மாயவரம் - கும்பகோணம் சாலையில் திருவிடைமருதூர் அருகில் அமைந்துள்ளது கோவிந்தபுரம். தக்ஷிண பண்டரிபுரம் என்று பெயரும் உண்டு. இங்கு அமைக்கப்பட்டுள்ளது விட்டல் ருக்மிணி சமஸ்தான் என்னும் மிகப்பெரிய பாண்டுரங்கன் திருக்கோயில். நேற்று இங்கு செல்லும் வாய்ப்பு கிடைக்கப் பெற்றேன். அற்புதமான கலையழகுடன் கட்டப்பட்டுள்ள கோவில். கோவிலில் உண்டியல் இல்லை. பாண்டுரங்கனுக்கும் ருக்மிணி தாயாருக்கும் அர்ச்சனை, பூஜை எல்லாம் கிடையாது. துளசி மட்டும் வாங்கிச் சென்று கொடுக்கலாம். ரங்கன் மற்றும் தாயாரின் பாதம் தொட்டு வேண்டிக்கொள்ளும் படி பக்தர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். சுவர் மற்றும் கதவேங்கும் ஹரிதாஸ் கிரி மற்றும் ஞானனந்தரின் சிற்பங்கள். பக்கத்தில் பசுக்களை பராமரிக்க கோசாலை. சற்றுத் தள்ளி போதேந்த்றாள் மடத்தில் பித்ரு காரியங்கள் செய்ய தேவையான வசதிகள்.
நேற்று வார நாள் என்பதால் கூட்டம் அறவே இல்லை. சனி, ஞாயிறு தினங்களில் கூட்டம் அள்ளும் என்றார்கள். பாண்டுரங்கனை தரிசித்து விட்டு கீழே இறங்கி வந்தவுடன் இளஞ்சூட்டில் நிறைய காய்கறிகளுடன் சாம்பார் சாதமும் தொட்டுக் கொள்ள அரை வேக்காட்டில் சுண்டலும் தந்தார்கள். இருந்த பசிக்கு அந்த காம்பினேஷன் நன்றாகவே இருந்தது. விஜய் டிவி புகழ் விட்டல் தாஸ் மகாராஜ் தான் இந்த கோயிலை ஸ்தாபித்துள்ளார். கோவிலுக்கு பிரைவேட் செக்யூரிட்டி சர்வீஸ், போட்டோ எடுக்க எங்குமே அனுமதி இல்லை. கோசாலை, பக்தர்கள் வந்து தங்கி சேவை செய்ய பெரிய தங்குமிடம், உட்கார்ந்து பஜனை செய்ய இடம் என்று பல ஏக்கரில் பாண்டுரங்கன் விரிந்து கொண்டிருக்கிறார். இன்னும் கொஞ்ச நாளில் இந்த இடத்தை சுற்றியுள்ள நிலங்களின் விலை விண்ணை எட்டும். நான் திரும்பி வரும் வழியில் பல இடங்களில் அடுக்கு மாடி குடியிருப்புகள் கட்டப்படுவதை கண்டேன். ஆனால், அவசியம் பார்க்க வேண்டிய ஸ்தலம். நேரம் கிடைத்தால் சென்று வாருங்கள்.
2 comments:
கட்டுரை முழுமையாக இல்லை! இந்த சமஸ்தானத்தின் கோசாலை, கோவிலுக்கு முந்தையது என்பதும், மிக நன்றாகப் பரிசீலிக்கப் படுகிறது என்பதும், இந்தக் கோவில் முழுவதும் விட்டல்தாஸ் கச்சேரி செய்து சம்பாதித்ததில் கட்டியது என்பதையும் குறிப்பிட்டிருக்கலாம்.
கிருஷ்ணமுர்த்தி சார்,
தகவலுக்கு நன்றி. வெறும் கச்சேரிகளின் மூலம் இத்தனை பெரிய கோவில் கட்டப்பட்டிருக்க முடியுமா என்பதில் எனக்கு ஐயம் இருக்கிறது. கோசாலை பற்றிய செய்தி நான் அறியாதது.
Post a Comment