Saturday 23 May 2009

Katbadhar ஒரு அளகான தெலுங்கு tupping...

நான் பல ஆண்டுகளாக தமிழ் பத்திரிக்கைகள் படிக்கிறேன் ஆனால் எனக்கு தெரிந்து யாரும் தமிழ் மொழியின் பலவீனம் மற்றும் demerits பற்றியோ அதை களைவதை பற்றியோ பேசியதே இல்லை , பெரியார் மட்டும் கொஞ்சம் பேசி ஐ என்ற எழுத்தை அய்யாவில் வருவதை போல் மாற்றி அமைத்தார்.

நான் கண்ட வரையில் தமிழில் படித்தால் பல சொற்களின் உண்மையான உச்சரிப்பு தெரிவதில்லை, அதில் முக்கியமான வார்த்தைகள்

ka மற்றும் கச
sa மற்றும் jha
ta மற்றும் da

உதாரணமாக godfather என்ற இங்கிலீஷ் வார்த்தையை தமிழில் எழுதினால் காட்பாதர் என்று இருக்கும் இதை படிக்கும்போது

Godfather , gadpadhar, katpathar,katfathar,kattupaadhar (ஏதோ சித்தர் பெயர் போல...) என்று பலவாறு படிக்க முடியும்.

இதே கதைதான் ta மற்றும் da எழுத்துக்களுக்கும்,

Darwin theory என்பதை தமிழில் எழுதினால் டார்வின் தியரி என்று வரும். இதனை tarwin deory, tarwin theory,darwin theory அல்லது darwin dheory என்று படிக்கலாம். Dubbing படங்களை tupping படங்கள் என்று சொல்வோர்தான் அதிகம்.

ஏற்கனவே இருக்கும் இந்த குறைகள் போதாதென்று தனித்தமிழ் என்று ஒரு வாதம், இருக்கும் மொழியை பலப்படுத்துவதை விட சாகடிப்பதென்று முடிவு செய்த சொத்தை வாதம். இந்த தனித்தமிழில் ஜா , மற்றும் சா போன்ற எழுத்துக்களுக்கு வித்தியாசம் கிடையாது ,

ஷா என்றே எழுத்தே கிடையாது , ஹா என்ற எழுத்தும் கிடையாது. வடமொழி வேண்டாம் என்றால் தமிழிலேயே அதற்குண்டான எழுத்துக்களை கொண்டு பேச எழுத முடியவேண்டும் இல்லையென்றால் இருப்பதில் உள்ள வசதிகளை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

பல ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தின் கவர்னராக இருந்தவர் k.k.shaa அவர் தி.மு.க அபிமானி கூட, அப்போது இந்த தனித்தமிழ் உச்சத்தில் இருந்த நேரம், அதை கிண்டல் செய்து சோ தனது துக்ளக் பத்திரிக்கையில் இப்படி கார்டூன் போட்டு இருப்பார், (அதாவது தி.மு.க கவர்னரை வரவேற்பதற்கு வைத்திருக்கும் வாசகத்தை)

கே.கே.சாவே வருக

இது போன்ற அபத்தங்கள் இருந்தாலும் தனித்தமிழை வைத்திருப்போம் என்று சொல்லுவோரை என்ன செய்வது?

இன்று உலகம் முழுவதும் ஆட்சி செய்யும் மொழிகள் ஐரோப்பிய மொழிகள் , chinease மற்றும் Japanese. இந்த மொழிகளில்தான் புதிய தத்துவங்கள், கண்டுபிடிப்புகள் வருகின்றன, எனவே தமிழை இந்த மொழிகளுடன் ஒப்பிட்டு நம்மை பலப்படுத்திக்கொள்ள வேண்டும்,அதை விட்டு மேலும் மேலும் குண்டு சட்டியில் குதிரை ஊட்டினால் யாருக்கு லாபம்? அவ்வாறு பலப்படுத்திக்கொள்ள தமிழர்கள் என்ன செய்தனர்?

தமிழ் தமிழ் என்று சொல்லும் அரசாங்கம் என்ன செய்தது?

இப்போதைக்கு நாம் செய்ய வேண்டியது பேப்பரில் எந்த புதிய சொல் என்றாலும் (பழைய சொற்களுக்கும்) அதற்கான உச்சரிப்பை ஆங்கிலத்தில் (தனியாக) எழுத வேண்டும். ஆங்கிலம் தெரியாதவர் கூட பக்கத்தில் இருப்பவரிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம்.

இது தவிர இன்னொரு விஷயம், மேற்கண்ட வார்த்தைகள் அல்லாமல் தமிழில் வேறு சில உபாதைகள் இருக்கின்றன,

ந,ன,ண போன்ற இரண்டு சுழி மூன்று சுழி எழுத்துக்கள், ல,ள போன்ற எழுத்துக்கள் , முக்கியமாக ழ,ங் போன்ற எழுத்துக்கள், ர,ற போன்ற எழுத்துக்கள் , இவை வீர மறத்தமிழரிடமே தங்கள் வேலையை காட்டும், தமிழ்கூறும் நல்லுலகில் ழ என்ற எழுத்தை ல என்று உச்ச்சரிப்பவரே பெரும்பான்மை. உழவு வேலையை உலவு வேலை என்று கூறுவதில் ஆரம்பித்து அழகை அளகு என்று கூறுவதை வரை பல கொலைகள் நடந்துக்கொண்டுதான் இருக்கின்றன.

