தெலுங்கானாவை பற்றி எழுத வேண்டும் என்று சில நாட்களாகவே எண்ணி இருந்தேன், குழப்பம் முடியட்டும் என்று நினைத்திருந்தேன் முடிகிற வழியாக தெரியவில்லை....
இப்போது தெலுங்கானாவை எதிர்ப்பவர்கள் ஏன் இதை எதிர்க்கிறார்கள் என்று தெரியவில்லை? எதிர்க்கும் ஆந்திர மக்கள் அனைவரும் ஹைதராபதிற்க்காகவே எதிர்க்கிறார்கள். அங்கே கொட்டி இருக்கும் பல கோடிகள் 'கை விட்டு' போய்விடுமோ என்றே எதிர்க்கிறார்கள். அந்த கோடிகள் எப்படி 'கைவிட்டு' போகும் என்று யாரும் கேட்கபோவது இல்லை, அந்த கேள்விக்கான பதிலை "வேலை வாய்ப்புகள், வியாபார வாய்ப்புகள்" என்றெல்லாம் பூசி மெழுகி பேசுகிறார்கள்.
தெலுங்கானாவை கேட்பவர்கள் தனி நாட்டை கேட்கவில்லை தனி மாநிலம்தான் கேட்கிறார்கள்.ஆனால் நாட்டை கேட்கும் அளவிற்கு ஒரு பதற்றம் நிலவுகிறது. ஹைதராபாத் வளர்ந்தது 90-களின் இறுதியில்தான் ஆனால் 1960-களில் இந்த அளவிற்கு வளராமல் இருக்கும்போதே ஆந்திரா அரசியல்வாதிகள் தெலுங்கானாவை ஆதரிக்கவில்லை.அதற்கு காரணம் அலட்சிய மனோபாவமே, அதாவது வீட்டில் படிக்காத, அந்தஸ்தில் குறைந்த தம்பியை பார்க்கும் அண்ணனாகதான் ராயல்சீமாவும், ஆந்திராவும் தெலுங்கானாவை பார்த்தன.
பாண்டிச்சேரி தமிழகத்துடன் சேராமல் ஏன் தனித்து இருக்கிறது? கோவா ஏன் ஒரு மாநிலமாக இருக்கிறது? இதற்கு பதில் சொன்னால் அந்த பதில் தெலுங்கானவிற்கும் பொருந்தும்.
இன்று சிறிய மாநிலம் சரியாக வராது என்று சொல்பவர்கள் ஜார்க்கண்டை உதாரணமாக சொல்பவர்கள் உத்தராஞ்சலை கொஞ்சம் பார்க்கலாம். ஜார்க்கண்டை பொறுத்தவரை ஏற்கனவே நாறிக்கொண்டு இருந்த பீகாரில் இருந்து அதிகம் முன்னேறாத பகுதியான (பிகாரிலேயே மோசமான பகுதிகள்) ஜார்க்கண்டை பிரித்தார்கள் , இப்போது மோசமானதாக தெரிந்தாலும் அந்த பிரிவு பீகாருக்கும் ஜார்க்கண்டுக்கும் தொலைநோக்கில் நல்லதே.
