Monday 24 May 2010

கோலிவுட் டு பாலிவுட்



நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக மும்பை, டெல்லி போன்ற நகரங்களில் இருந்து தமிழ் திரையுலகிற்கு ஹீரோயின்கள் இறக்குமதி நடக்கிறது. ஆனால், அங்கிருந்து வரும் ஹீரோக்கள் இங்கு பெரிய அளவில் பெயர் பெற்றனர் என்று சொல்ல முடியாது. அதே நிலை தான் இங்கிருந்து அங்கு செல்லும் ஹீரோக்களுக்கும். ஹேமமாலினி, ஸ்ரீதேவி, தபு என்று சில நடிகைகள் தெற்கில் இருந்து சென்று அங்கு வெற்றி பெற்றுள்ளனர். அசின் "One film wonder". அவரை இந்த பட்டியலில் இப்போது சேர்க்க முடியாது. பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். த்ரிஷா கூட தற்போது பிரபல நடிகர் அக்ஷய் குமாருடன் இணைந்து ப்ரியதர்ஷன் இயக்கத்தில் "Khatta Meeta" என்ற படத்தில் நடித்து வருகிறார். அவர் பாலிவுட்டில் வெற்றி பெறுகிறாரா என்பதையும் பார்ப்போம்.

ஹீரோக்களை பொறுத்த வரை கமல், அரவிந்த்சாமி என்று நிறைய பேர் பாலிவுட்டில் தங்களை நிலை நாட்டிக்கொள்ள முயற்சித்தனர் ஆனால் யாரும் அதில் வெற்றி பெறவில்லை. ரஜினி கூட சில பாலிவுட் படங்களில் நடித்தார். அந்த வரிசையில் இப்போது சூர்யா. சூர்யா மும்பையில் நுழைய முயற்சிகள் எடுக்கவில்லை. ராம் கோபால் வர்மா தயாரித்து இயக்கம் "ரத்த சரித்திரம்" என்கிற படம் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளில் எடுக்கப்படுகிறது. விவேக் ஓபராய் கதாநாயகனாக நடிக்க சூர்யா வில்லனாக நடிக்கிறார். ஆந்திராவில் பெரிய ரௌடிகளாக இருந்த பரிதள ரவி மற்றும் மட்டலசெருவு சூரி பற்றிய கதை இது. இதில் ரவி வேடத்தை விவேக் ஓபராயும் சூரி பாத்திரத்தில் சூர்யாவும் நடிக்கின்றனர். நிஜ வாழ்க்கையில் ரவியை கொன்று விட்டு ஜெயிலுக்கு சென்ற சூரி சில மாதங்களுக்கு முன்பு தான் விடுதலையானார். மறைந்த ராஜசேகர ரெட்டி அவர்கள் குடும்பத்திற்கு கூட இந்த கொலையில் தொடர்பிருந்தது என்று கூறப்படுகிறது. இதே படத்தில் மறைந்த ஆந்திர முதல்வர் என்.டி.ஆர் ஆக சத்ருகன் சின்ஹா நடிக்கிறார்.

சூர்யாவின் நடிப்பை ராம் கோபால் வர்மா தனது வலைமனையில் புகழ்ந்து தள்ளியிருக்கிறார். Mr.Eyes, Mr.Body என்று ஏகத்திற்கு சூர்யாவை வர்ணித்திருக்கிறார் ராம் கோபால் வர்மா. கடும் உழைப்பால் இத்தனை தூரம் வந்துள்ள சூர்யா பாலிவுட்டிலும் வெற்றி பெற நம் வாழ்த்துக்கள்.

4 comments:

Mohan said...

தெற்கிலிருந்து வடக்கிற்கு போன நடிகர்கள் வரிசையில் கமலை விட்டு விட்டீர்களே? எனக்குத் தெரிந்து ஒரளவிற்கு இந்தி படங்களில் நடித்து முதலில் 'ஹிட்' கொடுத்த நடிகர் அவர்தான்.

Vasu. said...

Mohan,

நான் கமல், அரவிந்த்சாமி இருவரையும் குறிப்பிட்டிருக்கிறேன். உண்மை, கமல் சில வெற்றிப் படங்கள் தந்தார்.ஆனால் Ek Duje Ke Liye, Sanam Teri Kasam, Girafftar , Chachi 420 போன்ற சில படங்களை தவிர பாலிவுட்டில் கமல் படங்கள் பெரும்பாலும் டப்பிங் படங்களே(அப்பு ராஜா, ஹிந்துஸ்தானி, தசாவதாரம், மும்பை எக்ஸ்பிரஸ்). அரவிந்த்சாமி கூட "பாம்பே" தந்த புகழால் பாலிவுட்டில் சில படங்கள்(Saat Rang Ke Sapne, Raja Ko Rani Se Pyar Ho gaya) செய்ய முயற்சித்தார் ஆனால் அவை வெற்றி பெறவில்லை.

Zahoor said...

நடிகர்கள் வெற்றிபெறவில்லை என்றாலும், பாலிவுடில் பட்டையை கிளப்பும் டெக்னிஷியன்கள் (எடிட்டிங், ஒளிபதிவு) தமிழகத்தை சேர்ந்தவர்களே. ரவி கே. சந்திரன், கே வி ஆனந்த் போன்றவர்கள் சிறந்த உதாரணம்.

Vasu. said...

@Zahoor,

Very true. Ravi K.Chandran, Thiru, Manikandan, Nirav Shah, K.V.Anand are some very good examples