Monday 13 April 2009

A Wednesday

வெள்ளி இரவு Zee சினிமாவில் இந்த படத்தை பார்த்தேன். படத்தின் திரைக்கதையை பற்றி நிறைய கேள்விப்பட்டிருந்தேன். படத்தை பார்த்த போது அதன் வீர்யத்தை உணர்ந்தேன்.மிக குறைந்த பொருட்செலவில் எடுக்கப்பட்ட படம். தீவிரவாதத்தை மையமாக கொண்ட கதை. அனுபம் கேர், நசுருதீன் ஷா நடித்துள்ளனர். இந்த படத்தை தான் கமல் இப்போது "உன்னை போல் ஒருவன்" என்ற பெயரில் தமிழில் எடுத்துக்கொண்டு இருக்கிறார். நசுருதீன் ஷா வேடத்தை கமலும் அனுபம் கேர் பாத்திரத்தை மோகன்லாலும் செய்கின்றனர்.

படத்தின் இயக்குனர் நீரஜ் பாண்டே.34 வயது இளைஞர். மொத்த படப்பிடிப்பையும் 28 நாட்களில் நடத்தி முடித்திருக்கிறார். நசுருதீன் ஷா, அனுபம் கேர் போன்ற சீனியர் நடிகர்கள் முதல் முறை இயக்குனராக பணி புரியும் நீரஜ் போன்றவரின் பேச்சை ஒரு முறை கூட உதாசீனப்படுத்தாமல் நடித்து கொடுத்தார்களாம். தமிழில் இந்த பிரச்சனை இல்லை. ஏனென்றால் படத்தை இயக்குவதும் கமல் என்றே நினைக்கிறன்.

நசுருதீன் ஷாவின் நடிப்பை விவரிக்க வார்த்தைகள் இல்லை. கொஞ்சம் கூட மிகைப்படுத்தப்படாத நடிப்பு. அனுபம் கேர் அவர்களின் நடிப்பை பற்றி கூற வேண்டிய அவசியமேயில்லை.எத்தனையோ படங்களில் பார்த்திருக்கிறோம்.ஆனால் இந்த படத்தை பொறுத்த வரை அவரை விட நசுருதீன் ஷா அவர்களின் கதாபாத்திரத்திற்கு நடிப்பதற்கான வாய்ப்பு அதிகம். கதையை நான் இங்கு கூற விரும்பவில்லை.DVD வாங்கி படத்தை பார்த்து அதை தெரிந்து கொள்ளுங்கள்.

Kamal's A Wednesday

1 comment:

Saran said...

I had lot of comments about this particular movie especially screenplay and acting of two big shots but couldn't get a chance to view fully at a stretch.
I will taste the thrill soon!!!