Thursday, 16 June 2011
அமெரிக்க பஸ் பயணம்
Sleeping with the Enemy படத்தில் Greyhound பஸ் பிடித்து Julia Roberts Iowa செல்லும் காட்சியை பார்த்த காலத்தில் இருந்தே அமெரிக்காவிற்குள் இயங்கும் தொலைதூர பேருந்துகளில் ஒரு முறை பயணம் செய்ய வேண்டும் என்கிற ஆசை உண்டு(இப்படி தான் ஆரம்பிக்கணும். கலைஞர் சொல்வாரே, பெரியார் சிறுவனாய் இருந்த காலம் தொட்டே எனக்கு தி.க மீது ஈடுபாடு உண்டுன்னு. அந்த ஸ்டைல் இது)
இந்த அமெரிக்க பயணத்தில் அந்த வாய்ப்பு கிடைத்தது. கென்டகி மாநிலத்தில் உள்ள எலிசபெத்டவுன் நகர் சென்று அங்கிருந்து சின்சின்னாட்டி, சிகாகோ நகரங்களில் அலுவல் பொருட்டு சிலரை சந்தித்து விட்டு மீண்டும் சென்னை வருவதாக பயண திட்டம்.
சிகாகோவில் இருந்து நாற்பத்தைந்து நிமிட பயணத்தில் லூயிவில் சென்றடையலாம். லூயிவில்லில் இருந்து முப்பது மைல் தொலைவில் உள்ள எலிசபெத்டவுன் நகரில் எனக்கு ஒன்றரை வாரம் அலுவலக பணி. பணி முடியும் தருவாயில் வாடகை கார் ஒட்டிக்கொண்டு நாமே சின்சின்னாட்டி, சிகாகோ செல்லலாம் என்று முடிவு செய்து சில பிரபலமான வாடகை கார் கம்பெனிகளை அணுகிய போது, இந்தியாவில் பெற்ற அசல் ஓட்டுனர் உரிமம் வேண்டும் என்றார்கள். அது என்னிடம் இல்லாததால் வேறு மாற்றீடுகளை யோசிக்க ஆரம்பித்தேன்.
ரயில் பயண நேரம் அதிகமாக இருந்தாலும் மேலும் நான் இருந்த இடத்தில் இருந்து சின்சின்னாட்டிக்கு நேரடி ரயில் வசதி இல்லாததாலும் பேருந்தில் செல்லலாம் என்று முடிவெடுத்தேன். உடனே Greyhound நினைவிற்கு வர, எலிசபெத்டவுன்-சின்சினாட்டி, சின்சினாட்டி-சிகாகோ தடங்களுக்கு முன்பதிவு செய்து கொண்டேன். அமெரிக்காவின் பல்வேறு மாநிலங்களுக்கு Greyhound பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சொல்லப்போனால் Greyhound அளவிற்கு அமெரிக்க நகரங்களை இணைக்கும் வேறு பெரிய பேருந்து பிணையம் எதையும் நான் இணையத்தில் பார்க்கவில்லை.
கடந்த செவ்வாய் இரவு பத்து மணிக்கு சின்சின்னாட்டி செல்ல பேருந்து. பத்து மணி பஸ்சுக்கு நான் ஒன்பது மணிக்கே பஸ் நிறுத்தம் சென்றுவிட்டேன். இங்க பஸ் நிறுத்தம் அப்படின்னு சொல்றது ஒரு பெட்ரோல் பங்க். அதுக்குள்ள இருந்த ஒரு கடைல தான் பஸ் டிக்கெட் கொடுத்தாங்க. டிக்கெட் கொடுத்த போதே இங்க தான் வந்து பஸ் ஏறனும்னு சொன்னங்க. சரி நம்ம தான் சீக்கிரமா வந்துட்டோம் நேரம் ஆக ஆக கூட்டம் வரும்னு பார்த்தா பத்து மணி வரைக்கும் பஸ்ஸே வரல. அத்துவான காடு, அந்த கடைய தவிர ஒண்ணுமே இல்ல பக்கத்துல.மனசுக்குள்ள "அமெரிக்க பெட்ரோல் பங்கில் இந்திய வாலிபர் சுட்டுக் கொலை" அப்படின்னு தலைப்பு செய்தி எல்லாம் ஓட ஆரம்பிச்சுது. பத்தரை ஆச்சு, பதினொன்னு ஆச்சு பஸ்ஸை காணும். ஒரு வழியா பதினோன்னேகாலுக்கு வந்து சேர்ந்துச்சு.
