Monday 27 July 2009

என்ன தேசமடா இது?

ஒருவன் உங்கள் வீட்டுக்குள் புகுந்து உங்கள் குடும்பத்தினரை கொன்று விடுகிறான். கொலை செய்தது நான் தான் என்று பகிரங்கமாக ஒப்புக்கொள்கிறான். நீங்கள் என்ன செய்வீர்கள்? அவனுக்கு அதிகபட்ச தண்டனை அளிப்பீர்களா அல்லது நாலு பேரை அழைத்து அவன் குற்றவாளி தான் என்று உறுதி செய்து கொண்ட பின் முடிவெடுப்பீர்களா?

மும்பை தாக்குதல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அஜ்மல் காசாப் விஷயத்தில் இது தான் நடந்து கொண்டு இருக்கிறது. நான் குற்றவாளி என்னை தூக்கிலிடுங்கள் என்று அவன் கூறுகிறான். ஆனால் நீதிமன்றமோ அவன் சொல்வதால் மட்டுமே குற்றவாளி என்று முடிவு செய்து வழக்கை முடிக்க இயலாது, சட்டம் தன் கடமையை செய்யும் என்கிறது. இதில் இன்னொரு வேடிக்கை என்னவென்றால்,தனக்காக வாதாடும் வக்கீல் மீது நம்பிக்கை இல்லையாம் இவனுக்கு.இருவரும் பரஸ்பரம் நம்பிக்கை வைத்து நீதிமன்றத்தில் வாதாடுங்கள் என்கிறார் நீதிபதி.

இதற்கிடையே, பாராளுமன்ற தாக்குதலில் ஈடுபட்ட முஹம்மத் அப்சலுக்கு இன்னும் தண்டனை வழங்கப்படவில்லை என்பதை இங்கு நினைவுப்படுத்தி கொள்வோம்.

No comments: