Monday 5 October 2009

உன்னைப்போல் ஒருவன்

A Wednesday படத்தை மூன்று முறை பார்த்துவிட்டதால் UPO(உன்னைப்போல் ஒருவன்) பார்க்க அவசரப்படவில்லை. ஆனாலும், கமல் ரசிகன் என்பதால் அவர் நடிப்பு எப்படி இருக்கும் என்று எண்ணிக்கொண்டு இருந்தேன். மேலும், தமிழுக்கு ஏற்ற மாதிரி எப்படி எடுத்திருப்பார்கள் என்றும் ஒரு எதிர்பார்ப்பு இருந்தது.

கடந்த சனிக்கிழமை படத்தை பார்த்த போது எதிர்பார்த்தது வீண்போகவில்லை என்றே சொல்லத் தோன்றியது. கமல் என்பதால் ஒரிஜினல் படத்தை காட்சிக்கு காட்சி காப்பி அடிக்கவில்லை. சில மாற்றங்கள் செய்திருக்கிறார். உதாரணம், சிகரெட் பிடிக்கும் பெண் டிவி நிருபர், ஆரிப்(Ganesh Venkatraman) கதாபாத்திரத்திற்கு மேலும் சில காட்சிகள், இறுதி காட்சியில் பெஞ்சிற்கு பதிலாக ஜீப் போன்ற சில. படத்தை விமர்சனம் செய்கிறேன் என்றெல்லாம் சொல்ல முடியாது. காரணம், நான் ஒரு சாதாரண ரசிகன் மட்டுமே. நான் கொடுத்த ஐம்பது ரூபாய்க்கு "I got my worth". இருந்தாலும், சில கேள்விகள் உள்ளன. அவை:

1. எதற்காக அந்த பெண் டிவி நிருவர் புகைப்பதாக காட்ட வேண்டும்? பார்வையாளனுக்கு பெண் சுதந்திரம் குறித்த விழிப்புணர்வு கொண்டு வரும் முயற்சியா?

2. ஒரு இடத்தில் தீவிரவாதி சொல்கிறான், "என் மனைவி மற்றும் குழந்தை குஜராத் Best Bakery இடத்தில் நடந்த வன்முறையில் இறந்து விட்டார்கள்". ஆரிப் சொல்கிறான், "நான் அங்கு இருந்தால் தடுத்திருப்பேன்". அதற்கு தீவிரவாதி சொல்கிறான், "அங்கு மோதி பார்த்தால் தான் உனக்கு தெரியும். மோதினால் மரணம் தான்". அது மோடியா அல்லது மோதியா என்று தெரியவில்லை..

3. உங்கள் இஷ்ட தெய்வம் என்ன என்று ஒரு போலீஸ் ஆணையரிடம் முதல்வர் கேட்பதாக ஒரு காட்சி எதற்கு? தன் இஷ்ட தெய்வத்தின் பெயரை போலீஸ் ஆணையாளர் சொன்னவுடன் முதல்வர், "இங்க தமிழ்நாட்ல பக்கத்துல இவ்வளோ கடவுள் இருக்கே, அவ்வளவு தூரம் போகணுமா?" என்கிறார். கமல் போலீஸ் ஆணையாளராக நடித்திருந்தால் படத்தில் இந்த காட்சி இடம் பெற்றிருக்காது.

4. உண்மையிலேயே, சோழவரத்தில் World War II ஏர்போர்ட் இருக்கா?

இறுதியாக, நடிகை லக்ஷ்மி அந்த தலைமை செயலாளர் வேடத்திற்கு கன கச்சிதம். ஆனால், நடிக்கத்தான் வாய்ப்பு இல்லை. மோகன்லால் பற்றி என்ன சொல்ல? அவர் நடிப்பு திறனுக்கு தீனி போடும் வேடம் இல்லை. ஆனால், அவரும் கமல் மாதிரி எந்த வேடம் கொடுத்தாலும் ஜொலிப்பவர் தானே? படத்தின் முதல் காட்சியில் நடிகராக வரும் ஸ்ரீமான் "விஜய்" நண்பராச்சே? ஏன் அவரையே நக்கல் அடித்திருக்கிறார்? மொத்தத்தில், நான் மேலே சொன்ன மாதிரி UPO கொடுத்த காசுக்கு நல்ல பொருள்.

3 comments:

Gokul said...

ஏன் வாசு,

இந்த ஹிந்துத்வா , பாசிசம் , நுண்ணரசியல், இஸ்லாமிற்கு எதிரான கருத்தியல், பொதுபுத்தி அப்படின்னு எல்லாம் ரொம்ப நுணுக்கமா விமர்சனம் பண்றாங்களே , நீ என்னடான்னா "கொடுத்த காசுக்கு வாயில தோசை" அப்படின்னு முடிச்சுட்ட ..

Vasu. said...

கோகுல்,

இதப்பத்தி எல்லாம் எனக்கு எதுவும் தெரியாதே. தெரியாதத தெரிஞ்ச மாதிரி காட்டிக்கிட்டு நான் என்ன செய்ய போறேன்?

Zahoor said...

World War II ஏர்போர்ட் சோழவரத்தில் உண்மையில் இருக்கிறது.

http://en.wikipedia.org/wiki/Avadi - "Historical Connections" பத்தியை பார்க்கவும்.