இந்த தெலுங்கான பகுதியை ஆண்ட நிஜாம் 1940-களில் உலகிலேயே பெரிய பணக்காரராக இருந்து இருக்கிறார்? வைரங்களும், கோமேதங்களும் அவர் பொக்கிஷத்தை அலங்கரித்தன. சுமார் 22,000 வீரர்கள் அடங்கிய படை வைத்து இருந்தார். அவர் எப்படி அவ்வளவு பெரிய பணக்காராக இருக்க முடிந்தது? அதற்க்கான பதில் தெரிந்தால் இன்றைய தெலுங்கானாவின் வறுமையின் காரணம் தெரியும். காந்தியும் நேருவும் இந்திய அரசியலை மாற்றிக்கொண்டு இருந்த போது, நிஜாம் 4 மனைவிகளுடன் மற்றும் சுமார் 42 ஆசை நாயகிகளுடன் குஷாலாக இருந்து இருக்கிறார். பொதுவுடைமை , ஜனநாயகம் என்றெல்லாம் இந்தியா மாறிக்கொண்டு இருக்கும் சமயம் நிஜாமின் ஒவ்வொரு பிறந்த நாளுக்கும் நிஜாமின் தாயார் அவருக்கு அழகிய பெண்களை பரிசளித்து கொண்டு இருந்தார். இதை சொல்வது நிஜாமை
குறை சொல்வதற்கு அல்ல , தெலுங்கானாவை புரிந்து கொல்வதற்கு. 1948-வரை நிஜாம் வாழ்ந்தது ஒரு 13-ஆம் நூற்றாண்டு வாழ்வை! தனிப்பட்ட வாழ்க்கை மட்டுமல்லாமல் அவரின் ராஜ்ஜியத்தையும் அவர் 13-ம் நூற்றாண்டில் வைத்து கொண்டு இருந்ததுதான் இங்கே கவனிக்க வேண்டிய விஷயம், நிஜாம் ஆட்சி செய்த தெலுங்கானா பிதார் (கர்நாடகா) என்று பிரிட்டிஷார் நுழையாத இடமெல்லாம் இன்று பின்தங்கிய இடங்கள் , வறுமை நிறைந்த மாவட்டங்கள்.எப்படி பதிமூன்றாம் நூற்றாண்டில் வரிவசூளிப்பது மட்டும்தான் மன்னனின் வேலை என்றும், அதற்கு மேல் அவன் கருணை இருந்தால் சில குளங்களை வெட்டுவது போதும் என்ற நிலை இருந்ததோ அதே நிலைதான் ஹைதராபாதில் இருந்தது. அப்படிப்பட்ட மக்களை நன்கு முன்னேறிய , ஆங்கில கல்வி கற்ற ஆந்திர மக்களுடன் போட்டி போட சொன்னது மிகப்பெரிய கொடுமை.
இறுதியாக மத்திய அரசை குறை சொல்கிறார்கள், நான் அப்படி நினைக்கவில்லை, மத்திய அரசு மிகவும் புத்திசாலிதனமாக நடந்து கொண்டு இருக்கிறது.மத்திய அரசு சொல்வதெல்லாம், " ஆந்திர சட்டசபை தீர்மானம் நிறைவேற்றினால் மட்டுமே அடுத்த கட்ட நடவடிக்கை" என்று தெளிவாக இருக்கிறது, ஆந்திர சட்டசபையில் தீர்மானம் நடத்துவது என்பது
குதிரை கொம்புதான்.. இதன் மூலம் மத்திய அரசு ஒரு நெருக்கடியை கூடுமானவரை கட்டு படுத்தி இருக்கிறது, நரசிம்ம ராவ் இருந்து இருந்தால் இந்த பிரச்சினையை அடுத்த 150 வருடங்கள் தள்ளி போட்டு சமாளித்துஇருப்பார்!
இன்று தெலுங்கானவிற்கு தேவையானது எல்லாம் தனி மாநிலம், திறமையான ஐ.யே.எஸ் அதிகாரிகள் , மத்திய அரசின் நிதி மற்றும் அந்நிய முதலீடுகள், போட்டி உண்ணாவிரதங்கள் அல்ல.
Wednesday, 16 December 2009
Thursday, 10 December 2009
தெலுங்கானா நாடகம்
ஆக,தெலுங்கானா தனி மாநிலமாக உருவாக்கப்படும் என்று சிதம்பரம் நேற்றிரவு அறிவித்துவிட்டார். உடனே KCR தனது பதினோரு நாள் உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டு விட்டார். இப்போது பிரச்சனை ஹைதராபாத் தெலுங்கானா மாநிலத்தில் சேருமா இல்லையா என்பது தான். ஹைதராபாத் இல்லாத தெலுங்கானா தேவையில்லை என்கிறது TRS(Telungaana Rashtriya Samithi). என்ன நடக்கிறது என்று பொறுத்திருந்து பார்க்கலாம். இது சரியா தவறா என்ற ஆராய்ச்சியில் இறங்குவது வீண். சுதந்திரம் வாங்கியவுடன் இந்தியாவை மொழி வாரியாக பிரிக்க வேண்டும் என்ற முடிவின் விளைவை
தான் நாம் பார்த்துக்கொண்டு இருக்கிறோம்.
