Monday 13 July 2009

ஓரினச்சேர்க்கை - சில கருத்துக்கள்

கோகுல்,

உன் பதில் அற்புதம். ஆனால், என் கருத்துக்களில் எந்த மாற்றமும் இல்லை. நீ நக்கீரனில் படித்ததை சொல்கிறாய். ஆனால், நான் இதை எல்லாம் நிஜமாகவே தாண்டி வந்திருக்கிறேன். பத்து வயது சிறுவனாக இருக்கையில் நன்கு படித்து நல்ல வேலையில் இருந்த சிலர் என்னிடம் இப்படி நடக்க முயற்சித்துள்ளனர். ஓரினச்சேர்க்கை சட்ட திருத்தம் குற்றவாளிகள் தப்பிக்க உபயோகிக்கும் ஒரு கேடயமாக பயன்படுத்தப்பட கூடாது என்பது தான் என் முக்கிய கவலை.

வளர்ந்த சமுதாயம் என்று நாம் நினைக்கும் அமெரிக்க, இங்கிலாந்து போன்ற நாடுகளில் திரைப்படங்களுக்கு இன்றும் PG, U, A என்று சர்டிபிகேட் அளிக்கப்படுகிறது, அது மிக கடுமையாக கடைபிடிக்கப்படுகிறது. ஒப்பன் செக்ஸ் தானே அங்கெல்லாம். யார் வேண்டுமானாலும் பார்க்கட்டும் என்று விடவில்லையே? நான் ஒரு காய் நறுக்கும் கத்தி வாங்க இங்கிலாந்தில் "Sainsburys" சென்ற போது அரை மணி நேரம் விசாரிக்கப்பட்டேன். பின்னர் என் ஓட்டுனர் உரிமத்தை பார்த்து இருபத்தியொரு வயது கடந்தவன் என்று ஊர்ஜிதம் செய்யப்பட்ட பின்னரே கத்தி என்னிடம் கொடுக்கப்பட்டது.

நான் சொல்வது ஒன்று தான். ஒரு விஷயத்தின் ஆணிவேர் தெரியாமல் போராடுபவன் நல்ல தலைவன் இல்லை. அதே போல் ஒரு சட்டத்தை இயற்றும் முன் அதோடு தொடர்புள்ள மற்ற விஷயங்களை ஆராய்ந்து அதில் உள்ள ஓட்டைகளை அடைத்துவிட்டு பின்னரே அந்த சட்டம் இயற்றப்பட வேண்டும். அப்படி செய்யவில்லை அரசு. ஒரினச்சேர்கைக்கு ஆதரவு என்றால் விபச்சாரத்தையும் "legalise" செய்ய வேண்டும். ஓரினச்சேர்க்கைக்கு ஆதரவு தரும் அதே நேரத்தில் அது தவறாக பயன்படுத்தப்பட்டால் சேர்க்கை செய்ய "உறுப்பே" இல்லாமல் போய்விடும் என்று சட்டம் கொண்டுவர வேண்டும். அது "implement" செய்யப்பட வேண்டும்.

நீ அரவாணிகளை பற்றி கூறினாய். தமிழ்நாட்டில் அவர்களை கேவலமாக நடத்துகிறார்கள். உண்மைதான். தமிழகத்தை தவிர இந்தியாவின் எந்த மாநிலத்தில் குழந்தை பிறந்தாலும் அரவாணிகள் கூட்டமாக அந்த வீட்டுக்கு வந்து விடுவார்கள். வந்து குழந்தையை எடுத்து தூக்கி விளையாடுவார்கள். அவர்களுக்கு ஆண் குழந்தையாக இருந்தால் பத்தாயிரம் ரூபாய் பணமும், ஐம்பது கிலோ அரிசி, மஞ்சள், பருப்பு என்று கொடுக்க வேண்டும். பெண் குழந்தையா இருந்தாலும் இதேதான். பணம் மட்டும் ஐந்தாயிரம். இதை நான் செவி வழி செய்தியாக சொல்லவில்லை. எனக்கு கொல்கத்தாவில் குழந்தை பிறந்த போது எங்கள் வீட்டு கதவை யாராவது தட்டினாலே என் மாமியார் அரவாணிகள் வந்துவிட்டார்களோ என்று பதறுவார்.கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு இந்த பதட்டம் இருந்தது.இதை போலீசிடம் சொன்னால் அவர்கள், "அரவாணிகளுக்கு பிழைப்பு இல்லை, கொடுத்து விடுங்கள்" என்பார். இவர்களை கல்லால் அடித்ததாலேயே தமிழ்நாட்டில் "மூடிக்" கொண்டு இருக்கிறார்கள் என்பது என் கருத்து. அதே நேரத்தில் "ரோஸ்" போன்ற படித்த பண்புள்ள அரவாணிகளுக்கு எதிராக எனக்கு எந்த கோபமும் இல்லை.மாறாக அவர் எனக்கு ஒரு "inspiration" ஆகவே தோன்றுகிறார். இவரை போல் என்னால் படிக்க முடியவில்லையே என்று.

