Thursday 23 April 2009

"கொஞ்சமாவது பீல் பண்றானா பாரு..."

இந்தியா ஒரு sub continent என்று சொன்னது பொய்யே இல்லை. ஒவ்வொரு மாநிலமும் ஒவ்வொரு நாடகாத்தான் தெரிகிறது.பீகாருக்கு ஒரு நக்சலைட் அப்படின்னா தமிழ்நாட்டுக்கு இலங்கை பிரச்சினை, டெல்லிக்கு பாக் பயங்கரவாதிகள்.. ஆக ஒவ்வொரு இடத்துக்கும் ஒவ்வொரு பிரச்சினை, டெல்லி குண்டு வெடிப்புக்கு தமிழ்நாட்டு மனிதர்களுக்கு கவலையே கிடையாது, இலங்கையில் என்ன நடக்கிறது என்றே வட இந்தியனுக்கு தெரியாது..

பீகாரிலும் ஜார்கண்டிலும் நக்சலைட்டுகள் ஒரு ரயிலையே சிறைபிடித்து வைத்து இருக்கின்றனர் (பின்னர் விடுவித்தும் விட்டார்கள்..) அது எந்த மாதிரியான அதிர்வலையை இங்கே உண்டாக்கியது? ஒன்றுமே இல்லை.

இன்னும் நக்சலைட் என்னதான்யா பண்ணுவான்? ஒரு ரோஷம் வேணாம்? நல்ல காலம் ஏதோ சில அதிகாரிகள் போய் ரயிலையும் ரயில் பயணிகளையும் மீட்டு கொண்டு வந்து இருக்கிறார்கள், (ஆமாம் இந்த மாதிரி நெருக்கடியான சந்தர்பங்களில் அரசியல்வாதிகள் கிட்டேயே வருவதில்லையே ஏன்?) , அந்த நக்சலைட்டும் அந்த ரயிலையும் அந்த 1000 பயணிகளையும் வைத்துக்கொண்டு என்ன செய்ய நினைத்தார்களோ?

நக்சலைட்டுகளுக்கு ஒரு வார்த்தை...டேய் கூமுட்டைகளா இனிமேல் லோ பட்ஜெட்டில் ரயிலை கடத்தாதிங்கடா ... மும்பை தாக்குதல் மாதிரி ஒரு ரேஞ்சா ஒரு அமைச்சரை ஒரு முதல்வரை ஒரு பிளேனை கடத்துங்கப்பா.. அப்போதான் உண்மையிலேயே நம்ப ஆளுங்களுக்கு தெரியும் நம்ப NDTV CNNIBN TIMESNOW மாதிரியான ஆளுங்க பேயாட்டம் ஆடி ஏதாவது பண்ணுவாங்க.

ஒரு வகையில் இந்த indolent behavior மட்டுமே இந்தியாவில் ஒரு நாடாக காப்பாற்றி கொண்டு இருப்பதாக தோன்றுகிறது.

ஒரு லெவெலுக்கு மேலே சண்டை போடறவங்களுக்கும் என்ன செய்யறது அப்படின்னு தெரியறது இல்லை.இது ஒரு வகையில் ஒரு திகைப்பை
தீவிரவாதிகளின் மனதில் விதைக்கிறது, அவர்கள் இதன் மூலமே பலவீனமடைகிறார்கள்.ஒரு படத்தில் வடிவேலு சொல்லுவார் "சீக்கிரம் அடிச்சிட்டு போ எனக்கு வேலை இருக்கு..." அப்படிதான் இருக்கு நம்ப நாடு.

Tuesday 21 April 2009

Oracle Acquires Sun

Apart from the Economic Times most of the Indian newspapers did not attach much importance to this news. Oracle has announced yesterday that it will acquire Sun for approximately $7.4 billion, after the Sun/IBM deal fell through last week. Oracle in the past has acquired companies like Peoplesoft, BEA and Siebel.

