Sunday 1 June 2008

ஜெயமோகனின் விமர்சனம்

இதனை ஒரு மாதத்திற்கு முன்பே எழுதி இருக்க வேண்டும் இப்போதுதான் முடிந்தது.

சில நாட்களுக்கு முன்பு ஜெயமோகன் எம்.ஜி.ஆர் பற்றியும் சிவாஜி பற்றியும் அவரது Blog-ல் குறிப்பிட்டு இருந்தார் அதற்காக அவர் தமிழ் சினிமா
துறையில் இருந்து விலக்கி வைக்கப்பட்டார். (அவர் மன்னிப்பு கேட்காததனால்).


இது எந்த வகையில் நியாயம்? சிவாஜி மற்றும் எம்.ஜி.ஆர் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்களா ? காந்தியை பலரும் பல ஊடகங்களில் விமர்சனம்
செய்த பொது அவர்களுக்கு எந்த அளவிற்கு எதிர்ப்பு வரவில்லையே ஏன்?


சிவாஜியை சிம்ம குரலோன் நடிகர் திலகம் , அவரது ஒவ்வொரு நகக்கண்ணும் நடிக்கும் என்றெல்லாம் புகழ்ந்து எழுதும் போது அதை காது குளிர கேட்டவர்கள் அவர்களை விமர்சனம் செய்தபோதும் அதை கேட்டு இருக்க வேண்டும்.

ஒரு சினிமா நடிகரை (அவர் இறந்தவரோ உயிரோடு இருப்பவரோ) விமர்சனம் செய்ய கூடாது என்பது உலகிலேயே இங்குதான் நடக்க முடியும்.

இது எவ்வளவு பெரிய கேலிக்கூத்து?அதனால்தான் கேட்கிறேன் இறந்து போன காந்தியை விமர்சனம் செய்யும்போது எம்.ஜி.ஆரை / சிவாஜியை விமர்சனம் செய்ய கூடாதா?


ஜெயமோகன் விமர்சனம் செய்தது சிவாஜியின் சில முக பாவங்களை மற்றும் அவரது உருவ அமைப்பை. அது பொய்யே அல்ல , சிவாஜி 1976 முதல் 1982 வரை ஒரு மெகா சைஸ் தொப்பையை வைத்துக்கொண்டு அதை மறைக்க ஒரு கோட் மாட்டிக்கொண்டு சுமார் 50-60 படங்கள் நடித்து இருப்பார். இதை விமர்சிக்க கூடாதா?

தென்னிந்திய திரைத்துறையில் ஆணாதிக்கம் என்ற கோட்பாட்டிற்கு உருவம் கொடுத்தால் அது சிவாஜி மற்றும் என்.டி.ஆர் ஆகியவர்களுக்குதான் கொடுக்க முடியும் (எம்.ஜி.ஆரின் இடம் வேறு!).

சுமார் 25 வருடங்கள் கழித்து இதனை ஒரு விமர்சனம் செய்தால் அதை கண்டிப்பதா? பாராட்டல்லவா வேண்டும்.

அதே போல் எம்.ஜி.ஆருக்கு மக்கள் திலகம், பொன்மனச்செம்மல், புரட்சி நடிகர் என்று பல பட்டங்கள்.

அவரின் படங்களின் வசூல் பற்றியோ, அல்லது அவரின் உதவி செய்யும் குணத்தை பற்றியோ அல்லது அவரது தனிப்பட்ட குணநலன்கள் பற்றியோ ஜெயமோகன் எந்த கிண்டலும் செய்யவில்லை, மாறாக அவர் திரையில் அவரது கதாநாயகியை எப்படி treat செய்தார் என்பது பற்றியே அவரது இருக்கிறது.அதற்காக அவரை குறை சொல்பவர்கள் 1972-1978 வருடங்களில் வந்த எம்.ஜி.ஆரின் படங்களை பார்த்தல் நலம்.(முக்கியமான condition, நாயகி லதா அல்லது மஞ்சுளாவாக இருக்க வேண்டும்).

அடுத்து அவரது உச்சரிப்பு. அது ஏனோ தெரியவில்லை தமிழ்நாட்டு சூப்பர் ஸ்டார்களின் தமிழ் உச்சரிப்பு மிகவும் வித்தியாசமானதாகவே அமைகிறது.

எம்.ஜி.ஆரின் தமிழ் உச்சரிப்பு அவர் சுடப்படுவதற்கு முன் மிக நன்றாகவே இருந்து இருக்கிறது.