நம் நாட்டில் "Paedophilia" பெரும்பாலான நகரங்களில் நடக்கிறது. ஆனால், இதற்கு எந்த கடுமையான சட்டமும் இல்லை. சட்டங்கள் கடுமையாய் இல்லாத வரை குற்றங்கள் குறையாது. சிங்கப்பூர் வளர்ந்த சமுதாயம் தான். அங்கு "Gay Rights" கேட்டு கூட்டம் நடத்தினால் என்ன நடக்கும் என்று "Gay Rights" அமைப்புகளுக்கு தெரியும். ஆனால், அங்கே விபச்சாரம் சட்டரீதியாக அனுமதி பெற்ற தொழில்.

மேலும், தமிழ்நாடு ஏதோ மிகவும் பின்தங்கியுள்ள ஊர் போல் நீ எழுதியுள்ளது வருந்தத்தக்கது. இந்த வருடம் கற்பழிப்பு அதிகம் நடந்த ஊர் எடுத்து தெரியுமா? டெல்லி. பின்னர் மும்பை. அதற்கு பின் சுரத். பின்னர் கர்நாடகா. தமிழகம் முதல் பத்து இடங்களில் இல்லை. மேலும், விதவை திருமணம், குழந்தைகள் திருமணம் போன்றவற்றை ஒரினச்சேர்க்கையுடன் நீ ஒப்பிடுவது சரியல்ல.

நான் ஓரினச்சேர்க்கையாளன் என்று கூறும் பத்து பேரில் எட்டு பேர் பாலியல் சுகத்திற்காக வேடம் போடுபவர்கள். இவர்கள் யாரோடு வேண்டுமானாலும் கூடுபவர்கள். உண்மையான "Gay" பெண்களை பார்த்தால் ஒதுங்கிக்கொள்வான். இதே தான் பெண்களுக்கும். நம்மூரில் "Gay" என்ற சொல்லுக்கு அர்த்தமே தெரியாமல் நான் "Gay" என்று கூறுவார்கள். செவிட்டு மேல் நாலு அறைவிட்டால் உண்மையை ஒப்புக்கொள்வான்.

"It is very easy to talk from the Sidelines". நமக்கு நேராத வரை எதுவுமே சொல்வது சுலபம். இப்படி இந்தியாவை வளர்ந்த சமுதாயம் ஆக்குகிறேன் என்று இதையெல்லாம் ஆதரிப்பதை விட இதன் தீமைகளை நாலு பேருக்கு தெரிவிப்பதையே என் தேசத்திற்கு செய்யும் கடமையாக கருதுகிறேன்.

P.S: நீ சொல்வது போல் இது இஸ்லாமிற்கு மட்டும் எதிரானது அல்ல. நேற்று NDTV சேனல் எல்லா மதங்களையும் சேர்ந்த சில மத குருமார்களை "இது" விஷயமாக பேட்டி கண்டது. முதல் முறையாக சர்வ மதத்தினரும் ஒப்புக்கொள்ளாத ஒரு விஷயத்தை நேற்று தான் பார்த்தேன்.

No comments: