Thursday 29 July 2010

நெகிழ்ச்சி

இன்று காலை பிரீமொண்டிலிருந்து சான் பிரான்சிஸ்கோ செல்லும் ரயிலில் பக்கத்துக்கு இருக்கையில் இருந்தவர் படித்துக் கொண்டிருந்தது "அதீதத்தின் ருசி - மனுஷ்யபுத்திரன்".சில வரிகள் படித்தார். புன்னகைத்தார். ஜன்னல் வழியே இயற்கை அழகை பார்த்தார். மீண்டும் சில வரிகளை படித்து ரசித்தார். தன் காதலி/மனைவி பற்றி நினைத்தாரோ என்று எண்ணினேன்.பேச நினைத்தேன் ஆனால் பேசவில்லை.அவர் செய்கையை ரசித்தபடி பயணித்தேன்.பதினைந்தாயிரம் மயிலுக்கு அப்பால் படிக்கும் போது தமிழ் கொடுக்கும் கிறக்கம் தனி தான். அதை சொற்களில் அடைப்பது கடினம்.

2 comments:

அ.முத்து பிரகாஷ் said...

Vasu...நானும் உங்கள் வரிகளை படித்து கிறங்குகிறேன் ...
பதினைந்தாயிரம் மைலுக்கு அப்பால் படிக்கும் போது தமிழ் கொடுக்கும் கிறக்கம் தனி தான். அதை சொற்களில் அடைப்பது கடினம் தான் .

Vasu. said...

நன்றி நியோ