Wednesday 4 February 2009

It's Quiz Time

1. Which famous Tamil writer has been awarded the Padma Bhushan few days back?

2. Name the actress who along with her boyfriend has invested 12% stake in Rajasthan Royals?

3. Whose record has Muttiah Muralitharan equalled by taking 502 wickets in one day cricket?

4. Director Agathiyan of KathalKottai fame and editor B.Lenin are special to tamil cinema in way. How?

5. Name the Indian author who won the booker prize for his book "The White Tiger"?

6. Who directed the film "Slumdog Millionaire"?

7. Who is Dr.Ramakant Panda?

8. Who is India's Finance Minister at the moment?

9. Who owns the F1 motor racing team "Force India"?

10. About which version of Windows did Bill Gates say "It would be more user-centric"

Tuesday 3 February 2009

சிதம்பரம் நடராஜர் கோவில் - தீக்ஷதர்களும் அரசும்

சிதம்பரம் நடராஜர் கோவில் இனி தீக்ஷதர்களின் கட்டுப்பாட்டில் இருக்காது என்றும் அதை அரசே ஏற்று நடத்தும் என்றும் நேற்று தமிழக அரசு அறிவித்துள்ளது. கோவிலுக்காக பணிகளை கண்காணிக்க ஒரு அதிகாரியையும் உடனே நியமனம் செய்ய உள்ளது. இது என்னை பொறுத்தவரை வரவேற்கப்பட வேண்டிய ஒன்று. கோவில் என்பது அனைவருக்கும் சொந்தம். இறைவன் மீது பக்தி உள்ள யார் வேண்டுமானாலும் அங்கு செல்லலாம்;சென்று இறைவன் நாமத்தை பாடலாம். அது குறிப்பிட்ட ஒரு பிரிவினருக்கு மட்டுமே சொந்தம் என்று கூறுவது சரியல்ல. ஆனால், இந்த அரசு நிஜமாகவே ஆலயங்கள் அனைவருக்கும் பொது என்ற நோக்கில் இதை செய்கிறதா அல்லது பார்பன எதிர்ப்பு கொள்கையில் இதுவும் ஒன்றா என்பது நமக்கு தெரியாது. எப்படியாக இருந்தாலும், அரசு சிதம்பரம் கோவிலை கையகபடுத்துவதில் உறுதியாக இருந்தால் கோவில் மட்டுமே கதி என்று வாழும் தீக்ஷதர்களின் நிலையையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

கிருத யுகத்தில் சிவபெருமான் சிதம்பரம் கோயில் பொறுப்பை 3000 அந்தணர்களிடம் ஒப்படைத்தார் எனவும் அந்த வம்சத்தில் வந்தவர்கள் தான் தீக்ஷதர்கள் என்றும் கூறப்படுகிறது. இன்றும் சிதம்பரம் கோயிலுக்கு அரசு மான்யம் எல்லாம் கிடையாது. தனியார் நிறுவனங்கள் கொடுக்கும் நிதி மற்றும் தனி நபர் செய்யும் தானம் ஆகியவற்றில் தான் சிதம்பரம் கோயில் இயங்குகிறது. வரும் வருமானத்தின் முதல் பங்கு நடராஜருக்கு தான். தில்லை நாயகனுக்கு செய்யப்படும் நெய்வேத்யம் மற்றும் இதர செலவுகள் போக பாக்கி இருப்பதை தீக்ஷதர்கள் தங்களுக்குள் பிரித்து கொள்வார்கள். அரசு இந்த கோவிலை எடுத்து கொள்ளும் பட்சத்தில் தீக்ஷதர்களுக்கு தேவையான உதவிகளை செய்ய வேண்டும்.

கோவில் ஒரு குறிப்பிட்ட பிரிவினரின் கையில் இருப்பது நியாயமில்லை என்றாலும் இந்தியாவில்(குறிப்பாக கேரளாவில்) பல கோவில்கள் இப்படி உள்ளன. குருவாயூர் கண்ணனை பற்றி எத்தனையோ பாடல்கள் பாடிய யேசுதாஸ் அவர்களுக்கு இன்று வரை அங்கு அனுமதி இல்லை. சமீபத்தில் கேரளாவில் தாழ்ந்த சாதியை சேர்ந்த அமைச்சர் ஒருவர் தனது குடும்பத்துடன் குருவாயூர் கோவில் சென்று வந்தார். அவர் சென்ற பின் கோவில் நிர்வாகம் மொத்த கோவிலையும் தண்ணீர் ஊற்றி அலம்பியது. ஆனால், கேரளாவில் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இது போன்ற பிரச்சனைகளில் தலையிட முடியாது. இப்போது கூட இது தி.மு.க ஆட்சி என்பதால் தான் இதெல்லாம். மீண்டும் அம்மா ஆட்சிக்கு வந்தால் கோவில் தீக்ஷதர்களுக்கு திரும்ப போய்விடும் சாத்தியம் உள்ளது. ஆக, தமிழ்நாட்டில் பல கேவலங்களுக்கு வித்திட்ட தி.மு.க அரசு இன்று கோவிலை வைத்து அரசியல் செய்து ஒரு புதிய பிரச்சனைக்கு பிள்ளையார் சுழி போட்டுள்ளது.

Monday 2 February 2009

குளோபல் ரிசஷன்

பொறையை வீசி எறிந்தால் பாய்ந்து கவ்வும் நாய் போல் ப்ராஜெக்ட் வந்தால் கவ்வ காத்திருக்கும் கணினி நிறுவனங்கள்
பெஞ்சில் இருந்தே சம்பளம் வாங்கிய காலம் போய் பெஞ்சே வேண்டாம் என்று கூறும் சாப்ட்வேர் எஞ்சினியர்கள்
வெறிச்சோடும் வெள்ளிக்கிழமை மாலை நேர பார்கள்
சாப்ட்வேர் மாப்பிள்ளை தான் வேண்டும் என்ற காலம் போய் நிரந்தர வேலையில் இருந்தால் போதும் என்று கூறும் பெண்ணை பெற்றவர்கள்
பி.டெக்(IT), பி.ஈ(Computer Science) தான் வேண்டும் என்ற நிலை மாறி மற்ற துறைகளை தேர்ந்தெடுக்கும் மாணவர்கள்

யோசித்து பார்த்தால் குளோபல் ரிசஷன் ஒரு விதத்தில் நன்மை தான் செய்திருக்கிறது.