ஆனால் அவர் சுடப்பட்ட பின் மிகவும் மோசமானதாக ஆகிவிட்டது. இதை விஷயத்தை ஒரு சாதாரண மனிதனை கொண்டு ஒப்பிட்டு பார்ப்போம்.

ஒரு tailor அவருக்கு கண் பார்வை மிகவும் மங்கலாகி விட்டது, ஊசியில் நூல் கோர்க்க முடியவில்லை, நாம் என்ன செய்வோம்? அவரை பார்த்து பரிதாபப்படுவோம் ஆனால் அவரிடம் துணி கொடுப்போமா சில சமயம் பரிதாபத்தின்பால் கொடுப்போம் ஆனால் நிச்சயம் எல்லா துணிமணிகளையும் கொடுக்க மாட்டோம், சில பேர் ஒரு துணியை கூட கொடுக்க மாட்டார்கள்.

ஒரு வேலை துணியை கொடுத்து அந்த tailor நன்றாக தைக்கவில்லை என்றால் நிச்சயம் "என்னப்பா கண் சரியா தெரியாதவன் எப்படிப்பா ஒழுங்க தைப்பான்?" என்று கமெண்ட் அடிப்போம்.யாருமே "கண் தெரியாதவன் இவ்வளவுதான் தைக்க முடியும், எனவே தைத்த சட்டையை குறை சொல்லாமல் போட்டுக்கொள்" என்று கூற மாட்டார்கள்.


துணி விஷயத்தில் இப்படி என்றால், ஆயிரக்கணக்கான மக்கள் பார்க்கும் சினிமாவில் அந்த வித்தியாசமான உச்சரிப்புக்கு விமர்சனங்கள் எழாமலா இருக்கும், நிச்சயம் அப்போதே எழுந்து இருக்கும், இப்போதும் ஜெயமோகன் அதைத்தான் நகைச்சுவையாக சொல்லி இருக்கிறார். இந்த விமர்சனத்தை தாங்காதவர்கள் உண்மையில் கலைஞர்கள்தானா என்ற சந்தேகம் வருகிறது.

ஆனந்த விகடனின் "சும்பன்" மற்றும் ஜெயமோகன் இருவருக்கும் நடந்த மோதலில் தோற்றதென்னவோ நகைச்சுவை உணர்வும் கருத்துரிமையும்தான்!

1 comment:

Vasu said...

கோகுல் ,

ஜெயமோகன் விமர்சனம் செய்ததை யாரும் தவறென்று சொல்லவில்லை. ஆனால், அந்த விமர்சனம் ஒரு வரைமுறைக்குள் இல்லை என்பது தான் பிரச்சனை. உதாரணமாக "MGR சுமாரான நடிகர்", "சிவாஜி ஐந்து ரூபாய் வாங்கி கொண்டு பத்து ரூபாய்க்கு நடிப்பார்" என்று எழுதி இருந்தால் பரவாயில்லை. ஆனால், ஜெயமோகன் அப்படி எழுதவில்லை.

ஆங்கிலத்தில் சொல்வது போல் "opinions are like assholes and everyone has one". யார் வேண்டுமானாலும் யாரை பற்றி வேண்டுமானாலும் விமர்சனம் செய்யலாம் என்பது நம்மூரில் எழுதப்படாத விதி. எம்ஜியாரையும், சிவாஜியையும் அவர்கள் வாழ்ந்த காலத்திலேயே கடுமையாக விமர்சித்தவர்கள் உண்டு. ஆனால், பெரும் சாதனையாளர்களான எம்ஜியார் மற்றும் சிவாஜியை ஜெயமோகன் போன்றவர்கள் பகடி செய்வது தான் வருத்தமான விஷயம். மேலும், ஒருவர் இறந்த பிறகு அவரை பற்றி விமர்சிப்பது நல்ல பண்புள்ளவர்களுக்கு அழகல்ல.

சாரு ஜெயமோகனை "fraud ezhuthalan", "kundi nakkum" எழுத்தாளன் என்று சொல்வதை ஜெயமோகன் வேண்டுமானால் பெரிய மனதோடு பொறுத்து கொள்ளலாம் ஆனால் MGR, Sivaji ரசிகர்கள் ஜெயமோகனை பொறுத்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.

எது எப்படியோ, ஆனந்த விகடன் புண்ணியத்தில் ஜெயமோகனுக்கு நல்ல பப்ளிசிட்டி.