Tuesday 14 July 2009

மீண்டும் "A Wednesday"




வேலை விஷயமாக டெல்லியில் இருப்பதால் டிவி பார்க்கும் நேரம் அதிகமாகி விட்டது. கடந்த சனியன்று சன் டிவியில் "பழனி" . பத்து நிமிடத்திற்கு மேல் பார்க்க முடியவில்லை. வாந்தி வரும் போல் இருந்தது. சரி என்று ஹிந்தி சேனல்கள் பக்கம் திரும்பினேன். எதோ லோக்கல் கேபிள் டிவியில் "A Wednesday" ஓடிக்கொண்டு இருந்தது.

ஒரு படத்தை இரண்டு முறை பார்ப்பதெல்லாம் இன்றைய சூழ்நிலையில் பெரிய விஷயம். ஆனால், இரண்டாம் முறை பார்த்த போதும் படம் அலுக்கவில்லை. பார்த்துக்கொண்டே இருக்கும் போது மனதில் கமல் இந்த காட்சியை எப்படி எடுக்க போகிறார், இந்த வசனம் தமிழில் எப்படி இருக்கும், இந்த பாதிப்பு இருக்குமா தமிழில் என்று கேள்விகள் எழுந்த வண்ணம் இருந்தன.

குறிப்பாக கிளைமாக்ஸ். நசுரிதீன் ஷா அவர்கள் ஒரு சாதாரண மனிதன் தீவிரவாதத்தை எதிர்க்க முயற்சி எடுத்தால் என்னவாகும் என்று அனுபம் கேரிடம் வசனத்தில் பொரிந்து தள்ளுவார்.ஹிந்தி சுமாராக புரிந்தால் கூட கண்ணீர் வரவழைக்கும் காட்சி இது. இதை தமிழுக்கு ஏற்றபடி கமல் எப்படி எழுதியிருப்பார் என்று தோன்றியது. ஏனென்றால், தமிழகம் மும்பை/டெல்லி அளவுக்கு தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட ஊர் இல்லை. அதனால், தீவிரவாதத்தின் தீவிரம் புரியுமா என்றும் தெரியவில்லை. தமிழ்நாடு "உன்னை போல் ஒருவனை" அணைக்குமா அல்லது ஒதுக்கித்தள்ளுமா? என் மனம் இன்னொரு "அன்பே சிவம்" என்று தான் சொல்கிறது. பொறுத்திருந்து பார்ப்போம்.

3 comments:

Zahoor said...

தமிழில் கமலை விட வேறு யாரும் இப்படத்தை சிறப்பாக செய்ய முடியாது. நஸ்ருதீன் ஷாவை மிஞ்சுவர் என எதிர்பார்க்கலாம். அறிமுக காட்சியில் வரும் அந்த காவல் நிலைய சீனுக்காக காத்திருக்கிறேன்.

தமிழில் வேறு யார் இப்படத்தில் நடிதால் நன்றாக இருக்கும் என ஆராய்ந்து, நீங்கள் ஒரு பதிவை போடலாம் :-)

Zahoor said...

தமிழில் கமலை விட வேறு யாரும் இப்படத்தை சிறப்பாக செய்ய முடியாது. நஸ்ருதீன் ஷாவை மிஞ்சுவார் என எதிர்பார்க்கலாம். அறிமுக காட்சியில் வரும் அந்த காவல் நிலைய சீனுக்காக காத்திருக்கிறேன்.

தமிழில் வேறு யார் இப்படத்தில் நடிதால் நன்றாக இருக்கும் என ஆராய்ந்து, நீங்கள் ஒரு பதிவை போடலாம் :-)

Vasu. said...

Zahoor,

நல்ல யோசனை. பதிவாக இல்லாவிட்டாலும், பின்னூட்டமாக என் எண்ணங்கள் இதோ:

Naseerudhin Shah(The stupid common man) - Sathyaraj
Anupam Kher(Prakash Rathod) - Nassar
Jimmy Shergill(Arif Khan) - Surya
Aamir Bashir(Jai) - Sriman
Ibrahim Khan(Terrorist 1) - Daniel Balaji(I agree that we need someone a little old for this character)
Ikhlaque Ahmed(Terrorist 2) - Anyone
Mohammed Zaheer(Terrorist 3) - Anyone
Khurshid Lala(Terrorist 4) - Anyone

The college dropout who comes as ethical hacker - Siddharth of Boys Fame
Chief Minister - Prakash Raj