There are substantial long-term strategic customer advantages to Oracle owning two key Sun software assets: Java and Solaris. Java is one of the computer industry's best-known brands and most widely deployed technologies, and it is the most important software Oracle has ever acquired. Oracle Fusion Middleware, Oracle's fastest growing business, is built on top of Sun's Java language and software. Oracle can now ensure continued innovation and investment in Java technology for the benefit of customers and the Java community.

Yesterday, Oracle chief executive Larry Ellison said the Sun acquisition would help his company secure a leading role in the making of "middleware" programs that link databases with a variety of business and consumer applications. "As a result of this acquisition, Oracle can increase the investment in Java technology that is so critical to our continued success in middleware," Ellison said.

He also said Sun's Sparc computers running Solaris Unix are already the most popular platform among Oracle's database customers. Ellison said engineers at the merged company would be able to redesign their hardware and software to make them work together more efficiently than before.

Sources: Economic Times, Boston, Sun, Oracle

Monday 20 April 2009

புலிகளின் கொ.ப.செ

-பிரபாகரன் எனது நண்பர். நான் தீவிரவாதி இல்லை.
-பிரபாகரன் குழுவை சேர்ந்தவர்கள் தீவிரவாதத்தை நம்புபவர்கள். ஆனால், அது பிரபாகரனின் குற்றம் இல்லை.
-பிரபாகரனை நான் தீவிரவாதியாக பார்க்கவில்லை.
-பிரபாகரன் மரணமடைந்தால் நான் வருத்தப்படுவேன்
-புலிகளின் இலக்கு சரியே ஆனால் அதற்கு அவர்கள் தேர்ந்தெடுத்த வழி தவறு.

இதையெல்லாம் சொன்னது நெடுமாறனோ, வைகோவோ அல்லது நார்வே அமைதி பேச்சுவார்த்தை குழுவோ இல்லை. நம் மாநில முதல்வர், தமிழினத் தலைவர் கருணாநிதி NDTV தொலைக்காட்சிக்கு நேற்று அளித்த பேட்டி இது. இதற்கு காங்கிரஸ் கட்சியின் கபில் சிபல் "அது கருணாநிதியின் சொந்த கருத்து என்று கூறியிருக்கிறார்". வைகோ, சீமான் போன்றவர்கள் இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக கைது செய்த தி.மு.க அரசு தன் கட்சியின் தலைவர் பேசியதை எந்த வகையில் சேர்க்கும்?

மேலும், புலிகளை ஆதரித்த திருமாவை காங்கிரஸ் கூட்டணியில் சேர்க்கவே யோசித்தது. ஆனால், பிரபாகரன் எனது நண்பர் என்று சொல்லும் ஒரு மாநில முதல்வருடன் வெட்கமே இன்றி கூட்டணி வைத்துக்கொண்டு தேர்தலில் போட்டியிடுகிறது. மக்களை எப்படியெல்லாம் ஏமாற்றுகிறார்கள் இவர்கள்? இவர்களிடம் இருந்து எப்போது விடிவுகாலம் நமக்கு?

Sunday 19 April 2009

சாருவும் தேர்தலும்.

அன்புள்ள சாருவிற்கு,

49-O குறித்து உங்களின் எதிர்வினை மிகவும் மிகவும் தவறான நிலைப்பாடு.நீங்கள் உங்கள் பதிலில் அரசியல்வாதியை பற்றி கொலைகாரர்கள் , கொள்ளைகாரர்கள் , பயங்கரவாதிகள் என்றெல்லாம் குறிப்பிட்டு இருந்தீர்கள் , எதையும் யாரும் மறுக்க முடியாது, ஆனால் ஜனநாயகத்திற்கு மேலான ஒரு அமைப்பை உலகம் இன்னும் காணவில்லை.

ஒரு அமைப்பை (system) எதிர்ப்பவர் அதனினும் மேலான ஒரு அமைப்பை காட்டியே இப்போதுள்ள அமைப்பை எதிர்க்க வேண்டும், அது இல்லாமல் மிக விரக்தியான மன நிலையில் வோட்டு போடாமல் இருப்பது நீங்கள் சொன்ன அதே அரசியல்வாதிகளுக்கு துணை போவது போல் இல்லையா?

