Saturday, 28 November 2009

எந்த வேளை?

இங்கே பெங்களூரில் வீடு பார்த்து ஒருவழியாக செட்டில் ஆகியாச்சு (ரொம்ப நாளா ஒரு சந்தேகம் ...செட்டில் ஆவது என்றால் என்ன?) , அதன் ஒரு பகுதியாக வீட்டு வேலை செய்ய ஒரு பெண்மணி தேவை, இங்கே உள்ள அபார்ட்மெண்டில் சொல்ல ஒரு பெண் வந்தார் , சுத்தமான கர்நாடக தமிழ்..பேரம் ஆரம்பித்தது மனைவி ஒவ்வொவொரு வேலையாக சொல்லிக்கொண்டே வர அவர் பொறுமையாக கேட்டு விட்டு சொன்னார் ஒரு வேளைக்கு 500 ரூபாய் , மனைவி யோசித்து பரவாயில்லை நீ ஒரு வேளை வந்தால் போதும் என்று சொன்னாள், பதில் கேள்வி "எந்த வேளை?" ..சற்று யோசித்து மனைவி சொன்னது "காலை" . சற்று நேரம் மௌனம் , "இல்லம்மா எந்த வேளை செய்யணும்?" இப்படி சில தத்துவ விசாரணைகள்  நடந்து முடிந்த பின் தெரியவந்த செய்தி,அந்த பெண் சொன்னது வேளை அல்ல வேலை, அதாவது வீடு பெருக்க 500 பாத்திரம் கழுவ 500 , துணி துவைக்க 500....

ok, bye, எனக்கு நிறைய வேளை sorry வேலை இருக்கு (துணி துவைக்கணும், பாத்திரம் கழுவனும் ...) , அடுத்த பதிவில் பார்ப்போம்.

2 comments:

Prathap Kumar S. said...

ஹஹஹ. வாங்கற சம்பளத்தை அவிங்க கிட்டதான் கொடுக்கனும் போலிருக்க...
தன்கையே தனக்குதவி... தொடரட்டும் உங்கள் பணி...

Gokul said...

ஹாய் பிரதாப்,

வருகைக்கு நன்றி! எல்லாம் நம் வட இந்திய சகோதர்களின் கைங்கர்யம். :-)