Thursday 15 October 2009

கமல் - 50 விழாவில் கவனித்தது..



- கமலின் ஆரம்ப கால நாயகிகளான ஸ்ரீதேவி, ஸ்ரீப்ரியா போன்றோர் வரவில்லை. காரணம் எல்லோருக்கும் தெரிந்ததுதான் (அதாவது இப்போது நாற்பதுகளில் இருப்பவர்க்கு).

- கமலின் வளர்ச்சிக்கு முக்கியமான ஆளான பாரதிராஜா வரவில்லை ஏன் என்று தெரியவில்லை

- கமலின் மற்றொரு நெருங்கிய நண்பரான நாசர் வரவில்லை

- பார்க்க முடியாத மற்றும் சிலர் - சத்யராஜ்,குஷ்பு,அஜித், விஜய்,மனோரமா,சூர்யா ...மற்றபடி விக்ரம்,பாலா பற்றியெல்லாம் நான் சொல்லப்போவதில்லை.

-இது போன்ற விழாக்களில் தேர்ந்தெடுத்து எப்படி திரு.விஜயகாந்த் கழற்றி விடப்படுகிறார் என்று தெரியவில்லை. கேப்டன் சீக்கிரம் சி.எம்.ஆகுங்க எல்லோரும் பொன்னாடை போர்த்த வருவாங்க.

-கமலை பாராட்டி பலர் பேசினார் , இருப்பதிலேயே சிறப்பாக பாராட்டியவர் பிரபுதேவா (பேசவேயில்லை, அவரும் அவர் தந்தையும் சேர்ந்து நடனமாடினர்). ஒரு கலைஞன் மற்றொரு கலைஞனுக்கு இதை விட சிறப்பாக யாரும் மரியாதை செய்ய முடியாது , (Juggler கதை ஞயாபகம் வருகிறது).

-கமல் என்றொரு மகத்தான கலைஞன் மேல் தமிழக திரையுலகம் வைத்திருக்கும் மரியாதையை கண்டு பெரும் அதிர்ச்சிக்கு உள்ளானாவர் ஒருவர் மட்டுமே .. அது திரு.கமல்ஹாசன்.

-நான் கமல் பற்றிய் பல்வேறு காலகட்டங்களில் பல பத்திரிக்கை செய்திகளை படித்ததில் இருந்து கமலுக்கும் அவருடன் நடித்த பல பேருக்கும் பிரச்சினை என்றே நினைத்து இருந்தேன்

..உ.தா.அர்ஜுன், குருதிப்புனல் படத்தில் நடித்ததில் அர்ஜுன் மிகவும் காயப்பட்டு விட்டார் என்று படித்து இருக்கிறேன். இந்த விழாவில் கமலின் காலில் விழப்போனார் அர்ஜுன்.

-நாயகன் என்றொரு படத்தை அளித்தவரும் (பேசிய பலரும் நாயகனை பற்றி சொன்னார்கள், நாயகன் வந்து சுமார் 22 வருடங்கள் ஆகின்றன)
கமலின் மருமகனுமான மணிரத்னமும் , அவரின் அண்ணன் மகளுமான சுஹாசினி , மற்றும் அண்ணனான சாரு ஹாசன் போன்றோரை பார்க்க முடியவில்லை.

-தெலுங்கு படவுலகில் இருந்து வந்த வெங்கடேஷ் மற்றும் அல்லு அர்ஜுன் போன்றோர் தமிழில் பொளந்து கட்டினர் ...

-பிரகாஷ்ராஜின் தமிழ் அறிவு பிரமிப்பூட்டியது- தமிழ் கண்ணதாசன் கையில் இருப்பது போலவும் - பாரதியின் கையில் இருப்பது போலவும் - தமிழ் சினிமா கமலின் கையில் இருப்பதாக குறிப்பிட்டார்.செல்லம்.. எப்படி செல்லம்...?

