Sunday 5 April 2009

49-O

ஞானியின் ஒ பக்கங்களை பல பேர் அறிவார்கள். பார்லிமென்ட் தேர்தல் அருகில் வர ஞானி 'யாருக்கும் ஓட்டு போட விருப்பமில்லை' எனத்தெரிவிக்கும் '49-O' என்ற option-ஐ பயன்படுத்துங்கள் என்று கூறுகிறார்.

ஆனால் இதனை பயன்படுத்தினால் என்ன ஆகும் , என்ன நன்மை கிடைக்கும் என்று தெரியவில்லை. அரசியல்வாதிகளுக்கு ஒரு செய்தி தெரியலாம் அதாவது இத்தனை பேர் நம்மீது நம்பிக்கை இல்லாமல் இருக்கிறார்கள் என்று , அது அவர்களுக்கு நன்றாகாவே தெரியும் இப்போது கூட.

எனவே 49-O என்பது எதிர்ப்பை காண்பிக்கும் சரியான வழி அல்ல. நமது ஓட்டுக்கள் எல்லாம் செல்லாத ஒட்டுக்களாகும் கதி தவிர வேறு எந்த உபயோகமும் இல்லை, அதன் மூலம் மாற்றம் கொண்டு வர முடியவே முடியாது.

மேலும், ஞானி எழுதுவது அச்சு ஊடகத்தில் (printing media), நமக்கே தெரியும் ஓட்டுப்போடும் பெரும்பான்மையான மக்கள் வாசிப்பவர்கள் அல்ல என்று, எனவே அவர்களுக்கு இந்த 49-O கொஞ்சம் ஓவர்.

எனவே இப்போது தேவை,

1. படித்தவர் எல்லோரும் ஓட்டுப்போட வேண்டும்.
2. இருப்பதிலேயே நல்லவர்களாக பார்த்து ஓட்டுப்போட வேண்டும்.

இரண்டுமே முக்கியம். முதல் விஷயமே பாதி பிரச்சினைகளை தீர்த்து விடும் இரண்டாவது விஷயம் பற்றி யோசிக்கும்போது நமக்கு பல கேள்விகள் வரலாம் 'யார் அந்த 'இருப்பதிலேயே' நல்லவர் என்று.

ஒருவர் தன் மகளையோ மகனையோ கல்லூரியில் சேர்ப்பதற்கு எத்தனை பேரை விசாரிக்கிறார்கள், ஒரு வேலை வாங்குவதற்கு எத்தனை பேரிடம் கேட்கிறார்கள், ஒரு வீடு கட்டுவதற்கு, வீட்டை ரிப்பேர் செய்வதற்கு, ஒரு செல் போன் வாங்குவதற்கு, வெளியூரில் தங்குவதற்கு, என பல தகவல் பரிமாற்றம் நடந்துக்கொண்டுதான் இருக்கின்றது, எனவே நம் தொகுதியில் இருக்கும் இருப்பதிலேயே நல்லவர் (அவர் சுயேட்சையாக இருந்தாலும்) எவர் என விசாரித்து , பத்திரிக்கைகளை படித்து, போஸ்டர்களை பார்த்து , தொலைக்காட்சியை பார்த்து தெரிந்து அவருக்கு ஓட்டுப்போட வேண்டும்.

அந்த நல்ல வேட்பாளர் ஜெயிக்க வேண்டும் என்பதில்லை ஒரு நல்ல சுயேச்சை வேட்பாளர் ஒரு பார்லிமென்ட் தொகுதியில் 25,000 வோட்டுகள் வாங்கட்டும் (அதே தொகுதியில் வெற்றிபெற்றவர் 3 லட்சம் வோட்டுக்கள் வாங்கினால்!), இதே போல் முதலில் படித்தவர் அதிகம் கொண்ட தொகுதிகளிலாவது சுயேச்சை வேட்பாளர் குறிப்பிடத்தகுந்த வோட்டுக்களை வாங்கட்டும், அப்போது தெரியும் மாற்றம், அரசியல்வாதிகளுக்கு இந்த 25,000 வோட்டுகள் முக்கியம் அதனை பெற அவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள், இதனை பயன்படுத்தி மேலும் பல நல்ல வேட்பாளர்கள் காலத்தில் குதிக்க வேண்டும், இப்போதுள்ள பா.மா.க மாதிரி அணி மாறியாவது இந்த 'நல்ல வேட்பாளர்கள்' பதிவிகளை கைப்பற்ற வேண்டும்.

இதுவே மற்றம் பெற ஒரே வழி.

No comments: