Wednesday, 25 June 2008

தசாவதாரம் - கடைசி விமர்சனம்

ஏற்கனவே பல விமர்சனங்கள் வந்த நிலையில் இந்த விமர்சனம் மிக மிக தாமதம் என்று தெரிகிறது, அதற்காகவே இந்த title!

படம் வருவதற்கு முன்பே படத்தை பற்றி சொல்லி 'கமல் ரசிகர்களிடம்' இருந்து சில கமெண்டுகளை பெற்று கொண்டேன்.படத்தை பார்த்தேன்.
ஆனால் விமர்சனம் எழுத முடியவில்லை.இந்த கட்டுரை படத்தின் கதையையோ கமலின் மேக்கப் பற்றியோ அல்ல.குறிப்பாக கமலின் நடிப்பை
பற்றியே அல்ல, நெட்டில் வந்த நூற்றுக்கணக்கான விமர்சனங்களில் கமலின் நடிப்பை பற்றியே பல பேர் சொல்லவில்லை, எனக்கும் சொல்வதற்கு
வார்த்தை இல்லை.


தசாவதாரம் நிச்சயம் "ஆளவந்தான்" அல்ல, அதே சமயம் "மைக்கேல் மதன காம ராஜனும்" அல்ல.

'palimpsest' என்ற உத்தியை கேள்விப்பட்டு இருப்பீர்கள், (அதாவது பேப்பரிலோ அல்லது தோலிலோ எழுதி பின்பு எழுதியதை முழுவதுமாக அழிக்காமலே அதன் மேலேயே எழுதுவது) அதைப்போல இந்த படம் பல பரிணாமங்களை கொண்டு இருக்கிறது. இன்னும் சொல்ல போனால் சில படிவங்களை கொண்டு இருக்கிறது.உரித்து பார்க்க வேண்டும் (நிச்சயம் இது வெங்காயம் அல்ல).

சில வருடங்களுக்கு முன்பு k.s.ரவிக்குமார் ஒரு பேட்டியில் சொன்னார் "வேலைக்கு போகாத அல்லது உடலுழைப்பை மட்டுமே கொண்ட வேலைக்கு போகும் lower middle class இளைஞர்களை குறி வைத்தே இன்று கமர்ஷியல் படங்கள் எடுக்கப்படுகின்றது" என்று.

அது உண்மை என்று பல வெற்றி படங்கள் உணர்த்துகிறது.அதாவது 'C' சென்டர் மக்களுக்காக படம் எடுத்தால் அதை 'A' சென்டர் மக்களும் காண்பார்கள் ஆனால் 'A' சென்டர் மக்களுக்காக படம் எடுத்தால் அதை ' C ' சென்டரில் பார்க்க மாட்டார்கள்.உதாரணம் "பருத்தி வீரன்".சில விதி விலக்குகள் உண்டு "காக்க காக்க" போல.

ஆனால் அதை பற்றி கவலை சிறிதும் இன்றி "chaos theory, Butterfly effect" என்று படம் ஆரம்பிக்கிறது....ஹ்ம்ம்...

மேலும் படத்தை உன்னிப்பாக கவனித்தால்தான் படத்தின் continuity தெரியும் என்று செய்து இருக்கிறார். இது நல்ல ஸ்டைலா தெரியவில்லை.

ஒரு வேகமான உடலைசைவு, முகபாவ மாற்றம், கேமரா ஆங்கிள் மாற்றம், மிகச்சிறிய வசனம் போன்றவை படத்தில் அதன் பின்வரும் சம்பவங்களை தீர்மானிக்கின்றன.ஒரு முறை பார்த்தவுடன் படத்தின் எல்லா காட்சிகளையும் correlate செய்ய முடிபவர்கள் நிச்சயம் வாழ்க்கையில் நல்ல நிலைக்கு உயர்வார்கள்.

நான் படம் பார்த்தபோது சுமார் 40-50 college students தியட்டரில் விடாமல் கத்தி கொண்டு இருந்தனர், கூடவே ஒரு குழந்தை அழுது கொண்டு இருந்தது, இதனாலா என்று தெரியவில்லை, என்னால் சில காட்சிகளை தொடர முடியவில்லை. அரங்கம் அமைதியாக இருந்தாலும் இந்த
விஷயங்களை விட்டுவிடக்கூடிய அபாயங்கள் இருக்கின்றன.


