Saturday, 27 August 2011

யோஹான்: விஞ்ஞானத்தை வென்ற வீரன்: பாகம் ஒன்று

நண்பர் ஒருவர்(நடிகர் விஜய்யின் ரசிகர்) ஓரிரு நாட்களுக்கு முன் சாட் செய்கையில் "பாஸ், பாத்தீங்க இல்ல, எப்படி ஓட்டுவீங்க எங்க தளபதிய, கெளதம் மேனனே எங்க ஆளை வெச்சு படம் பண்றாரு. கமல், சூர்யா அப்பறம் விஜய். இன்னொரு வேட்டையாடு விளையாடு தான் "யோஹான் - அத்தியாயம் ஒன்று". விஜய் பயங்கர உலக லெவல் உளவாளியாம் படத்துல. ஐரோப்பா, அமெரிக்கா, சீனா எல்லா எடத்துலயும் ஷூட்டிங் பண்றாங்களாம் " என்றார்.

நமக்கு தான் "அந்த" கொழுப்பு கொஞ்சம் ஜாஸ்தியாச்சே, "ஆமா பாஸ், த்ரிஷா கற்பு காணாம போய்டுதாம். அதை தேடி விஜய் நீங்க சொன்ன நாட்டுக்கெல்லாம் போய் கடைசில இந்தியா வந்து கண்டு பிடிக்கறார்னு நான் கூட படிச்சேன்" என்றேன். நண்பருக்கு கோபம் வந்து விட்டது. உடனே கமலை போட்டுத் தாக்க ஆரம்பித்தார்."இந்தியாவிலேயே ராம் லீலா மைதானத்துக்கு போய் அன்னா ஹசாரேவை ஆமோதிச்ச ஒரே நடிகர் விஜய் தான். கமல் எல்லாம் என்ன பண்றாரு? ஒரு அறிக்கையாவது விட்டாரா லோக்பால் பத்தி? அவனை எல்லாம் ரசிக்கறீங்க..என்ன மனுஷன் நீயெல்லாம்" என்றார். இதற்கு மேல் பேசினால் மம்மி பாவம், டாடி பாவம் நிலை வரும் என்பதால் வேறு விஷயங்கள் பேச ஆரம்பித்தேன். ஆனால், நண்பர் சொன்ன யோஹான் விஷயம் மட்டும் உள்ளுக்குள் ஓடிக்கொண்டிருந்தது. இதையே வைத்து கெளதம்-விஜய் ஷூட்டிங் செய்யும் போது உரையாடுவது போல் ஒரு கற்பனை பதிவு போட்டால் என்ன என்று தோன்றியது. விளைவு, கீழே நீங்கள் படிக்கவிருக்கும் பகுதி.

ஒரு வழியாக விஜய்க்கு Knot எனப்படும் ஒரு வரிக்கதை(உதாரணமாக, விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் Knot இது தான். திரைத்துறையில் வெற்றிக்கு போராடும் இளைஞன் ஒருவன் வேறு மதத்தை சேர்ந்த பெண் மீது காதல் வசப்படுகிறான். காதலுக்கும் வெற்றிக்கும் இடையில் அவன் சந்திக்கும் சோதனைகள் என்ன? ) சொல்லி சம்மதம் பெற்று விட்டார் கெளதம். இன்று படப்பிடிப்பு இனிதே ஆரம்பம்.

கெளதம்: Sir, Welcome to the first day shoot of Yohan. It's going to be a milestone in our careers. I am all thrilled and excited about working with you and i am sure you will have a great time working with me. Let me explain you the first shot. The film starts in flashback mode. You are sitting in front of the heroine's deadbody with fire in your eyes thinking about the villain(விஜய் வழக்கம் போல் தன் பாணியில் கையை தூக்கி, ஒரு நிமிஷம், ஒரு நிமிஷம், ஒரு நிமிஷம்..நிறுத்துங்க)

கெளதம்: என்ன சார்?

விஜய்: முதல் நாள் ஷூட் இப்படியொரு சீனா? நானும் ஹீரோயினும் வில்லன் பாடி முன்னாடி..அதுவும் வில்லன் கண்ணை நொண்டி நெருப்புல போடற மாதிரி..நல்லா இல்ல சார்..வேற எதாவது சீன் எடுப்போம்..மொதல்ல ஆரம்பிச்ச போ அந்த மைல்கல் சீன் ஒன்னு சொன்னீங்களே..கில்லி "அர்ஜுனரு வில்லு, அரிச்சந்திரன் சொல்லு" அந்த பாட்டு மாதிரி எதாவது ஹைவே சீனா..அது பண்ணலாம்..