இனி மற்ற மாநிலங்களிலும் இந்த ஓசை கேட்கும். காஷ்மீர் விஷயத்தில் தெலுங்கானா முன்னுதாரணமாக காட்டப்படும். ஒரிசாவை சேர்ந்த எனது நண்பர் ஒருவர் நேற்று சொன்னார் "எங்க ஊரும் இப்படிதான். புவனேஸ்வர்,கட்டாக் போன்றவை வளர்ச்சி காண்கின்றன. ஆனால், ஒரிசாவின் மற்ற பகுதிகளில் அந்த வளர்ச்சி இல்லை. ஆகையால், இப்படி ஒரு தனி மாநில அந்தஸ்து கேட்டு ஒரிசாவிலும் போராட்டம் தொடங்கும் என்று நினைக்கிறேன்". இந்த தனி மாநில விஷயத்தை ஆரம்பித்து வைத்த தமிழ்நாட்டு மக்களான நாங்கள் என்ன சும்பன்களா? "அடைந்தால் திராவிட நாடு அடையாவிட்டால் சுடுகாடு" கோஷத்திற்கு மீண்டும் உயிர் கொடுப்போம். மொத்தத்தில் நாடு துண்டாகும்.
இதனால் ஒரு நன்மை நடக்கலாம். LET(Lashkar E Toiba), Indian Mujahideen போன்ற அமைப்புகள் தங்கள் வேலை சுலபமாயிற்று என்று தங்கள் தீவிரவாத நடவடிக்கைகளை கொஞ்சம் தளர்த்தலாம். நமக்கு நாமே குழி தோண்டிக்கொள்ளும் போது, வெளியில் இருந்து எதற்கு அதை செய்யப் போகிறார்கள்?
ஆனால்,TRS தலைவர் KCR ஒரு விதத்தில் பாராட்டப்பட வேண்டியவர். ஆந்திராவே YSR மறைவு, ஜகன் ரெட்டி பிரச்சனை என்று குழப்பத்தில் கிடக்க ஒரே உண்ணாவிரதத்தின் மூலம் அந்த ஊரே தன்னை பார்க்கும் படி செய்தார். "தூள்" படத்தில் அமைச்சர் உண்ணாவிரதம் அறிவிப்பார், அந்த காட்சி தான் நினைவுக்கு வருகிறது.
ஜெய் ஹிந்த்

Wednesday, 2 December 2009
டிசம்பர் சங்கீத சீசன்
சென்னையில் டிசம்பர் சங்கீத சீசன் களை கட்ட துவங்கிவிட்டது. மயிலாப்பூர் பைன் ஆர்ட்ஸ், மியூசிக் அகாடமி போன்ற சபாக்கள் இன்னும் தங்கள் மார்கழி மாத நிகழ்ச்சிகளை வெளியிடவில்லை ஆனால் பெரும்பாலான சபாக்கள் நேற்றைய நாளிதழ்களில் தங்கள் அரங்கில் நடக்கவிருக்கும் நிகழ்ச்சிகளை தேதிவாரியாக வெளியிட்டுள்ளன.
டி.எம்.கிருஷ்ணா, பாம்பே ஜெயஸ்ரீ, நித்யஸ்ரீ, சஞ்சய் சுப்ரமணியம், உன்னிகிருஷ்ணன் போன்ற பெரிய வித்வான்/விதுஷி ஆகியோரின் கச்சேரிகளை சென்னையில் உள்ள எல்லா சபாக்களிலும் கேட்கலாம். ஆகையால் நான் அதை பற்றி எதுவும் சொல்லப்போவதில்லை. நான் கீழே குறிப்பிட்டுள்ள கச்சேரிகள் கொஞ்சம் "ஸ்பெஷல்" ரகம். நேரம் கிடைத்தால் அவசியம் செல்லுங்கள்.
