Sunday 27 April 2008

கர்நாடக தமிழர்-2

இங்கே ஹிந்தி என்பது ஒரு மொழி அல்ல, அது ஒரு ஆயுதம், ஹிந்தி என்பது ஒரு அறிவு,ஹிந்தி படிப்பது என்பது இந்தியாவின் ஒட்டுமொத்த சமுதாயத்தில் சேர வைக்கும் ஒரு பாதை.எளிய பாதை, செலவில்லா பாதை. Science படிக்காதே maths படிக்காதே என்று யாரேனும் சொல்ல முடியுமா, english படிக்காதே என்று யாரேனும் சொல்வார்களா? அதே போல்தான் ஹிந்தியும்.

இன்று பள்ளி இறுதி வகுப்பு வரை படித்த ஒருவன் அவன் (தமிழகத்தை தவிர) எந்த மாநிலத்தை சேர்ந்தவனாக இருந்தாலும் சரி, அவன் இந்தியாவில் எந்த நகரத்திலும் வேலை செய்ய முடியும், காரணம் ஹிந்தி.

நரசிம்மன், கோபால் போன்ற பெயர்களில் உள்ள குழப்பம் கன்னடர்களுக்கு செந்தில், இளங்கோ, அருள் போன்ற பெயர்களில் இல்லை. தெளிவாக தெரிந்து,அறிந்து போட்டு தாக்கி விடுகிறார்கள்.இங்கே அக்ரகாரத்திலும் சவுகார் பேட்டையிலும் செய்ததை மேலும் வண்மையாக்கி வாட்டாள் நாகராஜ் செய்து விட்டான்.

தமிழன் என்றொரு இனமுண்டு தனியே அதற்கொரு குணமுண்டு என பேசியும் எழுதியும் தமிழர்கள் இந்தியாவில் தனிமைப்படுத்தபட்டது வெளியே தெரியாத வரலாறு.உண்மையில் இந்த கருத்து பிரச்சாரத்திற்கு அடிபட்டது வழக்கம் போல விளிம்பு நிலை மக்களே.

அதே போல் தமிழகத்தில் இருக்கும் கன்னடர்களின் சொத்து மதிப்பு, கர்நாடகாவில் இருக்கும் தமிழர்களின் சொத்து மதிப்பை ஒப்பிட்டு பார்த்தல் மிகவும் குறைவு என்று தெரியும்.

தமிழ்நாட்டில் மொழி அபிமானம் போய் மொழி வெறி வந்து இருக்கிறது.அந்த மொழி வெறியினால்தான், பிற மொழி படங்கள் தமிழில் ஓடுவதில்லை. உதாரணமாக, தெலுங்கில் வெற்றி பெற்ற போக்கிரியை அப்படியே டப் செய்தால் இங்கே நாய் கூட சீண்டாது ஆனால் அதையே scene by scene காப்பி அடித்து விஜய் நடித்தால் 250 நாட்கள் வூடு கட்டி ஓடும்.உண்மையில் நாமும் தெலுங்கு படங்களை ஆதரிப்போமனால் திரைப்பட சந்தை இருமடங்காகும். ஏறக்குறைய இந்த இரண்டு திரை உலகங்களும் ஹிந்தி பட உலகிற்கு சவால் விடலாம்.

இதுவே ஆந்திரத்தில் இந்த நிலைமை இல்லை, அங்கே தமிழ் படங்களை அப்படியே ரசிக்க கற்று கொண்டு இருக்கிறார்கள்.

ஆந்திரத்தில் தமிழர்கள் மிக மிக குறைவு, ஆனாலும் ஆந்திராவிலும் தமிழர்கள் அடிவாங்கும் நாள் வெகு தூரத்தில் இல்லை.

No comments: