Monday, 24 March 2008

கேப்பையும் கேவுறும் -3

மார்கெட்டிங் & Branding
------------------------------
இது ஒரு முக்கியமான விஷயம்.

இன்று எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் மார்கெட்டிங் அவசியம், அது அழகான பெண்ணாகவே இருந்தாலும் சரி,பாசமாகவே இருந்தாலும் சரி,
மார்கெட்டிங் அவசியம்.

நான் பல வருடங்களாக,தமிழ் பத்திரிக்கைகளையும் கதை கட்டுரைகளையும் தமிழ் செய்திகளையும் படித்துகொண்டும், பார்த்து கொண்டும் இருப்பவன்.

நான் கடந்த பத்தாண்டு பத்திரிக்கைகளை பார்த்தவரை, தமிழகத்து பிராண்டுகள் (பத்திரிக்கை செய்திகளில் அதிகம் இடம் பிடித்தவை,மற்றும் அதிக அளவு விளம்பரம் செய்யபட்டவை).

செட்டி நாட்டு உணவு
திருநெல்வேலி அல்வா
ஸ்ரிவில்லிபுத்தூர் பால்கோவா
கோயம்புத்தூர் குசும்பு (ஆம்!)
கும்பகோனம் வெற்றிலை
மதுரை மல்லி
ஸிருவானி ஆற்று நீர்
பழநி பஞ்ஜாமிர்தம்
திண்டுக்கல்லு பூட்டு
விருதுநகர் கடலை மிட்டாய்
திருச்செந்தூர் வெல்லம்
பத்தமடை பாய்

இயற்கையோ செயற்கையோ ஒரு விதமான பெருமை/Brand நிலை நாட்டபட்டு இருக்கின்றது, அல்லவா?

இதனால் நான் மேற்கூறிய பொருட்கள் எல்லாம் அதன் மதிப்புக்கு ஏற்றவை அல்ல என கூறவில்லை, மாறாக வட தமிழகத்தின் பொருட்களை அதன்
Brand values நினைத்து பார்க்கிறேன்.

என்னால் நிச்சயமாக சொல்ல முடியும் , வட மாவட்டங்களிலும் சில பொருட்கள் சிறந்தவையாக இருக்கின்றன.

நான் வட தமிழகத்தின் பல்வேறு உணவகங்ககளிலும் ,தென் தமிழகத்தின் சில உணவகங்ககளிலும் சாப்பிட்டு இருக்கிறேன். என்னால் 180 டிகிரி
மாற்றத்தை உணர முடியவில்லை.

உதாரணமாக , நான் வேலூரில் வசந்தம் hotel-இல் சாப்பிட்ட ரவா தோசை போன்ற ருசியான தோசை தமிழகத்தில் எங்கும் சாப்பிட்டதில்லை.

அதே போல், மதுரையில் தங்கி இருந்த சில நாட்களில் அங்கே இருந்த புகழ் பெற்ற உணவகங்களில் சாப்பிட்டும் இருக்கிறேன், என்னால் மிகப் பெரிய
வித்தியாசத்தை காண முடியவில்லை.

இங்கே நான் கவனித்த மற்றோர் விஷயம் தென் மாவட்ட மக்களின் ஊக்கம்,
உதாரணமாக, திரு.கிருபானந்த வாரியார் அவர்கள், வேலூரை சேர் ந்தவர். ஆனால் அவர் கடைசியில் வாழ் ந்த இடம் மதுரை.

இதுவே மதுரையில் பிற ந்த ஒரு சொற்பொழிவாளரால் ஒரு வட மாவட்ட ஊரில் தங்குவதை கற்பனை செய்து பார்க்க முடியமா? அதிகபட்சம் அவர்
சென்னையில் தங்குவார், அவ்வளவுதான்.

திரு.கிருபானந்த வாரியார் ஏன் மதுரையில் வாழ்ந்தார்? ஏன் என்றால் அவரை ஆதரித்தவர்கள் மதுரையில் வாழ்ந்தனர், அந்த மதுரை செல்வந்தர்,
வாரியார் மதுரையில் இருந்தால் மதுரைக்கு சிறப்பு என்று எண்ணினார். அந்த சிறப்பு மதுரைக்கு வந்தது.

திருவண்ணாமலை கோயிலுக்கு அதிக நிதி தந்தது, மற்றும் தீப திருநாள் விழாவிற்கு உதவி செய்வதும் நாட்டு கோட்டை செட்டியார்களே!
எல்லோரும் நினைப்பது போல இங்கு நிதி ஒரு ப்ரச்சினையே அல்ல, அதை தரும் மனமே ப்ரச்சினை.

கோவை மண்டல செய்திகள், தென் மண்டல செய்திகள் கூறும் சன் டீவியால் ஏன் வடக்கு மண்டல செய்திகளை கூற முடியவில்லை.ஏன் சென்னை மண்டல செய்திகள் என்று தருகிறார்கள். அதில் சென்னையை பற்றிய செய்திகளே அதிகம்.

இதில் மிக சோகமான விஷயம் என்னவென்றால், வட மாவட்டங்களே மிக அதிக அளவு நிலப்பரப்பை கொன்டுள்ளது, ஆனாலும் அதற்குரிய ஆளுமை இல்லாததால், அதற்குரிய மதிப்பும் கிடைக்கவில்லை

முடிவாக நான் சொல்ல விரும்புவது இதுதான்:
வட மாவட்ட மக்கள் தங்களது அறியாமையை ,பயத்தை, ஊக்கமின்மையை, தாழ்வு மனப்பாண்மையை நீக்கினால்தான் அவர்களால் ஒரு brand value
உருவாக்க முடியும், அதன் மூலமெ அவர்கள் தமிழகத்தின் மற்ற பகுதி மக்களோடும் சரி சமமாக இருக்க முடியும்.

2 comments:

ச.முத்துவேல் said...

/முடிவாக நான் சொல்ல விரும்புவது இதுதான்:
வட மாவட்ட மக்கள் தங்களது அறியாமையை ,பயத்தை, ஊக்கமின்மையை, தாழ்வு மனப்பாண்மையை நீக்கினால்தான் அவர்களால் ஒரு brand value
உருவாக்க முடியும், அதன் மூலமெ அவர்கள் தமிழகத்தின் மற்ற பகுதி மக்களோடும் சரி சமமாக இருக்க முடியும். /
உணர்ந்து,சரியாகச் சொல்லியிருக்கிறீர்கள்.இதனுடன் இன்னொன்றையும் சேர்க்கலாம் என எண்ணுகிறேன். அது, ஒழுக்கம் அல்லது சிற்றின்பங்களிருந்து விடுதலை.

Gokul said...

முத்துவேல்,
ஒழுக்கம் மற்றும் சிற்றின்பம் என்பது தனிமனித குணங்களை சார்ந்தவை, என்றாலும் உழைத்து முன்னேறுவதற்கு ஒழுக்கமும் நம்பிக்கையும் அவசியம் என்பதை நானும் ஒப்புக்கொள்கிறேன்.

Thanks
Gokul