Sunday 3 May 2009

பஸ் கட்டண காமெடி

கடந்த வெள்ளியன்று மாநகர போக்குவரத்து கழக பேருந்தில் ஏறியவர்களுக்கு சந்தோஷம் கலந்த அதிர்ச்சி. வெள்ளை போர்டு, மஞ்சள் போர்டு, எக்ஸ்பிரஸ் அனைத்திலும் கட்டணம் குறைக்கப்பட்டிருந்தது. தமிழக தேர்தல் ஆணையத்தின் கவனத்திற்கு இது வந்தது. தலைமை தேர்தல் ஆணையர் நரேஷ் குப்தா இது தேர்தலை மனதில் கொண்டு செய்யப்பட்ட மாற்றம் என்றும் இது தேர்தல் விதிகளை மீறிய செயல் என்றும் கூறினார்.

இந்த பேருந்து கட்டண மாற்றத்தை பின் விளைவுகளை யோசித்து திட்டமிட்டு செய்திருந்த கலைஞர் அரசு சும்மா விடுமா? போக்குவரத்து துறை அமைச்சர் கே.என்.நேரு உடனே ஒரு அறிக்கை விட்டார். அதில், "கட்டண மாற்றம் கொண்டு வர அரசு ஒரு ஆணை பிறப்பிக்க வேண்டும் என்றும் ஆனால் இப்போது அப்படி எந்த ஆணையும் வெளியிடப்படவில்லை என்பதால் இது அரசு செய்த மாற்றம் இல்லை. மாநகர போக்குவரத்து துறையின் தலைமை அதிகாரி(Managing Director) தானே இந்த மாற்றங்களை செய்திருக்கலாம் என்று ஒரு போடு போட்டார்". இதை தமிழக அரசின் தலைமை செயலாளர் கே.எஸ்.ஸ்ரீபதி வழிமொழிந்தார்.

இந்த விளக்கம் திருப்தி அளிக்கும் வகையில் இல்லாததால் தலைமை செயலாளர் கே.எஸ்.ஸ்ரீபதி இதற்கு இன்று மதியம் மூன்று மணிக்குள் விளக்கம் கொடுக்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.

நேரு, ஸ்ரீபதி இருவரும் அம்புகள்.எய்தவனை தேர்தல் ஆணையம் நெருங்க முடியுமா?

No comments: