Friday, 17 April 2009

அயன்

தமிழ் சினிமா ரசிகனை முட்டாள் என்று முடிவு செய்து எடுக்கப்பட்டுள்ள மற்றுமொரு படம். M.Sc(Comp Science) படித்துவிட்டு ஒரு த்ரில்லுக்காக மலேசியா, ஆப்ரிக்கா என்று கடத்தல் சரக்கை எடுத்து செல்லும்/கொண்டு வரும் ஹீரோ. B.Pharm படிக்கும் ஹீரோயினுக்கு இவன் மீது காதல். நாலு பாட்டு, அஞ்சு சண்டை என்ற எழுதப்படாத தமிழ் சினிமா விதியை மீறாத திரைக்கதை.

இந்த படம் ஒப்புக்கொண்ட உடன் சூர்யா, "அயன் என் திரை வரலாற்றில் ஒரு முக்கியமான படம்" என்றார். அந்த அளவுக்கு அவர் பெருமைப்பட படத்தில் ஒன்றும் இருப்பதாக தெரியவில்லை.இந்த படத்திற்காக இயக்குனர் கே.வி.ஆனந்திடம் சென்னை தமிழ் கற்றுக்கொண்டாராம் சூர்யா. சென்னை தமிழ் பேச இந்த படத்தில் என்ன அவசியம் என்று தெரியவில்லை. சூர்யா பாதி படத்தில் சாதா தமிழ் பேசுகிறார். சில காட்சிகளில் சென்னை தமிழ் பேச முயற்சிக்கிறார். அப்படி ஒரு வேளை சென்னை தமிழ் பேசி நடிக்கும் அவசியம் உள்ள பாத்திரம் ஏற்றால், சூர்யா கமலிடம் ட்ரைனிங் எடுத்துக்கொள்ளலாம்.(பம்மல் K சம்பந்தம், மகராசன், அபூர்வ சகோதரர்கள், சவால் படங்களை நினைவில் கொள்க)

தமன்னாவுக்கும் சூர்யாவுக்கும் காதல் உண்டாகிற விதத்தை எல்லாம் கற்பனை செய்து பார்க்க கூட முடியவில்லை. இதை எல்லாம் சொன்னால், "சினிமா மூணு மணி நேர பொழுதுபோக்கு. இதுல எதுக்கு லாஜிக் பார்க்கிறாய்" என்பார்கள்.இந்த படத்தில் சூர்யாவின் அம்மாவாக "ப்ரேமி" ரேணுகா. நல்ல நடிகை இவர். நடிப்பதற்கு வாய்ப்பே இல்லாத ஒரு ரோல் அவருக்கு. ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் இரண்டு பாடல்கள் பரவாயில்லை. படத்தின் கிளைமாக்ஸ் "Catch me if you can" படத்தை பார்த்து இயக்குனர் inspire ஆனதால் ஏற்பட்ட பாதிப்பு என்று நினைக்கிறேன்.

Thursday, 16 April 2009

Shortest war in the history!

The shortest war in the history is between Great Britain and Zanzibar (African Nation) in 1896. Zanzibar surrendered after 38 minutes!

Monday, 13 April 2009

A Wednesday

வெள்ளி இரவு Zee சினிமாவில் இந்த படத்தை பார்த்தேன். படத்தின் திரைக்கதையை பற்றி நிறைய கேள்விப்பட்டிருந்தேன். படத்தை பார்த்த போது அதன் வீர்யத்தை உணர்ந்தேன்.மிக குறைந்த பொருட்செலவில் எடுக்கப்பட்ட படம். தீவிரவாதத்தை மையமாக கொண்ட கதை. அனுபம் கேர், நசுருதீன் ஷா நடித்துள்ளனர். இந்த படத்தை தான் கமல் இப்போது "உன்னை போல் ஒருவன்" என்ற பெயரில் தமிழில் எடுத்துக்கொண்டு இருக்கிறார். நசுருதீன் ஷா வேடத்தை கமலும் அனுபம் கேர் பாத்திரத்தை மோகன்லாலும் செய்கின்றனர்.

படத்தின் இயக்குனர் நீரஜ் பாண்டே.34 வயது இளைஞர். மொத்த படப்பிடிப்பையும் 28 நாட்களில் நடத்தி முடித்திருக்கிறார். நசுருதீன் ஷா, அனுபம் கேர் போன்ற சீனியர் நடிகர்கள் முதல் முறை இயக்குனராக பணி புரியும் நீரஜ் போன்றவரின் பேச்சை ஒரு முறை கூட உதாசீனப்படுத்தாமல் நடித்து கொடுத்தார்களாம். தமிழில் இந்த பிரச்சனை இல்லை. ஏனென்றால் படத்தை இயக்குவதும் கமல் என்றே நினைக்கிறன்.

நசுருதீன் ஷாவின் நடிப்பை விவரிக்க வார்த்தைகள் இல்லை. கொஞ்சம் கூட மிகைப்படுத்தப்படாத நடிப்பு. அனுபம் கேர் அவர்களின் நடிப்பை பற்றி கூற வேண்டிய அவசியமேயில்லை.எத்தனையோ படங்களில் பார்த்திருக்கிறோம்.ஆனால் இந்த படத்தை பொறுத்த வரை அவரை விட நசுருதீன் ஷா அவர்களின் கதாபாத்திரத்திற்கு நடிப்பதற்கான வாய்ப்பு அதிகம். கதையை நான் இங்கு கூற விரும்பவில்லை.DVD வாங்கி படத்தை பார்த்து அதை தெரிந்து கொள்ளுங்கள்.

Kamal's A Wednesday