Monday 11 May 2009

ஆட்டோ ஸ்டாண்ட், அம்பேத்கார் - சில கருத்துக்கள்

"ரிஷிமூலம், நதிமூலம் கண்டறிய முயற்சிக்காதே" என்பார்கள். என்னை பொறுத்தவரை சென்னையில் ஒரு ஆட்டோ ஸ்டாண்ட் எப்படி உருவாகிறது என்பது கூட ரிஷிமூலம்/நதிமூலம் மாதிரி தான். அதன் வேர்களை நாம் ஆராய முயற்சிக்க கூடாது. ஒரு அம்பேத்கார் படம், சிகப்பு நிறத்திலான CITU உறுப்பினர் என்ற குறிப்பு, இவை இரண்டும் தான் ஆட்டோ ஸ்டாண்ட் ஆரம்பிக்க தேவை என்று நினைக்கிறேன். இந்த இரண்டும் இருந்தால் எந்த இடத்தை வேண்டுமானாலும் ஆட்டோ ஸ்டாண்ட் ஆக்கிக் கொள்ளலாம். இதில் "எந்த இடத்தை வேண்டுமானாலும்" என்பது பெரும்பாலும் தெருமுனை,அடுக்குமாடி குடியிருப்பின் வாசல் அல்லது பேருந்து நிலையத்தின் நுழைவு வாயிலாக இருக்கும்.

ஒரு இடத்தை இவர்கள் ஆக்கிரமித்து விட்டார்கள் அதன் பிறகு இவர்களை அந்த இடத்திலிருந்து கிளப்ப முடியாது. மேலும், அந்த ஸ்டாண்டின் அருகில் வேறு எந்த ஆட்டோவும் ஆளேற்ற கூடாது. மீறி ஏற்றினால் ஸ்டாண்டை சேர்ந்த அனைத்து ஆட்டோ ஓட்டுனர்களும் சேர்ந்து கொண்டு வேறு ஸ்டாண்டை சேர்ந்த அந்த ஆட்டோ ஓட்டுனரை பின்னியெடுத்து விடுவார்கள். இன்னும் புரியவில்லை என்றால் ஒரு ஏரியாவில் புதிய நாய் ஒன்று சிக்கிக்கொண்டால் அந்த ஏரியாவில் பல காலமாக இருக்கும் நாய்கள் தங்கள் விரோதத்தை மறந்து ஒன்று சேர்ந்து புதிய நாயை கடித்து குதறும் காட்சியை பார்த்து இருக்கிறீர்கள் அல்லவே? அதை நினைவுபடுத்தி கொள்ளுங்கள்.

இவர்கள் ஆக்கிரமிக்கும் இடத்திலிருந்து இவர்களை அகற்றுவது கடினம் என்று சொன்னேன், இல்லையா? அப்படியும் மீறி இவர்களை அப்புறப்படுத்த முயற்சித்தால் என்ன நடக்கும் தெரியுமா? அம்பேத்கார் படம் போட்ட ஆட்டோக்களில் கட்சி ஆட்கள் ஒரு இருபது பேர் வந்து இவர்களுக்கு குரல் கொடுப்பார்கள். யார் இவர்களை அப்புறப்படுத்த முயற்சித்தாரோ அவர் குடும்பத்தின் மீது வசைமாரி பொழிவார்கள்.அவர் எந்த சாதியை சேர்ந்தவரோ அதை கொச்சைப்படுத்தி நாறடிப்பார்கள்.

இந்த இடத்தில் அம்பேத்காரை பற்றி கொஞ்சம் பேச வேண்டும். அம்பேத்கார் தாழ்ந்த சாதியில் பிறந்தார் என்பதையும் அவரை முன்னேற விடாமல் உயர் சாதியினர் தடுத்தார்கள் என்பதை மட்டும் தான் இன்று வரை நமது பாட புத்தகங்களும் ஏடுகளும் தெரிவிக்கின்றனவே தவிர அவர் எப்படி கடுமையாய் உழைத்து நல்ல நிலைக்கு வந்தார் என்று ஒரு வார்த்தை கூட புத்தகங்களில் இல்லை. இதன் விளைவு என்னவென்றால் இன்றும் எந்த மக்களுக்காக அம்பேத்கார் போராடினாரோ அவர்களில் பெரும்பாலானவர்கள் தங்களுக்காக அவர் ஏற்படுத்திக் கொடுத்த சலுகைகள் பற்றிய உணர்வு சிறிதுமின்றி, முன்னேறும் வழி தெரியாமல், பகுஜன் சமாஜ் பார்ட்டி, புதிய தமிழகம், நீல சிறுத்தைகள்(சாத்தை பாக்கியராஜ்), விடுதலை சிறுத்தைகள், புரட்சி பாரதம்(பூவை மூர்த்தி & அல்லக்கைகள்) போன்ற அம்பேத்கார் படத்தை மட்டும் உபயோகித்து அவர் கொள்கைகளை காற்றில் பறக்க விட்ட மூன்றாம் தர கட்சியில் இணைந்து மற்ற சாதியினர் மீது வன்மமும் காழ்ப்புணர்ச்சியும் பிரயோகிக்கிறார்கள்.இந்த கட்சிகளின் பிரதான ஆயுதமே வன்முறை தான்.

