Wednesday, 17 June 2009

தமிழ் திரையில் பின்னணி பாடகர்கள்

சில நாட்களுக்கு முன் அருணகிரிநாதர் படத்தில் டி.எம்.எஸ் அவர்கள் பாடிய "முத்தைதிருபத்தி" பாடலை கேட்டேன். கேட்கும் போதே மனதில் ஒரு கேள்வி பிறந்தது.

தமிழை தாய்மொழியாக கொண்ட பின்னணி பாடகர்கள் எத்தனை பேர்? விரல் விட்டு எண்ண கூடியே சிலரே.பெரும்பாலும் ஆந்திரா அல்லது கேரளத்தை சேர்ந்த பாடகர்களே தமிழ் திரையுலகில் பின்னணி பாடகர்களாக கோலேச்சி செய்து கொண்டு இருந்திருக்கிறார்கள்/இருக்கிறார்கள். குறிப்பாக தமிழை தாய்மொழியாக கொண்ட பாடகிகள் மிக மிக குறைவு.ஏன் இந்த நிலை?

1937-1950 வரை தமிழ் திரையில் பின்னணி பாடகர்களில் பலர் தமிழை தாய்மொழியாக கொண்டவர்கள். உதாரணம், எம்.கே.டி, பி.யு.சின்னப்பா, கே.பி.சுந்தராம்பாள், எம்.எஸ், எம்.எல்.வி போன்றவர்கள். இவர்கள் அனைவருக்கும் இருந்த பொதுவான அம்சம் என்னவென்றால் இவர்கள் அனைவருமே கர்நாடக இசையை நன்கு அறிந்தவர்கள். 1950 ஆம் ஆண்டுக்கு பிறகு தான் பின்னணி பாடகர்கள் என்ற குரூப் உருவானது. அதற்கு முன் இருந்த காலகட்டத்தில் சொந்த குரலில் தான் அனைவரும் பாடினார்கள் ஏனென்றால் சினிமா உருவெடுத்தது 1937 ஆம் ஆண்டு தான். அதற்கு முன் நாடகங்கள் தான் பெரிய அளவில் நடைபெற்றன. நாடக கலைஞர்கள் சொந்த குரலில் தான் பாடியாக வேண்டும்.

1950 ஆம் ஆண்டுக்கு பிறகு பின்னணி பாடகர்களில் குறிப்பிட்டு சொல்லப்பட வேண்டியவர் திரு.டி.எம்.எஸ் அவர்கள். டி.எம்.எஸ் சௌராஷ்ட்ரா வகுப்பை சேர்ந்தவர். அவர் சொந்த ஊர் மதுரை. ஆனால், தாய்மொழி தமிழா என்று உறுதியாக தெரியவில்லை. பெண்களில் பி.சுசீலா மற்றும் எஸ்.ஜானகி அவர்கள். சுசீலா, ஜானகி இருவருமே ஆந்திராவை சேர்ந்தவர்கள். தமிழ் திரையுலகில் கிட்டத்தட்ட 25 ஆண்டுகள் இவர்கள் ஆதிக்கம் தான். நடுவில் ஏ.எம்.ராஜா, பீ.பி.ஸ்ரீநிவாஸ் போன்றவர்கள் பாடினாலும் திரையுலகை ஆக்கிரமித்தார்கள் என்று சொல்ல முடியாது. பீ.பி.ஸ்ரீநிவாசும் ஆந்திராவை சேர்ந்தவர்.

பாடகிகளில் சுசீலாவுக்கு இணையாக பேசப்பட்ட வாணி ஜெயராம் வேலூரை சேர்ந்தவர். தமிழர். ஆனால், இவர் தமிழில் பெரிதாக சோபித்தார் என்று சொல்ல முடியாது. இவர்களுக்கு பின் வந்த ஜென்சி, சித்ரா, சுஜாதா அனைவரும் கேரளாவை சேர்ந்தவர்கள். டி.எம்.எஸ் அவர்கள் உச்சியில் இருந்த போதே அறிமுகமாகிய எஸ்.பி.பி அவர்களும் ஆந்திராவை சேர்ந்தவர். அவருடைய சமகாலத்தவர் ஆன காந்தர்வ குரலோன் கே.ஜே.இயேசுதாஸ் கேரளாவை சேர்ந்தவர்.