--நாயகியருள் அருமையாக பேசியது ராதிகா ... ஒரு சாம்பிள் " கமலை விட கமல் கூட நடித்த ஹீரோயின்களைதான் அதிகம் பாராட்ட வேண்டும், நாங்க இல்லாமல் நீங்க எப்படி காதல் மன்னன் ஆக முடியும்?"

-விழாவில் கடைசியாக பாராட்ட வந்தது ரஜினி. இருவரும் உண்மையிலேயே நண்பர்கள்தான் போல .. இருவரும் இவ்வளவு உணர்ச்சிவசப்பட்டு யாரும் பார்த்திருக்க முடியாது. இருவருமே கண்கலங்கி போனார்கள்.முத்தம் குடுத்துக்கொண்டார்கள்.ரஜினி தன்னை தாழ்த்தி கொண்டு பேசினார், தன்னை தாழ்த்துவதின் மகிமையை அவர் முற்றிலும் உணர்ந்தே இருக்கிறார். ரஜினி பேசும்போது நான் கவனித்தவரை முகத்தை சுளித்தது மம்மூட்டி, அவருக்கு ரஜினி மிகவும் ஓவராக பேசுவதாக தோன்றி இருக்கும் போல.

-கடைசியில் ஏற்புரை ஏற்க வந்தார் கமல் - பொதுவாக ஒரு கலைஞனாக கமலை நமக்கு தெரியும்.ஆனால் தமிழ் பத்திரிக்கைகள் மூலமாக ஏற்பட்ட பிம்பம் - அவர் மனித உறவுகளை பேணுவதில் அவ்வளவு நாட்டமில்லாதவர் என்று- அது உண்மை என்று பல சம்பவங்கள் சொல்கின்றன - சாருஹாசன், மணிரத்னம் போன்றோரின் absence ஒரு உதாரணம். அப்படிப்பட்ட கமலுக்கு இத்தனை பேர் திரண்டு இருந்து செய்த மரியாதையை அவரை திக்குமுக்காட செய்து விட்டது என்றே தோன்றியது.ஏறக்குறைய அழுவதற்கு முந்தைய நிலையில் இருந்தார் - அந்த நேரத்திலும் அவர் மக்களை தன்னுடைய சிக்கலான தமிழில் குழப்ப தவறவில்லை - இவர் கூட பேசிப்பேசி சந்தான பாரதிக்கு  தலையில் முடியே இல்லாமல் போய்விட்டது போல.கமலுடைய ஏற்புரையில் தனித்தனியே மற்றவர்க்கு நன்றி செலுத்த முடியாமல் போனதால் - பொதுவாக எல்லோருக்கும் நன்றி செலுத்தி விட்டு , ரஜினியை மட்டும் தன்னுடைய பேச்சில் சேர்த்துக்கொண்டார் - கமல் ரஜினியை பற்றி சொன்னது - "எவன் பேசுவான் இப்படி?"...ஹ்ம்ம்...

-பொதுவாக விஜய் டி.வியின் நேயர்கள் நகரத்தில் வசிக்கும் நடுத்தர, உயர்நடுத்தர வர்க்கம்தான், கமலின் ஏரியாவும் அதுதான், so, விஜய் டி.வி பின்னி விட்டார்கள். மீண்டும் மறு ஒளிபரப்பு செய்யத்தான் போகிறார்கள்.

சிறந்த நிகழ்ச்சி .. கொஞ்சம் நேரத்தை குறைத்து இருந்தால் மிகச்சிறப்பான நிகழ்ச்சியாக இருந்து இருக்கும்.

7 comments:

வடுவூர் குமார் said...

விவேக் கவிதை அருமை.
ரஜினி பேசியது உண்மை அதனால் அவர் தன்னை தாழ்த்திக்கொண்டதாக நான் நினைக்கவில்லை.

முரளிகண்ணன் said...

\\அந்த நேரத்திலும் அவர் மக்களை தன்னுடைய சிக்கலான தமிழில் குழப்ப தவறவில்லை - இவர் கூட பேசிப்பேசி சந்தான பாரதிக்கு தலையில் முடியே இல்லாமல் போய்விட்டது போல.\\

கலக்கல் கமெண்ட். விழுந்து விழுந்து சிரித்தேன்

oliyaithedi said...

