Thursday 13 August 2009

இது தேவையில்லாத ஆணி புடுங்குற வேலை



1500 போலீஸ், 10000 பேர் அமரக்கூடிய திடல், ஐந்து நுழைவு வாயில்களில் மெட்டல் டிடக்டர் சோதனை, ஏர்போர்ட் முதல் அயனாவரம் வரை கொடி,தோரணம்,அலங்கார மின் விளக்குகள் என்று குறைந்த பட்சம் ஒரு ஐந்து கோடி ருபாய் செலவில் சர்வக்ஞர் என்ற கன்னட மகானின் சிலை திறப்பு விழா இன்று சென்னையில் நடக்கிறது.

அடுத்த முறை கன்னடர்-தமிழர் பிரச்சனை ஏற்பட்டால் தமிழகத்தில் முதல் பலி இந்த சர்வக்ஞர் சிலை தான். கன்னடர்கள் என்ன கேனையர்களா? சமீபத்தில் தமிழக முதல்வர் பெங்களூரில் திறந்த திருவள்ளுவர் சிலை அவர்களுக்கு இருக்கிறதே. இதெல்லாம் தேவையா? கவனிக்கப்பட வேண்டிய பிரச்சனைகள் பல குவிந்து கிடக்க, இரு மாநில முதல்வர்களும் இது போன்ற சின்ன விஷயத்திற்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க என்ன அவசியம் இருக்கிறது என்று புரியவில்லை.

1 comment:

Gokul said...

பெங்களுருல உள்ளாட்சி தேர்தல் , அதுக்கு எடுயுரப்பாவுக்கு தமிழ் வோட்டு வேணும், காவிரில தண்ணி கொடுக்கறது, ஹொகேனக்கல் பிரச்சினையை தீர்க்கறது எல்லாமே டேஞ்சர் , பிரச்சினை இல்லாத வழி அப்படின்னா இந்த சிலைதான் , போட்டது தாக்கு....

பொதுவாவே தாத்தாவுக்கு இந்த சிலை திறக்கறது, பேரு வெக்கறது அப்படின்னு தேவை இல்லாத வேலை செய்யறது ரொம்ப பிடிக்கும், இப்போ பதில் மரியாதை அப்படிங்கற பேருல ஒரு ஜாலிதான்.