Tuesday 5 January 2010

அஞ்சா நெஞ்சன் அஞ்சலாமா?

அஞ்சா நெஞ்சன், மதுரை அண்ணன், வாழும் மகாத்மா அழகிரி சவால் விட்டு டெல்லிக்கு போன கதை எல்லோருக்கும் தெரியும். அங்கே அவர் எப்படி செயல் 'படுத்துகிறார்?'

அவருக்கு ஆங்கிலம் தெரியாது , இந்தியும் தெரியாது, அதனால் அவர் தன் துறை சம்பந்தப்பட்ட விவாதத்தில் கூட பதில் கூற அவைக்கு செல்ல முடியவில்லை / செல்லவில்லை. ஆங்கில பயத்தினால் இந்த கூத்து..

தமிழில் பதில் அளிக்க அனுமதிக்க வேண்டும் என்று சபாநாயகரிடம் கேட்டு இருக்கிறார், இன்று சபாநாயகர் அது தொடர்பாக பேச விரும்பினால் கூட அழகிரி கிடைக்கவில்லை (சபாநாயகரிடம் ஆங்கிலத்தில் பேச வேண்டுமே அதனாலா தெரியவில்லை :-) ).

ஆங்கிலம் தெரியாமல், தனது தாய்மொழி மட்டுமே தெரிந்த லல்லு பாராளுமன்றத்தில் நன்கு செயல்பட முடியும்போது, அதே நாட்டில் பிறந்த இன்னொரு மனிதர் வேறு மொழி கற்க வேண்டுமா என்றெல்லாம் கேள்வி எழுந்தாலும்...

அஞ்சா நெஞ்சன் ஆங்கிலத்திற்கு பயப்படும்போது சிரிப்பதா இல்லை , எம்.பி பதவிக்கு தகுதியான ஆட்களை அனுப்ப முடியாத நாட்டின் அரசியல் நிலையை எண்ணி கோபப்படுவதா என்று தெரியவில்லை...