பொட்டியை டிரைவர் கிட்ட கொடுத்து வண்டியோட வயிற்றுப் பகுதியில போட்டுட்டு உள்ள ஏறினா நல்ல கூட்டம். பெரும்பாலும் கறுப்பர்கள். உட்கார எடம் கேட்டா நம்மூர் மாதிரி ஆள் வருது, ஒன்னுக்கு போயிருக்காங்க அது இதுன்னு கதை. இருட்டுல ஒருத்தர் முகமும் தெரிய வேற இல்ல. பெரிய மனசு பண்ணி கடைசில ஒரு ஏழடி உருவம் பக்கத்துல ஒக்கார இடம் கொடுத்துச்சு. ரொம்ப சோர்வா இருந்ததால கொஞ்சம் கண் அசந்து பக்கத்து சீட்டு ஏழடி பயணி மேல சாஞ்சிட்டேன் போல. "Get the F*** off my shoulder" அப்படின்னு கத்தினபோ தான் அது பொம்பள புள்ளைன்னு தெரிஞ்சுது. சிறுக்கி மவ, உடம்பு முழுக்க போர்வைய போட்டு மறைச்சு வெச்சிருக்கா. பேருக்கு டிரஸ்ன்னு ஏதோ போட்டு இருந்தா. அவ கத்தின கத்துல அடுத்த முறை தூங்கி விழுந்தா வன்புணர்ச்சி பண்ணிடுவாளோன்னு பயந்துகிட்டே தூங்காம ஒரு வழியா மூணு மணிக்கு சின்சினாட்டி வந்து சேர்ந்தேன்.இங்கெல்லாம் பஸ்சுக்குல்லையே கழிப்பறை வசதி.நம்மூர் மாதிரி,"மாப்ள, ஒன்னுக்கு போக வண்டி எப்படியும் விழுப்புரத்துல அரை மணி நேரம் நிக்கும்.பக்கத்துல இருக்கற டாஸ்மாக்ல அஞ்சே நிமிஷத்துல ஒரு கட்டிங்க போட்டுட்டு வந்திரலாம்னு" எல்லாம் இங்க பிளான் பண்ண முடியாது போல.
சின்சின்னாடில வேலை முடிச்சிட்டு திரும்ப புதன் மதியம் ஒரு மணிக்கு அங்கிருந்து சிகாகோ பயணம். இதலேயும் பெரும்பாலும் கறுப்பர்கள் தான் ஆனா கூட்டம் அதிகம் இல்ல. சாப்பாட்டுக்கெல்லாம் எங்கேயும் நிறுத்தலை.ஒரே ஒரு எடத்துல மட்டும் குடிக்க எதாவது வாங்கிக்கிங்கனு ஒரு அஞ்சு நிமிஷம் நிறுத்தினாறு டிரைவர். வழி முழுக்க நல்ல மழை. ஐபாடுல இளையராஜா ஹிட்ஸ். மழையை ரசிச்சுகிட்டே சாயங்காலம் ஆறு மணிக்கு சிகாகோ வந்து சேர்ந்தேன்.
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
malaiyil payanam seivathu arumaiyaana anubam thaan.. vaalththukkal
//. "Get the F*** off my shoulder" அப்படின்னு கத்தினபோ தான் அது பொம்பள புள்ளைன்னு தெரிஞ்சுது. சிறுக்கி மவ, உடம்பு முழுக்க போர்வைய போட்டு மறைச்சு வெச்சிருக்கா. பேருக்கு டிரஸ்ன்னு ஏதோ போட்டு இருந்தா.//
vaasu, enjoy...
நன்றி சரவணன். இருந்தாலும் மழையில் தனியே பயணம் செய்தது குறித்து வருத்தமே.. :-))
நண்பா கோகுல் ,
உன் மனசாட்சியை தொட்டு சொல்லு, அந்த சமயத்துல என்ஜாய் பண்ணவா தோணும்?
Post a Comment