இதனை மற்றவர் யாரவது சொல்லலாம் ஆனால் எழுத்தாளராகிய நீங்கள் சொல்லக்கூடாது.

உங்களை போன்றவர் ஜனநாயகத்திற்கு மேல் நம்பிக்கை இழக்க கூடாது.இந்த சிஸ்டத்தை உள்ள கெட்டவைகளை களைவதை பற்றியே நீங்கள் எழுதவேண்டுமே (நீங்கள் மாயாவதியை பற்றி எழுதியதை போன்று..best among the worst) தவிர வோட்டு போட மாட்டேன் என்று கூறுவது மிகவும் தவறு.

நீங்கள் இருக்கும் மைலாப்பூர் தென்சென்னை தொகுதி.தென்சென்னை தொகுதியில் சரத்பாபு என்ற ஒருவர் இந்த நாடளுமன்ற தேர்தலில் சுயேட்சையாக நிற்கிறார் , இவர் யார் என்றால் IIM-இல் MBA படித்துவிட்டு மிகப்பெரிய MNC வேலைகளை விட்டுவிட்டு சொந்தமாக உணவு தயாரித்து விநியோகிக்கும் தொழிலை செய்கிறார், அதனை வெற்றிகரமாகவும் செய்கிறார், இவர் மிகவும் ஏழ்மையான குடும்ப சூழ்நிலையில் இருந்து வாழ்ந்து வந்தவர்.தென்சென்னை தொகுதியில் நிற்கும்

சரத்பாபு பற்றி மேலும் அறிய,
http://idlyvadai.blogspot.com/2009/04/2009_15.html
http://sarathbabu.co.in/in/

எனக்கு தெரிந்து இவர் ஒருவர், தெரியாமல் எத்தனையோ பேர் ராமர் பாலத்தின் அணிலை போல செயல்பட்டுக்கொண்டுதான் இருக்கின்றனர்.

இவர் எந்த நம்பிக்கையில் தேர்தலில் நிற்கிறார்? நம்மை போன்றவர்களை நம்பித்தான். இந்த நேரத்தில் இவர் தேர்தலில்

ஜெயிப்பார் என சொல்வது ஒரு joke ஆனால் நம்பிக்கை இழக்காமல் இவரை இவரை போன்றவர்களை ஆதரிக்க வேண்டும், இன்று, இல்லாவிட்டால் நாளை இல்லை மற்றொரு நாள் விடிந்தே தீரும், ஆனால் அதற்கு நாம் எல்லோரும் வோட்டு போட வேண்டும்.

நீங்கள் ஒரு நக்சலைடாக இருக்க கூடாது, என் என்றால், என்னை பொறுத்தவரை தனி மனித உரிமைகள்தான் எல்லாவற்றிலும் முக்கியமானது , கம்யுனிசத்தில் அதற்கான உத்தரவாதம் மிகவும் குறைவு, நீங்கள் சொல்லும் நக்சல்பாரிகள் ஆட்சி செய்தால் charuonline-இல் நீங்கள் எழுதுவதை கூட எழுத முடியுமா என்பதே சந்தேகம்தான்.

ஆகையால் 49-O பற்றி ஆதரித்தோ எதிர்த்தோ எழுதுங்கள் தயவு செய்து ignore செய்துவிடாதீர்கள். அதே போல் அதை விட மேலான ஒரு tool இருந்தால் அதனை பற்றி எழுதுங்கள், இதனால் மாற்றம் வந்துவிடுமா என்பதை பற்றியெல்லாம் நினைக்காமல் எழுதுங்கள்.ஏன் என்றால் எந்த நிலையிலும் நம்பிக்கையை கைவிடக்கூடாது, போராட்டத்தை கைவிட கூடாது.

இந்தியாவில் உள்ள Human Rights activist-கள், RTI-activits-கள் எந்த நம்பிக்கையில் உள்ளனரோ , அதே நம்பிக்கையில் நாமும் இருப்போம்.