Thursday, 19 May 2011

தேசிய திரைப்பட விருதுகள் - 2011

இன்னைக்கு அறிவிச்ச இந்த பட்டியலை பாருங்க

சிறந்த நடிகர் ௦- ஆடுகளத்துக்காக தனுஷ்(மலையாள நடிகர் சலீம் குமாருடன் விருதை பகிர்ந்து கொள்கிறார்)
சிறந்த இயக்குனர் - வெற்றிமாறன் (ஆடுகளம்)
சிறந்த துணை நடிகர் - தம்பி ராமையா (வடிவேலுவுடன் காமெடி செய்வாரே. மைனா படத்துக்காக விருது என்று நினைக்கிறேன்)

என்னப்பா நடக்குது நாட்டுல? அஜய் தேவ்கன் எவ்வளோ நல்ல நடிச்சாரு "Once upon a time in Mumbai" படத்துல, இஷ்கியா படத்துல நசுருதீன் ஷா, "Raajneethi" படத்துல மறுபடியும் அஜய் தேவ்கன், மனோஜ் பாஜ்பாய், இப்படி எத்தனையோ பேரு. தனுஷ் நல்ல நடிக்கறாரு ஆனா தேசிய விருது வாங்கற அளவுக்கு தகுதியான நடிப்பா? சைப் அலி கான் "Hum Tum" படத்துக்காக தேசிய விருது வாங்கினப்போ அவங்க அம்மா ஷர்மிளா தாகூர் தான் விருது கமிட்டி தலைவர். அதனால தான் அவருக்கு விருது அப்படின்னு நிறைய பேச்சு. இப்போ என்ன சொல்வாங்க?

Wednesday, 4 May 2011

நளினகாந்தி

இயக்குனர் பாலச்சந்தர் சிந்து பைரவி படத்தில் உதவி இயக்குனராக வேலை செய்த பாலகுமாரனிடம் சொன்னாராம், "ஒரு நல்ல சவுண்ட் சிஸ்டம் இருக்கற ஏ.சி கார். அதுல கத்ரி கோபால்நாத் சாக்ஸ் கேட்டுண்டே பிரயாணம் பண்ணனும். அந்த சுகத்துக்காக எவ்வளோ வேணாலும் உழைக்கலாம் தெரியுமோ?"."இதற்குத்தான் ஆசைப்பட்டாயா பாலகுமாரா?" புத்தகத்தில் மேலே சொன்ன வரிகள் வரும். பாலச்சந்தர் சொன்னது நூறு சதவீத உண்மை.

என் விஷயத்தில் கத்ரிக்கு பதிலாக டி.எம்.கிருஷ்ணா. தியாகையர் நளினகாந்தி ராகத்தில் அமைத்த "மனவ்யாலகிம்" கிருதியை டி.எம்.கிருஷ்ணா பாட
கேட்டுக்கொண்டு இன்று காலை வந்த போது பாலச்சந்தர் சொன்ன வரிகள் நினைவுக்கு வந்தன. இளையராஜா நளினகாந்தியை அட்சரம் பிசகாமல் உள்வாங்கி "மனவ்யாலகிம்" போலவே அமைத்த பாடல் தான் கலைஞன் படத்தில் யேசுதாஸ்-ஜானகி பாடிய "என்தன்
நெஞ்சில் நீங்காத தென்றல் நீதானா". நான் அறிந்த வரை நளினகாந்தியில் பிரபலமான திரைப்பாடல் இது தான்.

நேருக்கு நேர் படத்தில் இடம் பெற்ற "மனம் விரும்புதே", அந்நியன் படத்தில் "அண்டங்காக்கா", கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தில் ஹரிஹரன்-மகாலட்சுமி பாடிய "கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்", கற்க கசடற படத்தில் வரும் "நூதனா", ஜெயம் படத்தில் "திருவிழான்னு வந்தா" போன்றவையும் நளினகாந்தி என்றே நினைக்கிறேன்.

Sunday, 17 April 2011

The White Tiger

2008 ஆம் ஆண்டு புக்கர் பரிசு வென்ற அரவிந்த் அடிகாவின் "The White Tiger" படித்துக் கொண்டிருக்கிறேன். இது வரை படித்த பகுதிகள் முழுதும் இந்தியா மீதான தாக்குதல் தான். சில நாட்களுக்கு முன்பு தான் ஜெமோ தனது பதிவு ஒன்றில் காசியில் கங்கை ஆற்றில் பிணங்கள் மிதக்கும் என்பதெல்லாம் உண்மையல்ல என்று எழுதியிருந்தார். அதற்கு மாறாக கங்கை நோய்களின் மொத்த வடிவம் போன்ற வரிகள் இதில்.

இந்த புத்தகத்திற்கு எதற்காக புக்கர் பரிசு கொடுத்தார்கள் என்று தெரியவில்லை. புக்கர் வென்ற மற்ற இந்தியர்களான அருந்ததி ராய், சல்மான் ருஷ்டி, கிரண் தேசாய், நைபால் போன்றவர்களும் அரவிந்த் போல "india bashing" செய்து தான் அதை வென்றார்களா
என்று தெரிந்து கொள்ள அவர்களையும் படிக்க வேண்டும்.படிக்க முடியாவிட்டாலும் ஜெமோவிற்கு ஒரு மின்னஞ்சல் எழுதியாவது கேட்க வேண்டும்