Sunday, 25 April 2010

உங்க கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லையா?

பாண்டியிலிருந்து காரில் சென்னை வந்து கொண்டிருந்தேன். கிழக்கு கடற்கரை சாலையில் "மாயாஜால்" அருகே வரும் போது வாகனங்களின் வேகத்தை கண்காணிக்கும் "Interceptor" என்ற போலீஸ் குழு ஒன்று நின்று கொண்டிருந்தது. என் காரை ஓரம் கட்டும்படி தூரத்தில் இருந்தே சமிக்ஞை செய்தனர். கார் நின்றவுடன் அருகே வந்த காவலர் ஒருவர் "நீங்க, 75 கிலோமீட்டர் வேகத்துல வரீங்க, இங்க 40 தான் போகலாம்" என்றார். பாண்டியில் இரண்டு "Fosters" அடித்திருந்ததால் எங்கே குடி போதையில் வாகனம் ஓட்டினார் என்று 3000 ரூபாய் தீட்டி விடுவார்களோ என்று பயந்து, "சரி, என்ன செய்யலாம் சொல்லுங்க?" என்றேன். "300 ரூபாய் அபராதம் கட்டுங்க, நான் ரசீது தரேன்" என்றார். சரி என்று என் Driving License மற்றும் 300 ரூபாய் பணம் கொடுத்தேன். அதை வாங்கிக்கொள்ளாமல் "நீங்க எங்க வேலை செய்யறீங்க?" என்றார் அவர். "Manufacturing Industry" என்றேன்.

சரி, "பைன் எல்லாம் வேண்டாம். ஒரு நூறு ரூபாய் கொடுத்தது போங்க" என்றார். நான் அபராதம் செலுத்த தயாராக இருந்தேன். ஆனால், அரசு ஊழியரோ அரசுக்கு வருமானம் வேண்டாம், என்னை கவனித்துகொள் என்கிறார். சரி என்று நூறு ரூபாய் இருக்கிறதா என்று பார்த்துக்கொண்டிருந்த போது, "எவ்வளோ இருந்தாலும் கொடுங்க, நூறு ரூபாய் இல்லாட்டி பரவாயில்லை" என்றார். சரி என்று சில்லரையாக இருந்த தொண்ணூறு ரூபாய் பணத்தை எடுத்துக் கொடுத்தேன். மனிதர் அதை வாங்கிக்கொண்டு பம்மியபடி, "சார் நான் பணம் வாங்கிட்டேன்னு கோச்சுக்க கூடாது. இனிமே வேகம் பார்த்து போகணும், சரியா? என்றார். உடம்பை நெளித்துக்கொண்டு அதை அவர் சொன்ன பாணி இருக்கிறதே, அதை எப்படி விவரிப்பது என்று தெரியவில்லை. தன் சுய லாபத்துக்காக இயங்கும் இவர்கள் எப்படி சட்டத்தை காப்பார்கள்?

6 comments:

Simulation said...

தேவையான இடங்களில் வேகத்தடை அமைக்கப் பெற்றிருக்க, முதலில் ஈ.சி.ஆர் மற்றும் ஓ.எம்.ஆர் சாலைகளில் வேகக் கட்டுப்பாடு 40 கி.மீ என்பதே ஒரு பேத்தல். இந்த வேகத்தில் எல்லா வண்டிகளும் சென்று கொண்டிருந்தால் பெட்ரோல் விரையம் என்பது சர்வ நிச்சயம். இந்த வேகத்தடை பாதுகாப்பை முன்னிட்டதல்ல. காசு அடிக்கும் பொருட்டு மட்டுமே.

- சிமுலேஷன்

Gokul said...

வாசு இரு விஷயங்கள்
-நீ Manufacturing industry என்று எதற்கு சொன்னாய்? அதற்க்கான after effect ஏதாவது தெரிந்ததா?
-உனக்கு ஏதோ நல்ல நேரம், சில போலீஸ் நண்பர்கள் மொத்த பணத்தையும் வாங்கிக்கொண்டு அதே முறைப்போடு வழி அனுப்புவார்கள்

Vasu. said...

கோகுல் ,

என் பர்ஸ் முழுதும் அவர் பார்க்கும்படியான ஒரு கோணத்தில் நின்றிந்தார் அவர். IT என்று சொல்ல போய் மொத்தமாக லவட்டிக் கொண்டு விடுவாரோ என்று பயந்து "Manufacturing" என்றேன். அவர் கம்மியாக பணம் கேட்டதற்கு அதுவும் ஒரு காரணம் என்று நினைக்கிறேன். ஒரு வேளை "Drunken Driving" என்று பிடித்திருந்தால் நீ சொல்வது போல் மொத்தமாக ராவியிருப்பார்கள்.

Vasu. said...

Simulation,

முதலில் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி. mayajaal அருகே தான் 40 என்றார் அவர். அது கூட அறுபது முதல் அறுபத்தைந்து வரை என்றால் போனால் போகட்டும் என்று விட்டுவிடுவோம். நீங்கள் அதையும் தாண்டி வந்ததால் தான் பிடித்தோம் என்றார். முதலில் அந்த வேகம் காட்டும் கருவி எப்படி வேலை செய்கிறது என்றே தெரியவில்லை. கூட இருந்த என் நண்பர் கூட எனக்கெனவோ நாம் 75 கிலோமீட்டர் வேகத்தில் வந்திருப்போம் என்று தோன்றவில்லை என்றார். நீங்கள் சொல்வது போல் கலக்க்ஷன் தான் குறி என்று முடிவு செய்த பிறகு காரில் போதை மருந்து இருந்தது என்று சொன்னால் கூட நம்மால் எதுவும் செய்ய முடியாது.

இராகவன் நைஜிரியா said...

நண்பரே பைன் கட்டுகின்றேன் என்று சொல்லி நீங்க ஃபைன் கட்டிவிட்டு, ரிசிப்ட் வாங்கி பார்த்தீர்கள் என்றால், ஃபைனுக்கான காரணம் வேகமாக ஓட்டியதற்கு என்று இருக்காது... வேறு எதாவது ஒன்றில் தான் புக் செய்து ரிசிப்ட் கொடுத்து இருப்பார்கள். இது என்னுடைய அனுபவம்.

மேலும் வேகக்கட்டுப்பாட்டு எச்சரிக்கை அந்த ரோடில் நீங்க பார்க்கவே இயலாது..

Gokulganth said...

Vasu ....

Nice one ...

But ungalooda response vera mathiri irunthrukum nee ninaichaen...

but little disappointment at the end,

தன் சுய லாபத்துக்காக இயங்கும் இவர்கள் எப்படி சட்டத்தை காப்பார்கள்?

Also the above statement perfectly suits to common people like me,u and everyone...