சென்னையில் டிசம்பர் சங்கீத சீசன் களை கட்ட துவங்கிவிட்டது. மயிலாப்பூர் பைன் ஆர்ட்ஸ், மியூசிக் அகாடமி போன்ற சபாக்கள் இன்னும் தங்கள் மார்கழி மாத நிகழ்ச்சிகளை வெளியிடவில்லை ஆனால் பெரும்பாலான சபாக்கள் நேற்றைய நாளிதழ்களில் தங்கள் அரங்கில் நடக்கவிருக்கும் நிகழ்ச்சிகளை தேதிவாரியாக வெளியிட்டுள்ளன.
டி.எம்.கிருஷ்ணா, பாம்பே ஜெயஸ்ரீ, நித்யஸ்ரீ, சஞ்சய் சுப்ரமணியம், உன்னிகிருஷ்ணன் போன்ற பெரிய வித்வான்/விதுஷி ஆகியோரின் கச்சேரிகளை சென்னையில் உள்ள எல்லா சபாக்களிலும் கேட்கலாம். ஆகையால் நான் அதை பற்றி எதுவும் சொல்லப்போவதில்லை. நான் கீழே குறிப்பிட்டுள்ள கச்சேரிகள் கொஞ்சம் "ஸ்பெஷல்" ரகம். நேரம் கிடைத்தால் அவசியம் செல்லுங்கள்.
சபா: மீனாக்ஷி சுந்தரராஜன் பைன் ஆர்ட்ஸ் அகாடமி
நிகழ்ச்சி நடக்கும் அரங்கம்: கோடம்பாக்கம் மீனாக்ஷி கல்லூரி K.R.S. அரங்கம்
நிகழ்ச்சி: A.K.C.நடராஜன்-கிளாரினெட்
தேதி மற்றும் நேரம்: 18-12-2009 6:30p.m
சபா: மீனாக்ஷி சுந்தரராஜன் பைன் ஆர்ட்ஸ் அகாடமி
நிகழ்ச்சி நடக்கும் அரங்கம்: கோடம்பாக்கம் மீனாக்ஷி கல்லூரி K.R.S. அரங்கம்
நிகழ்ச்சி: காயத்ரி கிரீஷ் பாட்டு, ஹரித்வாரமங்கலம் ஏ.கே.பழனிவேல் தவில்
தேதி மற்றும் நேரம்: 21-12-2009 6:30p.m
சபா: பார்த்தசாரதி சுவாமி சபா
நிகழ்ச்சி நடக்கும் அரங்கம்: வித்யா பாரதி, பீமசேனா கார்டன் ரோடு, மயிலாப்பூர்
நிகழ்ச்சி: Carnatic-Hindustani Jugalbandhi, Dr.Sriram Parasuram & Anuradha Sriram
தேதி மற்றும் நேரம்: 23-12-2009 6:30p.m
சபா: ஸ்ரீ கிருஷ்ண கான சபா
நிகழ்ச்சி நடக்கும் அரங்கம்: கிருஷ்ண கான சபா அரங்கம், தி.நகர்
நிகழ்ச்சி: டி.எம்.கிருஷ்ண பாட்டு, டி.கே.முர்த்தி & பி.சிவராமன் (இரட்டை மிருதங்கம்)
தேதி மற்றும் நேரம்: 31-12-2009 4:30p.m
சபா: ஸ்ரீ கிருஷ்ண கான சபா
நிகழ்ச்சி நடக்கும் அரங்கம்: கிருஷ்ண கான சபா அரங்கம், தி.நகர்
நிகழ்ச்சி: விசாகா ஹரி, "ஸ்ரீனிவாச வைபவம்" Musical Discourse
தேதி மற்றும் நேரம்: 23-12-2009 9:30a.m
சபா: ஸ்ரீ கிருஷ்ண கான சபா
நிகழ்ச்சி நடக்கும் அரங்கம்: கிருஷ்ண கான சபா அரங்கம், தி.நகர்
நிகழ்ச்சி: திருப்பாம்பரம் சகோதரர்கள் நாதஸ்வரம், இரட்டை தவில்
தேதி மற்றும் நேரம்: 17-01-2010 6:30p.m
சபா: நுங்கம்பாக்கம் கல்சுரல் அகாடமி
நிகழ்ச்சி நடக்கும் அரங்கம்: ராமராவ் கலா மண்டப், தி.நகர்
நிகழ்ச்சி: Dr.M.Balamuralikrishna
தேதி மற்றும் நேரம்: 17-01-2010 6:30p.m
வளரும் கலைஞர்களில் கவனிக்கப்பட வேண்டியவர்கள்
நிஷா ராஜகோபால்
அபிஷேக் ரகுராம்
ரித்விக் ராஜா
இவ்வளவு எல்லாம் சொல்றியே இந்த கச்சேரிக்கெல்லாம் நீ போக போறியா அப்படின்னு கேக்கறீங்களா? நான் பனிரெண்டாம் தேதி துபாய் போயிட்டு ஜனவரி கடைசியில் தான் வரேன். அதனால இந்த சீசன் கச்சேரி எதுக்கும் போக முடியாது.
