Friday 1 January 2010

மைக்கேல் மதன காம ராஜன்

பொதுவாக எந்த துறையில் இருந்தாலும், எல்லோருக்கும் ஒரு பொற்காலம் இருக்கும், அந்த நேரத்தில் அவர்களின் திறமை உச்சத்தில் இருக்கும், அந்தஸ்து உயரும் , மிகப்பலருக்கு அது அவர்களின் முப்பதுகளில் இருக்கும்.

இது கலைஞர்கள் விஷயத்தில் மிகவும் பொருந்தும், அதிலும் (தோற்றம் முக்கியமாக இருப்பதால்) நடிகர்களுக்கும் அதிக அளவு பொருந்தும்.

சிவாஜி கணேசன் முப்பதுகளில் இருந்த போதுதான் "பா" வரிசை (பாலும் பழமும், பாகப்பிரிவினை , பாசமலர்...).என்று கலக்கினார், இப்படியே ரஜினியும், மற்றவர்களும்....

கமலும் அவருடைய முப்பதுகளில் தோற்றத்திலும், நடிப்பிலும் அப்போது உச்சத்தில் இருந்தார். குறிப்பாக 1986 (புஷ்பக்/பேசும் படம் ) முதல் 1993 (குணா) வரை அவரின் creativity உச்சத்தை தொட்டது அப்போது வந்த படங்கள்தான் கமலின் பல்வேறு பரிணாமங்களை காண்பித்தன. அதில் எனக்கு பிடித்தது "மைக்கேல் மதன காம ராஜன்" , பல பேர் கமலின் சிறந்த படங்களாக மூன்றாம் பிறையும்,நாயகனையும் சொல்வார்கள், ஆனால் உண்மையிலேயே அவரின் மிகச்சிறந்த நடிப்பு + கதை + முக்கியமாக திரைக்கதை +அதற்கேற்ப வசனம் என்று 'கலை' கட்டியது மை.ம.கா.ரா தான்.

பொதுவாக triple ஆக்க்ஷன் என்று பண்ணும்போது இரண்டு கரெக்டர்கள்தான் அதிகம் interact பண்ணும்படி அமைத்து இருப்பார்கள், மூன்றாவது கரெக்டர் கதை அமைப்பில் இருந்து சற்று விலகி வரும்படியே காண்பித்து இருப்பார்கள்.ஆனால் இந்த படத்தில் 4 கரெக்டர்கள் audience- உடன் சம அளவில் பேசும்படி இருக்கும், அந்த நான்கு கரெக்டர்களுக்கான உடை, hair style, costume, dialogue delivery , body language என்று அனைத்திலும் வித்தியாசம் காட்டி இருப்பார்.

எனக்கு பிடித்த சில nuances....

ஆனால் இந்த படத்தில் 4 கரெக்டர்கள் audience- உடன் சம அளவில் பேசும்படி இருக்கும், அந்த நான்கு கரெக்டர்களுக்கான உடை, hair style, costume, dialogue delivery , body language என்று அனைத்திலும் வித்தியாசம் காட்டி இருப்பார்.

எனக்கு பிடித்த சில

- பணக்கார மதன் கமலின் - ஆங்கில உச்சரிப்பு.
-லோக்கல் தீயணைப்பு வீரர் ராஜுவும் / மதனும் பேசிக்கொள்ளும் இடம். (catch my point நினைவிருக்கிறதா!)
-காமேஸ்வர அய்யரின் whole characterization.
-படத்தின் மொத்தமான திரைக்கதை.
-crazy மோகனின் அற்புதமான வசனம், குறிப்பாக
- காமேஸ்வர அய்யரும் ஊர்வசியும் மோதிக்கொள்ளும் இடங்கள்.
-காமேஸ்வர அய்யர் மளிகை கடையில் பேசும் வசனங்கள்.
-நாகேஷ் சம்பந்தப்பட்ட காட்சிகள்
-படத்தை மற்றும் ஒரு முறை பார்க்கும்போது, காமேஸ்வர அய்யர் வரும் காட்சிகளில் இளையராஜாவின் பின்னணி இசையை கவனியுங்கள்.

-மைக்கேல், மதன், காமேஸ்வரன் மூவரும் அறிமுகமாகும் காட்சிகளில் உள்ள Link..

3 comments:

Vasu. said...

MMKR is definitely one of the best movies in Kamal's career. The screenplay is by Kamal and dialogues by Crazy Mohan. A "classic" that you can watch any number of times.

இராகவன் நைஜிரியா said...

எனக்கு ரொம்ப பிடிச்சப் படம் மைக்கேல் மதன காம ராஜன்.

படம் முழுக்க சிரிச்சுகிட்டே இருக்கலாம்.

மிக நல்ல அலசல்

Gokul said...

ராகவன்,
வருகைக்கு நன்றி.., நம்மை போல் பல பேர் இந்த படத்தின் ரசிகர்களாக இருக்கின்றனர் இன்றும்....