கெளதம்: சார், நான் கதை already எழுதிட்டேன். நீங்க ஏன் தனியா create பண்றீங்க?

விஜய்: அப்போ மொதல்ல கதைய ஒரு பத்து நிமிஷத்துல முழுக்க சொல்லுங்க..நான் கொஞ்சம் என் காரெக்டரை உள்ள வாங்கிக்கறேன். நடிக்க வசதியா இருக்கும்.

கெளதம்: (மனதிற்குள்) என்னத்த உள்ள வாங்க போறீங்க..ஒரே எக்ஸ்ப்ரஷன் தான் எல்லா படத்துலயும்..சரி சார், கதை சொல்றேன்..நல்ல கேட்டுக்குங்க..

மூணு முறை கல்யாணம் ஆகி விவாகரத்தான CBI ஆபிசர் நீங்க..நியூயார்க் நகர்ல காணாம போன ஒரு பொண்ணு கேஸ் விஷயமா உங்கள சென்னை போலீஸ் contact பண்றாங்க..உங்கள நியூயார்க் போய் பல் துலக்க சொல்றாங்க. U know what i mean..Enquiry..அந்த பொண்ணு விஷயமா நீங்க ந்யுயார்க் போறீங்க..

விஜய்: அது துப்பு துலக்கறது..

கெளதம்: இதுக்கு தான் தமிழ் தெரிஞ்சவங்களோட தமிழ் படம் பண்றதே இல்ல..பெரிய இம்சை..yeah..you are right..துப்பி தொலைக்கறது.

விஜய்:ஒரு நிமிஷம் சார், நியூயார்க்ல காணாம போன பொண்ணுக்கு எதுக்கு சார் சென்னை போலீஸ் என்னை தொடர்பு..லாஜிக் இல்லையே..

கெளதம்:(மனதிற்குள்)பில்டிங் மேலேந்து எம்பி பறக்கற ஹெலிகாப்டர பிடிக்கற மாதிரி சீன் வெக்கற டைரக்டர் கிட்ட என்னிக்காவது லாஜிக் கேட்டிருப்பாரா இவரு..எல்லாம் நேரம்..
சார், அந்த பொண்ணு தமிழ் பொண்ணு..அதான் சென்னை போலீஸ் உங்க கிட்ட பேசறாங்க..

விஜய்: இப்போ லாஜிக் கரெக்ட்..மேல சொல்லுங்க..இருங்க இருங்க..மூணு முறை கல்யாணம் ஆகி விவாகரத்து..அது எதுக்கு..

கெளதம்: மூணு கல்யாணம் பண்ணி divorce ஆகி பெண்களே பிடிக்காம இருக்கீங்க..இப்போ நீங்க ந்யுயார்க்ல தேட போற பொண்ணு தான் ஹீரோயின்..அவ மேல உங்களுக்கு லவ் வருது..கிளைமாக்ஸ்ல I want to make love to you அப்படின்னு சொல்றீங்க..அது தான் ரியல் லவ். ஆடியன்ஸ் பீல் பண்ண போற சீன்..அதுக்கு தான் இந்த பில்டப்..நீங்க சென்னைல flight ஏறி US போறதுக்குள்ள உங்க மூணு கல்யாணம் and divorce thru flashback காட்றோம் ..

விஜய்: எனக்குன்னு லேடி ஆடியன்ஸ் இருக்காங்க..மூணு கல்யாணம் ஆகி விவாகரத்தான மாதிரி காட்டின படம் பி, சி சென்டர்ல அடி வாங்கும்..வேணும்னா மூணு காதல் தோல்வி வெச்சுக்கலாம்..அந்த பொண்ணுங்க என்னை ஏமாத்தினா மாதிரி..
எனக்கு படிப்பறிவு இல்ல..அதனால என்னை காதலிக்கற மாதிரி நடிச்சு ஏமாத்தறாங்க.."பூவே உனக்காக" படத்துல சொன்ன வசனத்தை வேணும்னா இங்க வெச்சுக்கலாம்.."படிப்பை பார்த்து வரதுக்கு காதல் ஒன்னும் டிகிரி இல்ல..அது ஒரு பீலிங்.."

