போன வாரம் "Times of India"-வில் ஒரு குட்டி பெட்டி செய்தி பார்த்தேன் , எம்.பிக்களின் உறவினர்களும் இனி விமானத்தில் பறக்க சலுகை - என்ற புதிய மசோதாவை மக்களவையில் கொண்டு வந்த அடுத்த ஐந்தாவது நிமிடம் எந்தவித விவாதமுமின்றி நிறைவேற்றபட்டது. மேலும் இது பற்றிய விவரம் தெரியவில்லை...
-உறவினால் என்றால் யார்?
-உறவினர் என்பதற்கான சான்றுகள் என்ன?
-எத்தனை உறவினர்கள் விமானபயனங்கள் செய்யலாம்? எத்தனை முறை செய்யலாம்? டெல்லிக்கும் தொகுதிக்கும் மட்டும்தானா அல்லது மற்ற ஊர்களுக்கும் உண்டா? விமான பயணம் என்றால எகானமி கிளாசா அல்லது பிசினெஸ் க்ளாஸா? ஏர் இந்தியாவா அல்லது தனியார் விமானம் கூடவா? எந்த விவரமும் தெரியவில்லை.
இதன் மூலம் வட்டம் / மாவட்டம்/அல்லக்கை/நொல்லக்கை என்று எல்லாரும் விமான பயணம் செய்யலாம். சென்னையில் இருந்து டெல்லிக்கு குறைந்த பட்சம் 5000 என்று வைத்துக்கொண்டால் கூட இந்த 'உறவினர்கள்' பயணம் செய்ய எவ்வளவு செலவாகும்?
Air Hostess எல்லோரும் பத்திரமாக இருக்கும்படி கேட்டுக்கொள்ள படுகிறார்கள்.