாயாவதியை பற்றி எழுதியதை போன்று..best among the worst) தவிர வோட்டு போட மாட்டேன் என்று கூறுவது மிகவும் தவறு.
நீங்கள் இருக்கும் மைலாப்பூர் தென்சென்னை தொகுதி.தென்சென்னை தொகுதியில் சரத்பாபு என்ற ஒருவர் இந்த நாடளுமன்ற தேர்தலில் சுயேட்சையாக நிற்கிறார் , இவர் யார் என்றால் IIM-இல் MBA படித்துவிட்டு மிகப்பெரிய MNC வேலைகளை விட்டுவிட்டு சொந்தமாக உணவு தயாரித்து விநியோகிக்கும் தொழிலை செய்கிறார், அதனை வெற்றிகரமாகவும் செய்கிறார், இவர் மிகவும் ஏழ்மையான குடும்ப சூழ்நிலையில் இருந்து வாழ்ந்து வந்தவர்.தென்சென்னை தொகுதியில் நிற்கும்
சரத்பாபு பற்றி மேலும் அறிய,
http://idlyvadai.blogspot.com/2009/04/2009_15.html
http://sarathbabu.co.in/in/
எனக்கு தெரிந்து இவர் ஒருவர், தெரியாமல் எத்தனையோ பேர் ராமர் பாலத்தின் அணிலை போல செயல்பட்டுக்கொண்டுதான் இருக்கின்றனர்.
இவர் எந்த நம்பிக்கையில் தேர்தலில் நிற்கிறார்? நம்மை போன்றவர்களை நம்பித்தான். இந்த நேரத்தில் இவர் தேர்தலில்
ஜெயிப்பார் என சொல்வது ஒரு joke ஆனால் நம்பிக்கை இழக்காமல் இவரை இவரை போன்றவர்களை ஆதரிக்க வேண்டும், இன்று, இல்லாவிட்டால் நாளை இல்லை மற்றொரு நாள் விடிந்தே தீரும், ஆனால் அதற்கு நாம் எல்லோரும் வோட்டு போட வேண்டும்.
நீங்கள் ஒரு நக்சலைடாக இருக்க கூடாது, என் என்றால், என்னை பொறுத்தவரை தனி மனித உரிமைகள்தான் எல்லாவற்றிலும் முக்கியமானது , கம்யுனிசத்தில் அதற்கான உத்தரவாதம் மிகவும் குறைவு, நீங்கள் சொல்லும் நக்சல்பாரிகள் ஆட்சி செய்தால் charuonline-இல் நீங்கள் எழுதுவதை கூட எழுத முடியுமா என்பதே சந்தேகம்தான்.
ஆகையால் 49-O பற்றி ஆதரித்தோ எதிர்த்தோ எழுதுங்கள் தயவு செய்து ignore செய்துவிடாதீர்கள். அதே போல் அதை விட மேலான ஒரு tool இருந்தால் அதனை பற்றி எழுதுங்கள், இதனால் மாற்றம் வந்துவிடுமா என்பதை பற்றியெல்லாம் நினைக்காமல் எழுதுங்கள்.ஏன் என்றால் எந்த நிலையிலும் நம்பிக்கையை கைவிடக்கூடாது, போராட்டத்தை கைவிட கூடாது.
இந்தியாவில் உள்ள Human Rights activist-கள், RTI-activits-கள் எந்த நம்பிக்கையில் உள்ளனரோ , அதே நம்பிக்கையில் நாமும் இருப்போம்.
3 comments:
nice post
Thanks Rameshkar!
Post a Comment