Monday, 14 April 2008

தசாவதாரம் - இன்னொரு ஆளவந்தான்?

கமலின் தசாவதாரம் அளவிற்கு அதிகமான விளம்பரத்தை தேட முயற்சிக்கிறது. கமல் ரஜினியின் சிவாஜியை பார்த்து சூடு போட்டுக்கொள்ள வேண்டாம் என யாரவது கமலுக்கு எடுத்து சொல்ல கூடாதா?

கமல் ஏற்கனவே ஆளவந்தானில் கெட்ட பெயர் சம்பாதித்து இருக்கிறார். கமலுக்கு உலக சினிமா அனைத்தும் தெரிந்து இருந்தாலும் கமலால் ஒரு பக்கா தமிழ் commercial படம் எடுக்கவே முடியாது, ஒரு விஜய் படம் போலவோ அல்லது ஒரு ரஜினி படம் போலவோ ஒரு விஜயகாந்த் படம் போலவோ அவரால் எடுக்கவே முடியாது (கமல் படங்கள் வித்தியாசமானவை, தரத்தில் உயர்ந்தவை என்பதெல்லாம் வேறு), எப்படி மற்றவர்களால் கமல் போல் செய்ய முடியாதோ அதே போல் கமலாலும் மற்ற ஹீரோக்களை மாதிரி செய்ய முடியாது இதுவே நிஜம்.உதாரணம் சிங்காரவேலன்,சத்யா,கலைஞன்,காதலா காதலா போன்ற படங்கள்.

கமல் மனதளவில் hollywood-ல் இருப்பதாகவே கற்பனை செய்து கொள்கிறார், serious படம் இல்லையென்றால் படம் முழுக்க நகைச்சுவை, எல்லாம் சேர்ந்த கலவையே தமிழ் commercial அதை அவர் நினைத்து கூட பார்ப்பது இல்லை.

கமல் சொந்த ஈகோவிற்காக பணத்தை செலவழிக்கிறார். கமலால் ஒரு super duper hit (சந்திரமுகி, சிவாஜி போல) கொடுக்கவே முடியாது, தசாவதாரத்தின் பட்ஜெட் அதிகரிக்க அதிகரிக்க அது தோல்வி படம் என்பது நிச்சயம் ஆகிவிடுகின்றது, அது சுமாராக ஓடினால் கூட!

ரஜினி கூட ஷங்கர் படம் என்பதாலேயே அவ்வளவு hype கொடுக்க சம்மதித்து இருப்பார்.

கமலுக்கேன்று ஒரு பாணி இருக்கின்றது, அவர் சத்தம் போடாமல் வித்தியாசம் காட்டினால்தான் சாதனை இல்லையென்றால் ஒரு திறமையான கலைஞன் தேவையே இல்லாமல் அவமான பட வேண்டியதாக இருக்கும். மற்றவரையும் பொருளாதார ரீதியாக நஷ்டமடைய வைக்கும்.தெரிந்தே தோல்வியின் அளவை அதிகரித்து கொள்ளலாமா? இன்னும் சில மாதங்கள் கழித்து oscar v.ரவிச்சந்திரன் (தசாவதாரத்தின் தயாரிப்பாளர்) பத்திரிக்கைகளில் கமல் செய்த வீண் செலவு பற்றி பேட்டி கொடுப்பார், இது தேவையா?


கமலே ஒரு பேட்டியில் சொல்லி இருக்கிறார் ரஜினி ஓடுவது 100 meter race , தான் ஓடுவது marathon race , எனவே compare செய்ய வேண்டாம் என்று. எனவே Marathon race ஓடும் கமல் 100 meter race-ல் கலந்து கொள்ள வேண்டாமே!

இதையும் தாண்டி தசாவதாரம் ஒரு ஹிட் படமாக ஆனால் ஒரு கமல் ரசிகன் என்ற முறையில் எனக்கு சந்தோஷமே.

3 comments:

Karthikeyan said...

podaangothaa echa baadu..

Anonymous said...

Gaad6u sootha moodu

rajini thaatha jaalraa

Anonymous said...

ரொம்ப மேம்போக்காக ஒரு அலசல். இதற்கு பாஸ்டன் பாலா வேறு சுட்டி கொடுத்து இங்கே வந்தேன்.

கமஷியல் சக்ஸஸ் - சகலகலாவல்லவன் என்று ஒரு படம் வந்ததே, அந்த காலத்தில் அது பல வசூல்சாதனைகள் படைத்தது.

தேவர்மகன், அபூர்வ சகோதரர்கள் எல்லாம் பல வசூல் சாதனைகளும், கிரிடிகல் அக்ளெய்ம்களோடு வெற்றி பெற்ற படங்கள்.

ஆளவந்தான் பற்றி தாணு ஒரு பேட்டி கொடுத்ததுதான் இந்த மாதிரி நீங்கள் பதிவு போட்டிருப்பதற்கு காரணம் என்று தெரிகிறது. தாணு ஒரு வியாபாரி. அவரின் லாப நட்ட கணக்குகள் வேறு வகையானவை. சினிமாவில் ஒரு தயாரிப்பாளருக்கும், நடிகருக்கும் உள்ள உறவு பல்வேறு வகையானது. தாணுவும், குமுதமும் சேர்ந்து நடத்திய நாடகம். விளைவு தாணுவிற்கு சில கோடிகள் மிச்சம். கமலின் சம்பளத்தை அவர் முழுவதுமாக செட்டில் செய்யவில்லை. அவ்வளவுதான் அந்த சம்பவத்திற்கு முக்கியத்துவம்.

இன்றைய தமிழ் திரைப்பட சந்தை உலகளாவியது. தசாவதாரம் ஓடும் முதல் இரண்டு வாரங்கள் போதும் ஆஸ்கருக்கு போட்ட பணத்தை திரும்பியெடுக்க. மற்றதெல்லாம் வினியோகத்தர்களின் இலாபம்.

நீங்க எதிர்பார்க்கிற செய்தி வரவில்லையெனில், அதை நீங்களே உருவாக்குவீர்கள். அப்படிதான் கமலின் பல படங்களின் தோல்விக்கதைகளும்.