ஆக ta-da,pa-ba,ka-gha என தேவையான வேறுபாடுகள் இல்லை ஆனால் தேவையில்லாத வேறுபாடுகளான , தமிழராலே உச்சரிக்க முடியாமல் போன வார்த்தை வேறுபாடுகள் இருக்கின்றன.

தேவையா ஆணி எது தவையில்லாத ஆணி எது என்று கேள்வி கேக்காதிங்க.அது
சற்று ஆராய்ந்தால் நமக்கே தெரியும்.

Tuesday 19 May 2009

அஞ்சலி


எவ்வளவு விமர்சனங்கள் இருந்தாலும் ஒரு உறுதியான தலைவன் , ஒரு கண்டிப்பான organizer- ஒரு வீரமான ராணுவ தளபதி இழந்தது தமிழ் இனத்தின் நிரப்ப முடியாத வெளி.

Sunday 17 May 2009

தேர்தல் 2009 - ஒரு எதிர்வினை

கோகுல்,

முதலில் பிறந்தநாள் வாழ்த்துக்கள். உன் கருத்தை முழுமையாக ஆமோதிக்கிறேன். இருந்தாலும், இதில் பணபலம் பெரும் தொண்டாற்றியது என்பது மறுக்க முடியாத உண்மை. உதாரணமாக, NDTV மாலை நான்கு மணிக்கு சிதம்பரம் தோற்றுவிட்டார் என்று தெரிவித்தது. இரவு சிதம்பரம் வெற்றி பெற்றிருந்தார். இதே தான் டி.ஆர்.பாலு நிலையும். எப்படி என்று புரியவில்லை. தே.மு.தி.க ஒரு முக்கிய கட்சியாக வளர்கிறது என்பதற்கு இந்த தேர்தல் ஒரு அடையாளம். பா.ம.க போட்டியிட்ட ஏழு இடங்களிலும் தோல்வி. இலங்கை தமிழரை பற்றி "mainland" தமிழர்கள் பெரிசாக அலட்டிக்கொள்ளவில்லை என்பது இந்த தேர்தல் மீண்டும் ஊர்ஜிதமாகிறது.

மத்தியில் முக்கிய துறை எல்லாம் இந்த முறை தமிழகத்திற்கு கிடைக்குமா என்பது சந்தேகம். கலைஞர் திங்களன்று சோனியாவையும் மன்மோகன் சிங்கையும் சந்திக்கிறார். அழகிரி, கனிமொழி, தயாநிதி மாறன் ஆகியோருக்கு பதவிகள் கேட்கப்போவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த தேர்தலின் மூலம் ராகுல் காந்தி பெரிய சக்தியாக உருவெடுத்துள்ளார். இடதுசாரிகள் கொல்கத்தாவில் 32 ஆண்டுகளுக்கு பிறகு பெரிய தோல்வியை சந்தித்துள்ளனர். இவர்களை நம்பி மத்தியில் ஆட்சி அமையாது என்பது ஆறுதலளிக்கிறது.

காங்கிரஸ் மீது கடந்த ஐந்து ஆண்டுகளில் தீவிரவாதம் கொஞ்சம் தலைதூக்கியது என்பதை தவிர பெரிதாக குற்றம் சொல்ல எதுவும் இல்லை. ஆனால், தீவிரவாதம் ஒரு பிரச்சனையே இல்லை. நீ சொல்வது போல் மும்பையில் ஆயிரம் பேர் செத்தால் தமிழன் கவலைப்பட போவதில்லை. அதே போல் அசாமில் ஆயிரம் பேர் செத்தால் மும்பை ஸ்தம்பிக்காது.
நல்ல படித்த பிரதமர், ராகுல், பிரியங்கா போன்ற இளங்கன்றுகள் என்று காங்கிரஸ் தன்னை நன்றாகவே project செய்தது. குறிப்பாக ராகுல் காந்தியின் பிரச்சாரம், உத்தர பிரதேசம் போன்ற இடங்களில் பெரிய அளவுக்கு உதவியது. ராகுல் இந்த முறை நிச்சயம் காபினெட் அமைச்சராவார்.

இந்த இமாலய வெற்றியை காங்கிரசும் எதிர்பார்க்கவில்லை. அதே போல், இப்படி ஒரு தோல்வியை சந்திக்க வேண்டி வரும் என்று பா.ஜ.க எண்ணவில்லை.ஆந்திர முடிவுகள் கொஞ்சம் அதிர்ச்சி தான். தெலுங்கு தேசம் நாலு தொகுதிகளை வென்றுள்ளது. பிரஜா ராஜ்யம் என்ன ஆனது என்று தெரியவில்லை. ஆக மொத்தத்தில், மக்கள் எதை கணக்கில்கொண்டு வாக்களிக்கிறார்கள் என்று தெரியவில்லை.

