Thursday, 14 May 2009

தமிழ்நாட்டின் பாவப்பட்ட நடிகர்

இன்று தேர்தல் - ஒரு செய்தி

கமல் ஹாசன் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லை, எனவே அவர் வாக்களிக்க முடியாமல் சென்றார். இது பற்றி அவர் தேர்தல் அதிகாரிகளிடம் புகார் செய்தார்.

தமிழகத்தின் இதனை சமூக வாழ்வோடு பொருத்தி பார்த்தால் கமல் என்ற நடிகர் தமிழகம் என்ற மாநிலத்தில் எவ்வளவு அன்னியப்பட்டு இருக்கின்றார் என்று தெரிய வரும்.

பொதுவாக Film crazy என்று அறியப்படும் தமிழ்நாட்டில்தான்,இந்திய அளவில் ஏன் உலக அளவிலும் நடிகர்களுக்கு மிகப்பெரிய மதிப்பும் மரியாதையும் அவர்களை கடவுள்களாக கொண்டாடப்படும் நிலையும் இருக்கிறது. அவர்களுக்கு எந்த கூட்டத்திலும் மரியாதை அளிக்கபடுகின்றது , அவர்கள் அரசியலில் மிகப்பெரிய சக்திகளாக மதிக்கபடுகின்றனர், அவர்கள் கையில் ஆட்சியே கொடுக்கபடுகின்றது.

எம்.ஜி.ஆர் சிவாஜி காலத்திற்கு பின்பு வந்த பெரும்பாலான நடிகர்கள் (பெரும்பாலும் கதாநாயகர்கள் ) அரசியல்வாதிகளாகவும் , அரசியல்
தொடர்பு இருப்பவர்களாகவும் இருக்கின்றனர்.

-விஜயகாந்த் , சரத்குமார், கார்த்திக் போன்றவர்கள் நேரடி அரசியலில் இருக்கின்றனர்.
-ரஜினி அரசியலுக்கு வருவேன் , மாட்டேன் என்று சொல்லிக்கொண்டு இருக்கின்றார் மேலும் அவர் ஒரு அரசியல் சக்தியாகவும் பார்க்கபடுகின்றார்.
-சத்யராஜ் ஈழப்பிரச்சினையிலும் மற்ற தமிழக பிரச்சினைகளிலும் தன்னை ஒரு தமிழனாக காண்பிக்க தவறுவதில்லை, மேலும் அவர் சீமான் , பாரதிராஜா போன்ற குழுக்களில் தன்னை இணைத்துக்கொண்டும் உள்ளார்.
-பிரபு , கூட தன் அரசியலில் நுழைவேன் என்று பேட்டி கொடுத்துள்ளார்.

இப்போது கமலை பார்ப்போம், தான் 'எந்த காலத்திலும் அரசியலில் நுழைய மாட்டேன்' என்று தீர்மானமாக சொன்னவர் , அதை செயலிலும் காட்டுபவர்.

இவ்வாறு நேர்மையாக சொன்னதன் பலன்தான் அவர் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லாமல் இருப்பது, அதாவது தமிழ்நாட்டில் முக்கிய பிரமுகர் அரசியலில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இல்லாமல் இருப்பது எவ்வளவு ஆபத்து என்பதையே இன்று நடந்த சம்பவம்
காட்டுகின்றது, இன்று வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாமல் இருக்கலாம் நாளை அவர் வாங்கிய சொத்து அவர் பெயரில் இல்லாமல் இருக்கும்.ஏன், அவர் படமே அவர் பெயரில் இல்லாமல் கூட இருக்கும்.

இதுவே மற்ற நடிகருக்கு ஆகி இருந்தால் அவரது ரசிகர் மன்றத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டு இருப்பார் , ஒரு ரகளை நடந்து இருக்கும் , இப்போது கமல் "தேர்தல் அதிகாரியிடம் புகார் தந்து இருக்கிறார், அந்த அதிகாரியும் எதுவும் செய்ய முடியாது என்று சொல்லி இருக்கிறார்"

கமல் கமலுக்கு அவரது ரசிகர்கள் சொல்லவேண்டும்நான் "அரசியல் பின்புலம் கொஞ்சம் வைத்துக்கொள்ளுங்கள் இல்லை என்றால் ஓட்டளிக்ககூட வர வேண்டாம். வந்து அவமானப்பட வேண்டாம் , எத்தனையோ விஷயங்களில் middle class மதிப்பீடுகளை மீறி இருக்கிறீர்கள் , ஒட்டு போடும் விஷயத்திலும் மீறினால் தவறே இல்லை. "

6 comments:

முரளிகண்ணன் said...