தமிழ் சினிமாவில் ஒரு english வசனத்தை உடனடியாக தமிழ்படுத்தி சொல்வது வழக்கமாக இருந்தது. Major சுந்தர்ராஜன் இதற்காகவே கிண்டல்
செய்யப்பட்டார்.ஆனால் அதற்கான காரணம் இருந்தது, அது மக்களுக்கு புரியாமல் எந்த வசனமும் இருக்க கூடாது என்பதே.பல படங்களில்
டில்லியிலும் அமெரிக்காவிலும் எல்லோரும் தமிழ் பேசும் காமெடியும் இதற்காகவே இருந்தது. இதற்காக வரும் கிண்டல்களையும் எந்த இயக்குனரும் பொருட்படுத்த மாட்டார்.


இந்த பின்புலத்தில் தசாவதாரத்தை எப்படி எடுத்துக்கொள்வது?தெரியவில்லை.
படத்தில் வயல் (vial) என்ற சொல் பலதடவை சொல்லப்பட்டு இருக்கிறது, எனக்கு அதற்கான அர்த்தம் தெரியாது, பிறகு wordweb-ல் பார்த்தபோது அது A small bottle that contains a drug என்று அர்த்தம் சொல்லப்பட்டு இருந்தது.
உப்பை NaCl என்று சொல்லி இருக்கிறார்கள்.


வாசு சொன்னது போல கமலின் உழைப்பு அசுரத்தனமாக தெரிகிறது. பல minute details வியக்க வைக்கின்றது, பல nuances ரசிக்கும்படி இருக்கிறது,

உ.தா: "உன் பேரு என்ன?" என்ற குழந்தையின் கேள்விக்கு கமலின் பதில் 'பூவராகன்'.அதற்கு குழந்தையின் comment "பன்னி (funny) நேம்".நல்ல சிலேடை. தியேட்டரில் மயான அமைதி.

பார்போம் "தசாவதாரத்திற்கு", "கந்தசாமி" என்ன பதில் சொல்ல போகிறார் என்று? ஏற்கனவே ரஜினி தாத்தா ஜால்ரா என்று ஒருவர் சொல்லி இருக்கிறார், இப்போது விக்ரமின் ஜால்ரா என்று சொல்லாதிர்கள்.கந்தசாமி வந்த பிறகு சில comparisions வரும் , அப்போது பார்க்கலாம்.

எனகென்னவோ k.s.ரவிகுமார் ஒருவரால்தான் படம் வியாபார ரீதியாக தப்பி இருக்கிறது என தோன்றுகிறது. ஒருவேளை 'பேரரசு' இயக்கி இருந்தால் இன்னும் சுவராஸ்யமாக இருந்திருக்கலாம்.

எல்லோரும் டிசைன் டிசைனாக கோலம் போட்டு கொண்டு இருக்கும்போது கமல் சுமார் 64 புள்ளி வைத்து மிகப்பெரிய 'சிக்கு' கோலம் போட்டு
இருக்கிறார். குறைகள் இருந்தாலும் பாராட்ட வேண்டும்.


Puzzled அல்லது perplexed என்ற வார்த்தையை கேள்விப்பட்டு இருக்கிறீர்களா? இல்லை என்றால் நேராக வடபழனி கமலா தியேட்டர் செல்லவும்
அங்கு தசாவதாரம் பார்த்துவிட்டு வெளி வரும் மக்களின் கண்களை பார்க்கவும், சுருங்க சொன்னால் Butterfly effect .அதாவது கண்களில்
பட்டாம்பூச்சி பறப்பது.சத்யம் தியேட்டரில் இருந்து வெளி வரும் மக்களின் கண்களில் தெரிவது ecstasy.


சென்னை தமிழ், கோவை தமிழ், நாகர்கோவில் மாவட்ட தமிழ், தெலுங்கில் தோய்த்தெடுத்த தமிழ், செந்தமிழ், திருநெல்வேலி தமிழ், வட இந்தியர்கள்
பேசும் தமிழ், பிராமண தமிழ், இலங்கை தமிழ், மதுரை தமிழ்--- கமல் இதுவரை பேசிய வட்டார வழக்குகளின் list.Amazing.


முடிவாக கமலை பற்றி என்ன சொல்ல?

ஏற்கனவே ஒருவர் சொல்லி இருக்கிறார், இந்த link-ல் வரும் கடைசி பாராவை படியுங்கள்.
http://www.geotamil.com/pathivukal/cinema_thasavathaaram_rajes_bala.htm

2 comments:

jebas said...

really super...

keep it up...

http:/www.jebamail.blogspot.com

this is my blog, visit...

Gokul said...

Thanks jebas, I saw your blog, its nice and I have few comments over your posts, I will post them in ur blog.

Keep reading our blog.

-gokul