கெளதம்:(கடுப்புடன்)சார்.. சார்.. சார்.. படிக்காம எப்படி சார் CBI ஆபிசர் ஆனீங்க..ஒரு லாஜிக் வேண்டாமா..ஆடியன்ஸ் எப்படி ஒத்துப்பாங்க..

விஜய்:அதெல்லாம் யோசிச்சு இருந்தா நான் இத்தனை வருஷம் இந்த துறையில இருந்திருக்கவே முடியாது..

கெளதம்: இருந்தாலும் என் படத்துக்குன்னு ஒரு ஆடியன்ஸ் இருக்காங்க சார்..என்னை பேரரசு ஆகிடாதீங்க..நான் கதைய சொல்லி முடிக்கிறேன்..பேசாம கேளுங்க..So, நியூயார்க் போறீங்க..அங்க தான் வில்லனும் இருக்காரு..அவரு Florida Kennedy Space Center(NASA) பெரிய scientist..ஆனா Psycho..இன்னும் ரெண்டு மாசத்துல Mars exploration விஷயமா launch பண்ண போற ராக்கெட்ல ஹீரோயின ஒளிச்சு வெச்சு இருக்காரு..நீங்க அதை கண்டுபிடிக்கறீங்க..

விஜய்: நல்லா இருக்கு கெளதம்..இந்த நிமிஷத்துலேந்து நான் ஒரு விஞ்ஞானி..ஷூட் போலாம்..
(ஏற்கனவே கதை சொல்லி அரை நாள் ஓடிவிட்ட சோகத்தில் கெளதம், படபிடிப்பை மறுநாளைக்கு தள்ளி வைக்கிறார்.)

-தொடரும்

5 comments:

A Blip said...

OMG! Manakumaral : கௌதம் ரசிகை நான்.. ஆனாலும் இந்த அளவுக்கு damage பண்ண கூடாது வாசு..

Facts : தமிழ்ல இங்கிலீஷ் பேசி movie எடுக்கற டைரக்டர் அவரு..கஷ்டப்பட்டு இங்கிலீஷ் பிரெஞ்சு ன்னு பல மொழி படம் பார்த்து அதை பிட் ஓட்டறாரு.. தமிழ் இவருக்கு வரது விஜய்க்கு இங்கிலீஷ் வராது.. என்ன கொடும சார் இது!


நல்ல பதிவு வாசு.. நான் மிகவும் ரசித்தவை ...

கெளதம்:(மனதிற்குள்)பில்டிங் மேலேந்து எம்பி பறக்கற ஹெலிகாப்டர பிடிக்கற மாதிரி சீன் வெக்கற டைரக்டர் கிட்ட என்னிக்காவது லாஜிக் கேட்டிருப்பாரா இவரு..எல்லாம் நேரம்..

கிளைமாக்ஸ்ல I want to make love to you அப்படின்னு சொல்றீங்க..அது தான் ரியல் லவ்.

So, நியூயார்க் போறீங்க..அங்க தான் வில்லனும் இருக்காரு..அவரு Florida Kennedy Space Center(NASA) பெரிய scientist..ஆனா Psycho..இன்னும் ரெண்டு மாசத்துல Mars exploration விஷயமா launch பண்ண போற ராக்கெட்ல ஹீரோயின ஒளிச்சு வெச்சு இருக்காரு..நீங்க அதை கண்டுபிடிக்கறீங்க..

வயிறு குலங்க சிரிக்க வைத்ததற்கு நன்றி :)

Vasu. said...

Welcome Krithi..I am a fan of Gowtham as well..

Prathap Kumar S. said...

கெளதம் படத்துல விஜய். சிங்காரவேலன் படத்துல வடிவேலு மாடர்ன் ட்ரஸ் போட்டமாதிரியான ஒரு காம்பினேஷன் இது.

கெளதம் மசாலா சேர்க்காம எப்படி காம்ப்ரமைஸ் பண்ணிக்கப்போறாருன்னுதான் தெரில...

Viji said...

urundu pirandu sirikiraen... ROTFL nu solla vandhaen... humour pidichu irundhadhu... :)

Gokul said...

பிரதாப்,
//கெளதம் படத்துல விஜய். சிங்காரவேலன் படத்துல வடிவேலு மாடர்ன் ட்ரஸ் போட்டமாதிரியான ஒரு காம்பினேஷன் இது.//
இது உங்களுக்கே கொஞ்சம் ஓவரா தெரியலை..?

-விஜய் வெறியன்