Wednesday, 2 December 2009
Saturday, 28 November 2009
எந்த வேளை?
இங்கே பெங்களூரில் வீடு பார்த்து ஒருவழியாக செட்டில் ஆகியாச்சு (ரொம்ப நாளா ஒரு சந்தேகம் ...செட்டில் ஆவது என்றால் என்ன?) , அதன் ஒரு பகுதியாக வீட்டு வேலை செய்ய ஒரு பெண்மணி தேவை, இங்கே உள்ள அபார்ட்மெண்டில் சொல்ல ஒரு பெண் வந்தார் , சுத்தமான கர்நாடக தமிழ்..பேரம் ஆரம்பித்தது மனைவி ஒவ்வொவொரு வேலையாக சொல்லிக்கொண்டே வர அவர் பொறுமையாக கேட்டு விட்டு சொன்னார் ஒரு வேளைக்கு 500 ரூபாய் , மனைவி யோசித்து பரவாயில்லை நீ ஒரு வேளை வந்தால் போதும் என்று சொன்னாள், பதில் கேள்வி "எந்த வேளை?" ..சற்று யோசித்து மனைவி சொன்னது "காலை" . சற்று நேரம் மௌனம் , "இல்லம்மா எந்த வேளை செய்யணும்?" இப்படி சில தத்துவ விசாரணைகள் நடந்து முடிந்த பின் தெரியவந்த செய்தி,அந்த பெண் சொன்னது வேளை அல்ல வேலை, அதாவது வீடு பெருக்க 500 பாத்திரம் கழுவ 500 , துணி துவைக்க 500....
Wednesday, 18 November 2009
மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்

மயிலாப்பூர் சித்திரகுளம்

மரங்கள் சூழ்ந்த சென்னை சாலைகள்
ஹிண்டு நாளிதழில் ஒவ்வொரு புதன்கிழமையும் "Metro Plus" பகுதியில் வரும் "Memories of Madras" என்னும் பத்தியில் சென்னை தங்கள் இளமைக் காலத்தில் எப்படி இருந்தது என்று எழுத்தாளர் பாலகுமாரன், வி.கல்யாணம் போன்றவர்கள் தங்கள் மெட்ராஸ் நினைவுகளை பகிர்ந்து கொள்கிறார்கள்.
வீட்டை திறந்து வைத்து விட்டு எங்கு வேண்டுமானாலும் செல்லலாம், திருட்டு பயமே கிடையாது என்று இவர்கள் சொல்வதை எல்லாம் இன்றைய சென்னையுடன் ஒப்பிடவே முடியவில்லை. கூட்டமில்லாத சாலைகள், மரங்கள் சூழ்ந்த தி. நகர் பகுதி, குப்பையில்லாத மெரினா கடற்கரை என்று நிறைய நம்ப முடியாத தகவல்கள். ஆனால், நம்பியே ஆக வேண்டும் என்கிற மாதிரி கூடவே அந்த கால சென்னையின் படங்களை வேறு பிரசுரித்து வெறுப்பேற்றுகிறார்கள்.நேரம் கிடைத்தால் அவசியம் படியுங்கள்.
Photos Courtesy: Hindu Archives
Subscribe to:
Posts (Atom)