Saturday 22 March 2008

கேப்பையும் கேவுறும் -1

இது என்ன தலைப்பு என்று பல பேருக்கு தோன்றலாம்!
இதை படிக்கும் (சில பேர் படிக்கிறார்கள் என்றே நினைக்கிறேன்) நபர்களுக்கு கேப்பை என்ற சொல்லிற்கு கேழ்வரகு என்ற அர்த்தம் தெரியும்.எத்தனை
பேருக்கு கேவுறு தெரியும், அப்படியெ தெரிந்தாலும், எத்தனை பேர் அதனை கொச்சையான தமிழ் என்று நினைக்கறீர்கள்?

இது மிகவும் முக்கியமான கேள்வி. ஏன் என்றால் இது தமிழகத்தின் சரி பாதி தமிழர்களின் ப்ரச்சினை.

இதுவும் ஒரு வகையில் "கற்றது தமிழ்" படத்தின் கதையை ஒட்டியது.
கற்றது தமிழ் பொருளாதார ப்ரச்சினை பற்றி பேசுகிறது, நான் கலாச்சாரத்தை பற்றி பேசுகிறேன்.

விஷயத்திற்கு வருகிறேன்!

தமிழகத்தின் கல்வி,சமூக,பொருளாதார முக்கியமாக கலாச்சார வளர்ச்சிக்கு வட மாவட்டங்களின் பங்கு என்ன?

வட மாவட்டங்கள் என்பது காஞ்சிபுரம், திருவள்ளுர்,தர்மபுரி,கிருஷ்னகிரி,விழுப்புரம்,கடலூர்,திருவண்ணமலை மற்றும் வேலூர் ஆகியன.

நானே வட மாவட்டத்தை சேர்ந்தவன் என்ற முறையில் சொல்கிறேன்,வட மாவட்டங்களின் நிலை மிகவும் கேவலம்!

தமிழ் நாடு என்ற மாநிலத்தில் ஒரு மிகப்பெரிய நிலப்பரப்பும் அதன் மக்களும் வெறுமனெ உன்டு உறங்கி வாழ்கிறார்கள்.

அவர்கள் அரசாங்கதிற்க்கு ப்ரச்சினை இல்லாத மக்கள்.அங்கெ கலவரம் இல்லை, பொருளாதார வளர்ச்சியும் இல்லை, மிகப்பெரிய ப்ரச்சினை இல்லை,
சாதனையாளர்கள் இல்லை,கலை இல்லை, கவிதை இல்லை,மிகப்பெரிய லட்சியம் இல்லை, கனவு இல்லை.

இல்லை, இல்லை, இல்லை, இல்லை,இல்லை......

முதலில் பொருளதாரத்திற்கு வருவோம், எனக்கு தெரிந்து வட மாவட்டங்களில் மிகப்பெரும் தொழிலதிபர்கள் மிக மிக குறைவு.அப்படியே இருந்தாலும் அவர்கள் தங்களை தமது ஊரை சேர்ந்தவர்களாக கூறிக்கொள்ள மாட்டார்கள்!

உதாரனமாக வேலூரை சேர்ந்த ஒரு தொழிலதிபர் தன்னை சென்னைவாசியாகவே கற்பனை செய்து கொள்வார். அவர் அந்தஸ்து உயர உயர அவர் சென்னையை நோக்கியெ தமது வாழ்க்கையை நெய்து கொள்வார்! இது கூட பரவாயில்லை, ஆனால் மிக முக்கியமான விஷயம், அவர் வேலூரை சேர்ந்தவர் என்று வெளியெ சொல்லவே மாட்டார்!

சில பேர் சொல்லுவார்கள், வட மாவட்டங்கள் மிகவும் வறண்ட ப்ரதேசம் அதனால்தான் அங்கே பணம் இல்லை என்று, இது மிகப்பெரிய பொய் என்று
தூத்துகுடியை,ராமனாதபுரத்தை பார்த்தால் தெரியும்.
ராமனதபுரத்து வறட்சி அவர்களின் வீரத்தை குறைக்கவில்லை, மாறாக வளர்த்தது.
தூத்துக்குடியின் வறட்சி அவர்களை சென்னையின் மிகபெரிய வியபாரிகளாகவும்,செல்வந்தர்களகவும்,மிக பெரிய தாதாவகவும் ஆக்கியது.

ஊக்கமும் உழைப்பும் அவர்களை உயர வைத்து இருக்கிறது.

ஈரொட்டிலிருந்து திருப்பதிக்கு பால் மற்றும் பூ கொண்டு போகும் லாரிகளை பல சமயம் வியந்து இருக்கிறேன்.அந்த லாரிகள் வேலூரையும்
,திருவண்ணாமலையும் கடந்தே செல்லும்!

இது மக்களின் அடிப்படை குணம் சார்ந்ததா என்று தெரியவில்லை.

சென்னையில் இருந்து 200 கி.மி தூரம் இருக்கும் வட மாவட்ட மக்களால் சென்னையில் ஒரு சரவணா ஸ்டோர்ஸ் அல்லது சரவண பவன் வைக்க
முடியவில்லை, ஆனால் சென்னையில் இருந்து சுமார் 600- 700 கி.மி தூரம் உள்ள தென் மாவட்டது அண்ணாச்சிகளால் முடிகிறது.

இதனால் அவர்கள் குறுக்கு வழியில் வந்து விட்டதாக சொல்லவில்லை , மாறாக அவர்களின் உழைப்பை மதிக்கிறேன்.

என்னுடைய கேள்வி எல்லாம் , ஏன் வட மாவட்ட மக்களால் இதனுடைய 10ல் ஒரு பங்கு கூட சாதிக்க முடியவில்லை?

அடுத்த பகுதிகளில் ...Marketing, கல்வி,கலாச்சாரம்,சினிமா .......