Sunday, 17 May 2009

தேர்தல் 2009

எதிர்பார்த்த மாதிரியே காங்கிரசுக்கு வாக்களித்து இருக்கிறார்கள்! எனது பார்வையில் இந்த தேர்தலில் மக்கள் யோசித்தே ஒட்டு போட்டு இருக்கிறார்கள்...

-பா.ம.கவுக்கு தகுந்த இடம்.( இதன் மூலம் வட தமிழகத்திற்கும், தமிழகத்தின் ரயில்வே பணிகளுக்கும் பாதிப்புதான் , ஆனால் பொதுவாய் பார்க்கும்போது இந்த தோல்வி பா..கவிற்கு தேவையான ஒன்று)

-தமிழ்நாட்டில் காங்கிரசை ஜெயிக்க வைத்தும் தோற்க வைத்தும் இருக்கிறார்கள் , எதிர்ப்பை கட்டின மாதிரியும் ஆயிற்று , சப்போர்ட் செய்த மாதிரியும் ஆயிற்று.

-வழக்கம் போல் தமிழ்நாடு காங்கிரஸ் கூட்டணியில் முக்கிய இடம் பிடித்தாயிற்று (என்ன 2004 போல நாம் விரும்பிய அளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்த காபினட் துறை கிடைக்காது.. ஏனினில் வடக்கிலும் காங்கிரசுக்கு நல்ல பலம்)

-தி.மு.க விற்கு எதிர்பாராத வெற்றி, ஈழப்பிரச்சினைக்கு மக்கள் கொடுத்த முக்கியத்துவம் எல்லோரையும் யோசிக்க வைத்து இருக்கிறது.

-போன பதிவில் தமிழ்நாட்டின் பாவப்பட்ட நடிகர் என்று எழுதினேன், இப்போது தமிழ்நாட்டின் பாவப்பட்ட அரசியல்வாதியாக வை.கோவை சொல்லலாம் என்று தோன்றுகிறது.

-ஜெ.கே.ரீதிஷ் ஜெயித்து இருக்கிறார் , வைகோ தோற்று இருக்கிறார், இப்போவே கண்ணை கட்டுதே....

-சிதம்பரம் செய்தது தனிக்கதை, தோற்று அதன் பிறகு ஜெயித்து இருக்கிறார் , இதற்க்கு கோர்ட்டில் கேஸ் போடுவார்கள் என்று எதிர்பார்க்கிறேன் , பார்ப்போம். ஒரு வகையில் அராஜகமாகத்தான் தெரிகிறது, விவரம் தெரியவில்லை

-எல்லோரையும் விட பெரிய ஆப்பு மெகா ஸ்டார் சிரஞ்சீவி வாங்கியதுதான், முதல் நாள் வரை ஆட்சி அமைக்க முடியும் என்று நினைத்துக்கொண்டவரை சொந்த தொகுதியிலேயே மூன்றாவதாக வரச்செய்து விட்டார்கள். இனிமேலயும் கூட்டம் கூடின நம்பாதிங்கப்பா.

-தெளிவாக மாயாவதி, லாலு, சி.பி.எம், முலாயம், ராம் விலாஸ் பஸ்வான், போன்றவர்களுக்கு செய்தி சொன்ன மக்களுக்கு சலாம்.

-அடுத்து நாம் பார்க்க வேண்டியது மத்திய அமைச்சரவையில் அழகிரி, ப.சிதம்பரம், தயாநிதி மாறன் , போன்றவர்களுக்கு என்ன பதவி கிடைக்கும் என்பதுதான். இந்த லிஸ்டில் ஜெ.கே.ரீதிஷ் அவர்கள் இடம் பெறுவாரா என்பதை அறிய ஆவலாய் இருக்கிறேன்.

-புரட்சி தலைவியை இந்த அளவிற்கு நோகச்செய்த புரட்சி கலைஞருக்கு ஒரு ஜெ ,, ஆங்... (கேப்டன் பாணியிலேயே படிக்கவும்)

- மத்தியில் பா.. தோல்வியை ஏற்றது போன்று ஜெயலலிதாவும் நாகரீகமாகஏற்று இருக்கலாம், பணநாயகம் வென்று விட்டது என்று ஒரு சொதப்பல் statement.

-மக்கள் கொடுத்தது தெளிவான தீர்ப்பு, தமிழனாய் ஒரே வருத்தம் தமிழகத்தின் முக்கியத்துவம் அகில இந்திய அளவில் குறையும் , ஏனினில் hindhi belt என சொல்லப்படும் ஏரியாவிலேயே காங்கிரசுக்கு நல்ல come back. ஆனால் இந்தியாவிற்கு இது நல்லதே.

2 comments:

Gokul said...

வாசு,

வாழ்த்திற்கு நன்றி.

தே.மு.தி.க இரண்டு இடங்களில் வெற்றியா? எனக்கு தெரியாது எந்த தொகுதிகள்? ஆனால் அண்ணா தி.மு.க வோட்டுகள் (அதாவது தி.மு.க எதிர்ப்பு வோட்டுகள்) தே.மு.தி.க பெற்றது நிஜம், அதனால்தான் அம்மாவிற்கு இந்த அளவிற்கு தொகுதி குறைந்தது என்பதும் நிஜம் (குறிப்பாக ம.தி.மு.க விற்கு)

ஆந்திராவில் பிரஜா ராஜ்ஜியம் - சுமார் 20 சட்டமன்ற தொகுதிகள் மற்றும் 3 பார்லிமென்ட் தொகுதிகள் ஜெயித்து இருக்கின்றது.

மொத்தத்தில் இந்த தேர்தலில் வாக்காளர்கள் போட்ட நாமம் அரசியல்வாதிகளுக்கு மட்டுமல்ல , மீடியா (குறிப்பாக , NDTV,Timesnow,CNN-IBN) மற்றும் அரசியல் வல்லுனர்களுக்கும்தான்.

சோ என்ன சொல்ல போகிறார் என்று பாப்போம்.

-Gokul

Vasu. said...

கோகுல்,

தே.மு.தி.க இரண்டு தொகுதியில் முண்ணனியில் இருந்தது ஆனால் வெற்றி பெறவில்லை. நான் தவறாக கூறிவிட்டேன். வைகோவின் விருதுநகர் தொகுதி மொத்த வாக்காளர் எண்ணிக்கையை விட வாக்குகள் கவுண்ட் செய்யப்பட்ட போது இருந்த எண்ணிக்கை அதிகமாம். :-))