Tuesday, 13 October 2009

ஞானி - என்னை போல் ஒருவனா நீங்கள்?

சமீபத்தில் உன்னை போல் ஒருவன் படத்தை குமுதத்தில் ஞானி விமர்சனம் செய்து இருந்தார் , அதற்கு ஒரு எதிர்வினை.//  // குறிக்குள் இருப்பது ஞானியின் எழுத்துக்கள். ஞானியின் முழு விமர்சனத்தையும் படிக்க நினைப்பவர்கள் இங்கே செல்லலாம்.

//படத்தில் பெயர் இல்லாத நாயகனே, என்னைப் போல் ஒருவனா நீ?

நான் மனசாட்சியின் குரலுக்கு எப்போதும் செவி கொடுக்கிற ஒரு நடுத்தர வகுப்பு மனிதன். என்னால் பிறருக்கு வலியும், பிறரால் எனக்கு வலியும் ஏற்படக்கூடாது என்று விரும்பும் சாதாரண மனிதன். ஜாதி, மதம், மொழி, இனம் அடிப்படையில் மனிதரை மனிதர் உயர்வு தாழ்வு பார்க்கக்கூடாது என்று விரும்பும் ஒருவன். //


இதுவரைக்கும் சரி.. இனிமேல்தான் பிரச்சினை, ஞானி மேலும் எழுதுகிறார்

//
குற்றம் சாட்டப்பட்ட எவரும் முறையாக விசாரிக்கப்பட்டு சட்டத்தின் கீழ் தண்டிக்கப்படவேண்டும் என்றே விரும்புகிறவன். கொலைக் குற்றவாளிக்குக் கூட அதிகபட்சமாக ஆயுள் தண்டனையே தரப்படலாமே தவிர, மரண தண்டனை கூடாது என்று நினைக்கிறவன். சட்டத்தை என் கையில் எடுத்துக் கொள்ள ஆசைப்படாதவன்.

நீ என்னைப் போல் ஒருவனா? நிச்சயம் இல்லை.//


ஞானியே நீங்கள் என்னை போல் ஒருவரா? நிச்சயம் இல்லை.நிச்சயமாக இந்தியாவில் தூக்கு தண்டனையை ஆதரிப்பவர் இருக்கவே செய்கின்றனர், எப்படி சிலர் தூக்கு தண்டனையை எதிர்க்கின்றனறோ , அப்படியே மிகப்பலர் ஆதரிக்கவே செய்கின்றனர், "இந்த மாதிரி குண்டு வைக்கின்ற ஆட்களை தூக்குல போடணும் சார்" என்று பலர் பேசிக்கொண்டேதான் இருக்கின்றனர்.இது ஒரு பொது புத்தி, பொது புத்தியை உருவாக்குபவர் பெயரில்லாத பொதுஜனம், அந்த பொதுஜனமே நோக்கியே சொல்கிறார் அந்த படத்தை எடுத்தவர் "உன்னை போல் ஒருவன்"

இதுவரை தீவிரவாதாத்தால் இறந்தவர் எத்தனை பேர் (அது இஸ்லாமிய தீவிரவாதமோ அல்லது இந்து தீவிரவாதமோ அல்லது மற்ற எந்த தீவிரவாதமோ) , கொல்லப்பட்டும் ஒவ்வொரு தீவிரவாதியும் சுமார் பத்து பொதுமக்களை கொன்று விட்டே சாகின்றனர்.

இந்தியாவில் உள்ள வாக்கு வங்கி அரசியலுக்கு குந்தகம் வராமல் செயல்படுத்தப்படும் 'விசாரணையின் வேகம்' உங்களுக்கு தெரியாதா? "என்னை போல் ஒருவன்" எதிர்கொள்ளும் ஆமை வேக விசாரைணையின் எதிர்வினையே அந்த படம் என்பதும் உங்களுக்கு தெரியாமல் போனதில் ஆச்சர்யமே!