தேர்தல் 2009

எதிர்பார்த்த மாதிரியே காங்கிரசுக்கு வாக்களித்து இருக்கிறார்கள்! எனது பார்வையில் இந்த தேர்தலில் மக்கள் யோசித்தே ஒட்டு போட்டு இருக்கிறார்கள்...

-பா.ம.கவுக்கு தகுந்த இடம்.( இதன் மூலம் வட தமிழகத்திற்கும், தமிழகத்தின் ரயில்வே பணிகளுக்கும் பாதிப்புதான் , ஆனால் பொதுவாய் பார்க்கும்போது இந்த தோல்வி பா..கவிற்கு தேவையான ஒன்று)

-தமிழ்நாட்டில் காங்கிரசை ஜெயிக்க வைத்தும் தோற்க வைத்தும் இருக்கிறார்கள் , எதிர்ப்பை கட்டின மாதிரியும் ஆயிற்று , சப்போர்ட் செய்த மாதிரியும் ஆயிற்று.

-வழக்கம் போல் தமிழ்நாடு காங்கிரஸ் கூட்டணியில் முக்கிய இடம் பிடித்தாயிற்று (என்ன 2004 போல நாம் விரும்பிய அளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்த காபினட் துறை கிடைக்காது.. ஏனினில் வடக்கிலும் காங்கிரசுக்கு நல்ல பலம்)

-தி.மு.க விற்கு எதிர்பாராத வெற்றி, ஈழப்பிரச்சினைக்கு மக்கள் கொடுத்த முக்கியத்துவம் எல்லோரையும் யோசிக்க வைத்து இருக்கிறது.

-போன பதிவில் தமிழ்நாட்டின் பாவப்பட்ட நடிகர் என்று எழுதினேன், இப்போது தமிழ்நாட்டின் பாவப்பட்ட அரசியல்வாதியாக வை.கோவை சொல்லலாம் என்று தோன்றுகிறது.

-ஜெ.கே.ரீதிஷ் ஜெயித்து இருக்கிறார் , வைகோ தோற்று இருக்கிறார், இப்போவே கண்ணை கட்டுதே....

-சிதம்பரம் செய்தது தனிக்கதை, தோற்று அதன் பிறகு ஜெயித்து இருக்கிறார் , இதற்க்கு கோர்ட்டில் கேஸ் போடுவார்கள் என்று எதிர்பார்க்கிறேன் , பார்ப்போம். ஒரு வகையில் அராஜகமாகத்தான் தெரிகிறது, விவரம் தெரியவில்லை

-எல்லோரையும் விட பெரிய ஆப்பு மெகா ஸ்டார் சிரஞ்சீவி வாங்கியதுதான், முதல் நாள் வரை ஆட்சி அமைக்க முடியும் என்று நினைத்துக்கொண்டவரை சொந்த தொகுதியிலேயே மூன்றாவதாக வரச்செய்து விட்டார்கள். இனிமேலயும் கூட்டம் கூடின நம்பாதிங்கப்பா.

-தெளிவாக மாயாவதி, லாலு, சி.பி.எம், முலாயம், ராம் விலாஸ் பஸ்வான், போன்றவர்களுக்கு செய்தி சொன்ன மக்களுக்கு சலாம்.

-அடுத்து நாம் பார்க்க வேண்டியது மத்திய அமைச்சரவையில் அழகிரி, ப.சிதம்பரம், தயாநிதி மாறன் , போன்றவர்களுக்கு என்ன பதவி கிடைக்கும் என்பதுதான். இந்த லிஸ்டில் ஜெ.கே.ரீதிஷ் அவர்கள் இடம் பெறுவாரா என்பதை அறிய ஆவலாய் இருக்கிறேன்.

-புரட்சி தலைவியை இந்த அளவிற்கு நோகச்செய்த புரட்சி கலைஞருக்கு ஒரு ஜெ ,, ஆங்... (கேப்டன் பாணியிலேயே படிக்கவும்)

- மத்தியில் பா.. தோல்வியை ஏற்றது போன்று ஜெயலலிதாவும் நாகரீகமாகஏற்று இருக்கலாம், பணநாயகம் வென்று விட்டது என்று ஒரு சொதப்பல் statement.

-மக்கள் கொடுத்தது தெளிவான தீர்ப்பு, தமிழனாய் ஒரே வருத்தம் தமிழகத்தின் முக்கியத்துவம் அகில இந்திய அளவில் குறையும் , ஏனினில் hindhi belt என சொல்லப்படும் ஏரியாவிலேயே காங்கிரசுக்கு நல்ல come back. ஆனால் இந்தியாவிற்கு இது நல்லதே.