சபா: மீனாக்ஷி சுந்தரராஜன் பைன் ஆர்ட்ஸ் அகாடமி
நிகழ்ச்சி நடக்கும் அரங்கம்: கோடம்பாக்கம் மீனாக்ஷி கல்லூரி K.R.S. அரங்கம்
நிகழ்ச்சி: A.K.C.நடராஜன்-கிளாரினெட்
தேதி மற்றும் நேரம்: 18-12-2009 6:30p.m
சபா: மீனாக்ஷி சுந்தரராஜன் பைன் ஆர்ட்ஸ் அகாடமி
நிகழ்ச்சி நடக்கும் அரங்கம்: கோடம்பாக்கம் மீனாக்ஷி கல்லூரி K.R.S. அரங்கம்
நிகழ்ச்சி: காயத்ரி கிரீஷ் பாட்டு, ஹரித்வாரமங்கலம் ஏ.கே.பழனிவேல் தவில்
தேதி மற்றும் நேரம்: 21-12-2009 6:30p.m
சபா: பார்த்தசாரதி சுவாமி சபா
நிகழ்ச்சி நடக்கும் அரங்கம்: வித்யா பாரதி, பீமசேனா கார்டன் ரோடு, மயிலாப்பூர்
நிகழ்ச்சி: Carnatic-Hindustani Jugalbandhi, Dr.Sriram Parasuram & Anuradha Sriram
தேதி மற்றும் நேரம்: 23-12-2009 6:30p.m
சபா: ஸ்ரீ கிருஷ்ண கான சபா
நிகழ்ச்சி நடக்கும் அரங்கம்: கிருஷ்ண கான சபா அரங்கம், தி.நகர்
நிகழ்ச்சி: டி.எம்.கிருஷ்ண பாட்டு, டி.கே.முர்த்தி & பி.சிவராமன் (இரட்டை மிருதங்கம்)
தேதி மற்றும் நேரம்: 31-12-2009 4:30p.m
சபா: ஸ்ரீ கிருஷ்ண கான சபா
நிகழ்ச்சி நடக்கும் அரங்கம்: கிருஷ்ண கான சபா அரங்கம், தி.நகர்
நிகழ்ச்சி: விசாகா ஹரி, "ஸ்ரீனிவாச வைபவம்" Musical Discourse
தேதி மற்றும் நேரம்: 23-12-2009 9:30a.m
சபா: ஸ்ரீ கிருஷ்ண கான சபா
நிகழ்ச்சி நடக்கும் அரங்கம்: கிருஷ்ண கான சபா அரங்கம், தி.நகர்
நிகழ்ச்சி: திருப்பாம்பரம் சகோதரர்கள் நாதஸ்வரம், இரட்டை தவில்
தேதி மற்றும் நேரம்: 17-01-2010 6:30p.m
சபா: நுங்கம்பாக்கம் கல்சுரல் அகாடமி
நிகழ்ச்சி நடக்கும் அரங்கம்: ராமராவ் கலா மண்டப், தி.நகர்
நிகழ்ச்சி: Dr.M.Balamuralikrishna
தேதி மற்றும் நேரம்: 17-01-2010 6:30p.m
வளரும் கலைஞர்களில் கவனிக்கப்பட வேண்டியவர்கள்
நிஷா ராஜகோபால்
அபிஷேக் ரகுராம்
ரித்விக் ராஜா
இவ்வளவு எல்லாம் சொல்றியே இந்த கச்சேரிக்கெல்லாம் நீ போக போறியா அப்படின்னு கேக்கறீங்களா? நான் பனிரெண்டாம் தேதி துபாய் போயிட்டு ஜனவரி கடைசியில் தான் வரேன். அதனால இந்த சீசன் கச்சேரி எதுக்கும் போக முடியாது.

Subscribe to:
Posts (Atom)