இன்றைய பாடகர்கள் பற்றி நாம் அதிகம் பேச முடியாது. காரணம், இவர் தான் இன்று பெரிய பின்னணி பாடகர் என்று யாரையும் அடையாளம் காட்ட இயலாது. ஒரே படத்தில் பத்து பேர் பாடுகிறார்கள். மீண்டும் இந்த பதிவின் ஆரம்பத்தில் கேட்ட அதே கேள்விக்கு வருகிறேன்? ஏன், தமிழிலிருந்து அதிகம் பாடகர்கள் வரவில்லை? எனக்கு காரணம் தெரியவில்லை. உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்களேன்.

5 comments:

ச.முத்துவேல் said...

நேற்றுகூட நான் நண்பர்களிடம் இது பற்றி பேசிக்கொண்டிருந்தேன். எனக்கும் விடை தெரியவில்லை.இதைச்சொல்லவா பின்னூட்டம் என்கிறீர்களா? வாணிஜெயராம் வேலூர்(உங்க ஊர்) என்பது புதுத் தகவல். தமிழர் என்பது மட்டுமே நானறிந்தது.மகிழ்ச்சி.

ஆனால் இந்த நிலை மாற்வேண்டும் என்பது மட்டும் நிச்சயம்.

Vasu. said...

வருகைக்கு நன்றி முத்துவேல். இதே போல் எனக்கு இன்னொரு குறையும் உண்டு. அகில இந்திய அளவில் நடத்தப்படும் குரல் தேர்வு போட்டிகளில் தமிழர்கள் பங்கு கொள்வதே இல்ல. உதாரணமாக, Indian Idol நிகழ்ச்சியில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து பலர் கலந்து கொண்டார்கள். ஆனால், ஒரு தமிழர் கூட இல்லை.

Gokul said...

வாசு , முத்துவேல்,

ஜானகி கேரளாவை சேர்ந்தவர் என்று நினைக்கிறேன். மேலும் இதில் கவனிக்க வேண்டியது கதாநாயகியர் பெரும்பாலும் தமிழை தாய்மொழியாக கொண்டவர் இலர். அக்காலத்தில் M.N. ராஜம் மற்றும் விஜயகுமாரி மட்டுமே தமிழை தாய்மொழியாக கொண்டவர் எனசொல்வார்கள்.

இப்போதும் தமிழ் கதாநாயகியர் மிகவும் சிலர்தான். இதற்கு காரணம் வெளுத்த தோல் இல்லாமயா , கவர்ச்சியாக நடிக்க தயக்கமா, இல்லை தமிழ் ஆண்களுக்கு தமிழ் பெண்களை விட மற்ற மாநில பெண்களையே பிடிக்குமா என்று தெரியவில்லை. லக்ஷ்மி , சுகன்யா போன்றோர் விதிவிலக்கு. நாம் தமிழ் என்று நினைக்கும் பெரும்பான்மையான முன்னணி கதாநாயகியர் பெரும்பாலும் கேரளா, ஆந்திர , வட இந்தியாவில் சேர்ந்தவரே.

இப்போதுதான் பின்னணி குரல்களில் ஜனநாயகம் இருக்கிறது, யார் வேண்டுமானுலும் பாடலாம் என்று, A.R.ரஹ்மான் தான் இதை ஆரம்பித்து வைத்தவர், ஆக இப்போது நிறைய தமிழ் பாடகர்களை காண முடியும் என்று நினைக்கிறேன் , ஹரிணி , மகதி போன்றோரை உதாரணமாக சொல்லலாம்.

Vasu. said...

வலையை துழாவி ஜானகி ஆந்திராவை சேர்ந்தவர் என்பதை உறுதி செய்து கொண்டேன். அவர் சொந்த ஊர் குண்டூர். மஹதி, ஹரிணி, அனுராதா ஸ்ரீராம் ஆகியோர் நம்மூரை சேர்ந்தவர்கள் .கதாநாயகிகள் விஷயத்தில் நீ சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை.

Mahalakshmi said...

Namma tamizhnaattu ponnunga romba adaka odukamaana ponnungala irukkalaam-la :-)