Wednesday 29 April 2009

அடாணா ராகம்

சலங்கை ஒலியில் மஞ்சு பார்கவி மேடையில் ஆட, கமல் சமையல் கட்டில் அதே பாடலுக்கு அவர் அம்மா முன் ஆடுவாரே, அந்த பாடல் நினைவிருக்கிறதா? அந்த பாடல், "பால கனகமய" அடாணா ராகத்தை சேர்ந்தது. இந்த பாடலை பற்றி ஒரு தனி பதிவே எழுத வேண்டும்.விசாகா ஹரி ஒரு முறை இந்த பாடலுக்கு ஜெயா டிவியில் கொடுத்த விளக்கம் சிலிர்க்க வைத்தது. அதைப்பற்றி வேறு ஒரு சமயம் எழுதுகிறேன்.நான் மீண்டும் அடாணா ராகத்திற்கு வருகிறேன்.

அடாணா மிக கம்பீரமான ராகம். ராகத்தை கேட்கும் போதே ஒரு விட உற்சாகம் பீறிடும். படம் மகாகவி காளிதாசா அல்லது வீர அபிமன்யுவா என்று நினைவில்லை. ஆனால், அதில் வரும் "யார் தருவார் இந்த அரியாசனம்" அடாணா ராகத்தில் அமைந்த பிரபலமான திரைப்பாடல்.இசையமைத்தவர் கே.வி.மகாதேவன்.வேறு பாடல்கள் அடாணாவில் இருக்கலாம்.ஆனால், இந்த பாடல் அளவுக்கு எனக்கு தமிழ் சினிமாவில் அடாணாவில் அமைந்த வேறு எந்த பாடலும் பரிச்சயம் இல்லை.இதை படிப்பவர்கள் யாருக்காவது அடாணாவில் அமைந்த தமிழ் சினிமா பாடல்கள் பற்றி தெரிந்திருந்தால் பகிர்ந்து கொள்ளவும்.

5 comments:

Gokul said...

வாசு,

உண்மையிலேயே பால கனகமையா ஒரு சூப்பர் பாட்டு, நான் அதை எத்தனை முறை கேட்டு இருப்பேன் என்ற கணக்கே இல்லை.

அதை பாடியது S.Janaki என்று நினைக்கிறேன் கலக்கியிருப்பார். ஒரு கர்நாடக சங்கீத கீர்த்தனையை எப்படி கர்நாடக சங்கீதம் தெரியாதவரும் ரசிக்க வைக்க முடியும் என்பதை இளையராஜா இந்த பாட்டில் காண்பித்து இருப்பார்.இந்த பாட்டு அந்த படத்தின் மற்ற பாடல்களை விட சூப்பர் ஹிட் ஆகி இருக்க வேண்டும் , ஏனோ ஆகவில்லை

நானும் இந்த பாடலை பற்றி எழுத வேண்டும் என்று நினைத்து இருந்தேன், ஆனால் இதை நீ எழுத வேண்டும் , வித் கர்நாடிக் ராகா டிடைல்ஸ்!

நீ ராகங்கள் பற்றி எழுதுவதால் youtube-ல் வரும் இசைப்பயணம் (ஜெயா டீவியில் வந்தது, சாருலதா மணி தொகுத்தளித்து) மிகவும் சுவராஸ்யமாக இருக்கும்.

அதில் ஒவ்வொரு ராகத்தை பற்றியும் அதை ஆலாபனை செய்து அதற்கான தெலுங்கு கீர்த்தனை , தமிழ் கீர்த்தனை , பழைய திரைப்பட பாடல்கள், புதிய திரைப்பட பாடல்கள் என அனைத்தையும் தருகிறார் சாருலதா மணி.

அடானா-திருவெம்பாவை இதோ

http://www.youtube.com/watch?v=E8V3AeUOm8M

இசைப்பயணம் youtube sample

http://www.youtube.com/watch?v=6jC8KXAc2Hc

மேலும் நந்தனார் படத்தில் வரும் 'மெத்த கடினம்' அடானவா என்று தெரியவில்லை, கொஞ்சம் சொல்லேன்..

http://www.youtube.com/watch?v=PMHNk9pxgec

-Gokul

Gokul said...

யார் தருவார் இந்த அரியாசனம் -- மகா கவி காளிதாஸ்-சிவாஜி கணேசன் நடித்தது.

-Gokul

Vasu. said...

Gokul,

I will definitely try to write about this sons in detail sometime. Btw, if your get time listed to Yesudoss's rendering of the same song in musicindiaonline. Shatabdhi rail vegathil paadi iruppar but nandraga irukkum.

Srinivasan said...

Vasu

Please explain about ragas in coming editions,iam very much interest in it.but I don’t have any knowledge it.

Vasu. said...

Srini,

I am not an expert either but will definitely try to share whatever i know.