மிடில் கிளாஸ் மதிப்பீடுகளை தகர்க்கத்தானே அவர் வெளியூரில் இருந்து வந்து ஓட்டு போட வந்திருக்கிறார்? :-))

நல்ல பதிவு.

ananth said...

எல்லாம் சரிதான். வாக்காளர் பட்டியலில் பெயர் இருக்கிறதா என்று சரி பார்த்திருந்தால் இந்த பிரச்சினையே வந்திருக்காதே. தும்பை விட்டு விட்டு வாலை பிடிக்கும் கதை. இந்த பதிவு useless and waste of time.

Vasu. said...

கோகுல்,

இதில் இவ்வளவு ஆராய்ச்சி எல்லாம் தேவையா என்று தெரியவில்லை. கமல் எல்டாம்ஸ் சாலையில் இப்போது இல்லை. அவர் கிழக்கு கடற்கரை சாலை பக்கம் எங்கோ குடியிருக்கிறார். எல்டாம்ஸ் சாலை வீட்டை "ஸ்டோர்ஸ்" என்று காட்டியிருப்பதாக தேர்தல் ஆணையம் சொல்கிறது. வீடு மாறிய விபரம் தெரிவிக்கப்படததால் ஏற்பட்ட குழப்பம் இது. அரசியல் பின்புலம் என்று நீ எதை குறிப்பிடுகிறாய் என்று தெரிந்துகொள்ள விரும்புகிறேன். கமல் கலைஞருக்கு நெருக்கமானவர் என்பது ஊரறிந்த விஷயம். அதற்காக வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை என்று கலைஞரை உதவிக்கு கூப்பிட இயலாது. அப்படிப்பட்ட அரசியல் பின்புலம் தேவையா என்பதும் கேள்வியே.

Gokul said...

முரளிகண்ணன்

// மிடில் கிளாஸ் மதிப்பீடுகளை தகர்க்கத்தானே அவர் வெளியூரில் இருந்து வந்து ஓட்டு போட வந்திருக்கிறார்? :-)) //

நல்ல பதில் , ஒப்புக்கொள்கிறேன் :-))

வருகைக்கு நன்றி

-கோகுல்

Gokul said...

ஆனந்த் / வாசு,

நீங்கள் இருவரும் சொல்வது மிகவும் சரி , இதுவே நான் எனக்கோ உங்களில் ஒருவருக்கோ ஆகி இருந்தால் இப்படித்தான் சொல்லி இருப்பேன், இல்லை ஜெர்மனி ஆஸ்திரேலியா போன்ற நாட்டில் ஆகி இருந்தாலும் இப்படிதான் சொல்லி இருப்பேன். நான் சொல்ல வந்தது தமிழ்நாடு போன்ற ஓரு மாநிலத்தில் அரசியல் சூழ்நிலையில் கமல் என்ற நடிகருக்கு இருக்கும் இடத்தை. (அவர் கிழக்கு கடற்கரை சாலைக்கு குடி புகுந்து இருந்தால் கமல்ஹாசன் என்ற பெயர் ஆழ்வாரபேட்டையின் முக்கிய பிரமுகர் பெயர் பட்டியலில் இருப்பானேன்) மற்றபடி இது முழுக்க தேர்தல் கமிஷனின் தவறு என்று நான் சொல்லவே இல்லை , எனது பதிவு இரண்டு விஷயங்களுக்கானது

1.கமல்ஹாசன் தமிழ்த்திரை அரசியலில் இருந்து எவ்வளவு அன்னியப்பட்டு இருக்கிறார் என்பதை சொல்ல

2.கமல் இது போல அவமானபடக்கூடாது என ஓரு ரசிகனின் நினைப்பால்

ஆனந்த்,

வருகைக்கு நன்றி

-கோகுல்

Vasu. said...

http://www.hindu.com/2009/05/14/stories/2009051458540300.htm