//எந்த மதத்து தீவிரவாதியாக இருந்தாலும் சரி, அவர்களை விசாரிக்காமல் சுட்டுக் கொன்றுவிடவேண்டும் என்று நினைக்கிறவர்கள் சார்பாக புறப்பட்டு வந்தவனும் அல்ல நீ.
அப்படி நினைக்கிறவர்கள் கருத்தை ஏற்பதாக இருந்தால், மசூதியை இடித்து மதக் கலவரங்களை உற்பத்தி செய்த அத்வானியையும், அரசு இயந்திரத்தின் உதவியோடு முஸ்லிம்களை கும்பல் கும்பலாகக் கொல்ல ஏற்பாடு செய்த மோடியையும் சுட்டுக் கொல்ல நீ புறப்பட்டிருப்பாய். //

 
இது நிச்சயமாக ஒத்துக்கொள்ளவேண்டிய ஒரு விஷயம், ஞானி எழுதுவது உண்மை.
ஆனால் மீரா நாயரின் water மற்றும் Fire வந்தபோதும் இந்துத்தவா ஆட்கள் இதையேதான் சொன்னார்கள் (அதாவது இம்மாதிரியான படங்களை இஸ்லாமிய கதாபாத்திரங்களை கொண்டு எடுக்க முடியுமா என்று?) அதாவது இந்துத்தவா ஆட்கள் சொல்லும் வாதத்தையே ஞானியும் வேறு சொற்களை வைத்து வேறு பாத்திரங்களுக்காக வேறு மதத்திற்காக சொல்கிறார்.ஹிந்தி படத்தில் வராத ஒரு ஹிந்து தீவிரவாதியை தமிழ் version-இல் சேர்த்தே இந்த கதி. இதற்காக மோடியையோ, அத்வானியோ ஆதரிக்கறேன் என்று நினைக்க வேண்டாம், என்னுடைய பதில் ஞானி அவர்களின் விமர்சனத்திற்கு மட்டும்தான்.

ஞானி அவர்களே, நீங்கள் மிகச்சிறந்த விமர்சகர், தமிழகத்தில் கலை மற்றும் அரசியலில் இன்றுள்ள நேர்மையான விமர்சகர் நீங்கள் மட்டுமே. ஆனாலும் உங்கள் விமர்சனத்தை மற்றவர் விமர்சிக்கலாம்தானே?

குளம்பியகத்தின் 300-வது பதிவு இது, இதுவரை ஆதரவு தந்த (இனிமேலும் ஆதரவு தரப்போகும்) அனைவருக்கும் நன்றி.

4 comments:

Zahoor said...

Congrats for the 300th successful blog. Kulambiyagam is always in my favorites list either in work place or home :-)

Really surprising to see a individual person like Kamal is criticized so much when the entire film industry and section of media is always against Muslims and treats them as unwanted citizens.

Gokul said...

Zahoor,

Sorry for late reply.

Thanks for your wishes.

As far as film industry is concerned, indian film industry acts as a stupid common man, because it takes film for stupid common man, so it acts like that. So it resembles, the common man's mind (podhu buddhi), remember 'thaali sentiment', same mind set applies here also.

Zahoor said...

Gokul,

http://www.maraicoir.com/2009/10/blog-post_15.html

After reading this article my respect for Kamal has raisen 10 folds. Hope you too will feel the same.

Vasu. said...

Good one Zahoor.

உன்னைப்போல் ஒருவனில் மூன்று பேர் தான் தீவிரவாதிகள். ஒருவன் ஆயுதம் விற்கும் ஹிந்து. அவன் பெயர் கரம்சந்த். எல்லா மதத்திலும் தீவிரவாதிகள் இருக்கிறார்கள். சிவசேனா எல்லாம் என்னைப் பொறுத்த வரை தீவிரவாத கட்சி தான்.

இந்த ஒரு படத்திற்காக கமலை ஹிந்து ஆதரவாளர், முஸ்லிம் எதிர்ப்பாளர் என்றெல்லாம் brand செய்வது போல ஒரு அபத்தம் எதுவுமே இல்லை.

ஒரு கலைஞன் இப்படி ஜாதி, மதம் என்றெல்லாம் பிரித்துப் பார்த்து தொழில் செய்ய முடியாது. ஹிந்தி பட உலகை ஆளும் மூன்று பேரும்(சல்மான், ஷாருக், அமீர்) முஸ்லிம் தான். அவர்களை என்ன ஹிந்தி பட உலகம் தள்ளி வைத்து விட்டதா? இங்கே அப்பாஸ், ஆர்யா ஆகியோர் இஸ்லாம் மதத்தை சேர்ந்தவர்கள். விக்ரம் தலித் கிறித்துவர். அவர்களை எல்லாம் அவர்கள் மதத்தின் பின்னணியில பார்க்கிறோம்? சினிமா கலைஞர்களை அவர்கள் நமக்கு தரும் சந்தோஷத்திற்காக ரசியுங்கள்.