உண்மையை சொல்லவதற்கு கூட மனசு வேண்டும் அதுவும் தனது போட்டியாளரிடம்!!!

Gokul said...

வடுவூர் குமார்,

ஆம் விவேக் கவிதை நன்றாகத்தான் இருந்தது, ஏனோ வாலி / வைரமுத்து வரவில்லை வந்திருந்தால் இன்னும் ஒரு நல்ல கவிதை கிடைத்து இருக்கும்.

ரஜினி உண்மை பேசினாரா? சரி சரி நீங்க தீவிர கமல் ரசிகர் போல...

வருகைக்கு நன்றி.

முரளிக்கண்ணன் ,

வருகைக்கு நன்றி! எல்லாம் உங்களிடம் இருந்து கற்றதுதான்.

jtraja,

"உண்மையை சொல்வதற்கு கூட" -- நீங்களும் கமல் ரசிகர் போல..

வருகைக்கு நன்றி!

வருண் said...

***நாயகியருள் அருமையாக பேசியது ராதிகா ... ஒரு சாம்பிள் " கமலை விட கமல் கூட நடித்த ஹீரோயின்களைதான் அதிகம் பாராட்ட வேண்டும், நாங்க இல்லாமல் நீங்க எப்படி காதல் மன்னன் ஆக முடியும்?"***

கோகுல்: எனக்கு பொதுவா அட்டண்டன்ஸ் மட்டும் கொடுக்கிறது பிடிக்காது. அதனாலதான் இங்கே பின்னூட்டமிட டிலே.

பின்னூட்டம்னா ஏதாவது கொஞ்சம் அர்த்தமா சொல்லனும்- நல்லா பாராட்டனும் இல்லைனா ஏற்றுக்கொள்ளாததை சொல்லனும்.

* முதலாவதாக, கமலஹாசன், "காதல் இளவரசன்". "காதல் மன்னன்" நம்ம ஜெமினிதான்.

ராதிகா பேச்சு எனக்கு சுத்தமாகப் பிடிக்கலை.

எ.கா:

ஒரு எருமை மாட்டை நிறுத்தினாலும் அப்படித்தான் (காதல் பார்வை)பார்ப்பார். That was a BAD example. She should have been careful.

அது மட்டுமல்ல, She really eambarrassed Kamal when she described about his effort to put more weight.

ஆனால். I liked Gauthami's comment. It was cute and came straight from her heart.

Radhika showed off too much and overall she f'cked up in her speech,imho :)

Take it easy :)

Gokul said...

வருன்,

உங்கள் பின்னூட்டத்தில் உள்ள கடைசி வரியே உங்களுக்கு பதில்

Take it easy

காதல் மன்னனா அல்லது இளவரசனா ... இதென்ன joint commissioner Vs Deputy commissioner மாதிரியா? ஒரு அன்பினால் சொல்வது, எவ்வளவு நாள்தான் இளவரசனாக இருப்பது , மன்னர் இறந்தவுடன் இளவரசர் மன்னனாகிவிட்டார் அவ்வளவுதான்!

உண்மையில் கமல் embarass ஆகியது ராதிகாவுக்கு மட்டுமில்லை அந்த விழாவில் பேசிய அனைவரின் பேச்சிற்கும்தான்...புகழ்ச்சியை தாங்க ஒரு மனம்/புத்தி வேண்டும் நம்ம கலைஞர் தாத்தா மாதிரி,கமலுக்கு கொஞ்சம் கஷ்டம் போல...

SurveySan said...

மீனாவை பாத்து கமல் ஏதோ அகராதி/encylopediaன்னு சொன்னாரே, அதைப் பத்தி விளக்கம் எனக்கு கொஞ்சம் சொல்லிட்டுப் போங்க சாரே.

http://surveysan.blogspot.com/2009/10/50.html