தலித்துகள் அல்லாத மற்றவர்கள் மீது வெறுப்பை உமிழுங்கள் என்று அம்பேத்கார் சொன்னாரா என்ன? அம்பேத்கார் இஸ்லாமுக்கு எதிராக கூட தான் இருந்தார். அதை ஏன் இந்த கட்சிகள் தங்கள் கொள்கையாக கூறவில்லை? ஏனென்றால் ஓட்டு வங்கி பாதிக்கப்படுமே. அம்பேத்கார் படத்தை வைத்துக்கொண்டு இவர்கள் அடிக்கும் கூத்தை பார்க்க நல்லகாலம் அவர் இப்போது இல்லை.பார்த்திருந்தால்,இவர்களுக்காகவா இந்த பாடுபட்டோம் என்று நொந்து போயிருப்பார். இப்போதெல்லாம் எங்கு அம்பேத்கார் படத்தை பார்த்தாலும் அவர் செய்த நல்ல விஷயம் எதுவும் நினைவுக்கு வருவதில்லை.மாறாக,எதாவது கலவரம் நடந்து விடுமோ என்ற பயத்தில் இயற்கை உபாதை வருகிறது.

மீண்டும் ஆட்டோ ஸ்டாண்டிற்கு வருகிறேன். ஆட்டோ ஓட்டுனர்களில் பலர் இளைஞர்கள் தான். சவாரி இல்லாத நேரங்களில் ஸ்டாண்டில் இவர்கள் பண்ணும் ரவுசுக்கு அளவேயில்லை. பெண்களை கிண்டல் செய்வது, பேருந்துக்காக நிற்பவர்களின் அருகில் இடிப்பது போல் ஆட்டோவை கொண்டுவந்து நிறுத்துவது, ஆன் செய்துவிட்டு பாடல்களை அதிக ஒலியில் வைப்பது என்று இவர்கள் செய்யும் இம்சைகள் சொல்லி மாளாது.

இவர்கள் தங்கள் வீரத்தை பிரஸ்தாபிக்க வேண்டும் என்பதற்காகவே கொண்டாடும் நாள் ஆயுத பூஜை என்று நினைக்கிறேன். நாள் முழுக்க ஒலிபெருக்கியில் பாடல்களை அலறவிட்டு, மாலை ஆனதும் தெருமுழுக்க பூசணி உடைத்து அந்த ஸ்டாண்ட் இருக்கும் தெருவை நவக்கிரகமாக பாவித்து நல்ல வேகத்தில் ஒன்பது சுத்து சுத்தி யார் முதலில் ஸ்டாண்டுக்கு வருகிறார்கள் என்று ஒரு போட்டி நடக்கும் பாருங்கள், ஆஹா...வர்ணிக்க வார்த்தைகள் இல்லை. மொத்தத்தில், ஆட்டோ ஸ்டாண்ட் இல்லாத இடத்தில் உங்கள் இல்லம் அமைந்துள்ளது என்றால் நீங்கள் கடவுளால் ரட்சிக்கப்பட்டவர் என்றே கருதலாம்.

2 comments:

இராகவன் நைஜிரியா said...

சரியாகச் சொன்னீர்கள். ஆட்டோ ஸ்டாண்ட் இல்லாத இடத்தில் குடியிருந்தால் நாமெல்லாம் ரொம்ப புண்ணியம் பண்ணியிருக்கோம் என்று அர்த்தம்

Gokul said...

வாசு,

ஒரு சிம்பிள் பார்முலா இருக்கிறது ஆட்டோக்காரர்களுக்கு ,

{நியாயமான கட்டணம் } X {2.5} = ஆட்டோ கட்டணம்

என்பதே அவர்கள் தாரக மந்திரம், அதற்கான காரணங்கள் மிகவும் எளிய முறையில் சொல்லப்படும்

- சுத்திகிட்டு வரணும்பா (அதாவது ஏதாவது ஒன்வே இருந்தால் சில சமயம் இல்லாவிட்டாலும்)

- வரும்போதும் சும்மாதான் வரணும்

- பெட்ரோல் விலை ஏறிபோச்சு (அது இறங்கி இருந்தாலும்)

-காலையில முதல் போனி (சில சமயம் சாயங்கலத்திலும் முதல் போனி கேட்டால் அவர்கள் சாயந்திரம் தொடங்கி முழு இரவும் ஒட்டுபவர்களாம்)
-பேரம் பேசினால் குறைப்பது சுமார் 1% மட்டுமே, அதாவது 50 ரூபாய் பேசினால் பேரம் பேசினால் குறைப்பது ரூபாய் 5.