மும்பை ஹைகோர்ட் "மனைவி எவ்வளவு திட்டினாலும் பொறுத்து கொள்ள வேண்டும்" என்று சொல்லி இருக்கிறது.(03-Oct-09,தினமலர்)
இது என்னங்க அநியாயமா இருக்கு அதுக்காக கேவலமா பச்சை பச்சையாய் திட்டினாலும் பொறுத்து கொண்டு பூமி ஆளனுமா? ஒரு அளவு வேணாமா? மனுஷன் எந்த அளவுக்கு பொறுக்கறது? ஒரு மனுஷ தன்மை வேணாமா? அட நம்மளை திட்டினாலும் பரவாயில்லய்யா , நம்ம அப்பா ஆத்தா கூட பொறந்தவங்க , பார்க்க வரவங்க , கூட வேலை செய்யறவங்க எல்லோரையுமா திட்டுறது, ச்சே.. மனுஷன் தின்ன முடியுதா, மத்தவங்க கூட பேச முடியுதா , பிடிச்ச டிரஸ் போட்டுக்க முடியுதா ... எல்லாத்துக்கும் இப்படி நாக்கை புடிங்குக்குற மாதிரி கேள்வியா கேட்டா நாங்க என்னதான் செய்யறது .
அட ஒரு நாள் ரெண்டு நாள்னா பரவாயில்லப்பா , அட ரெண்டு மூணு மாசம் , மிஞ்சி போனா ரெண்டு மூணு வருஷம்னாலும் பரவாயில்லை இப்படி வருஷகணக்கா திட்டின என்னதான் செய்யுறது? சூடு-சொரனையே இல்லைன்னாலும் கோவம் வரும், இப்படி கோவப்பட்ட ஒருத்தன் கோர்ட் வாசல் ஏறி இருக்கான் , (அதுக்கு என்ன திட்டு...) ஆனாலும் ஏறி இருக்கான் .. தெரியாமத்தான் கேக்குறேன், அப்படி வந்தவனை அந்த ஜட்ஜும் திட்டறதா.. அப்படி துணிவா , வீரமா, ஒரு தீர்மானமா,சாமர்த்தியமா, திடமா கோர்ட்டுக்கு போனவனுக்கு ஒரு நீதி வேணாமா,? ஒரு நியாயம் வேணாமா?
ஒன்னே ஒன்னு சொல்லிக்கறேன் , இப்படியே திட்டு வாங்கிட்டே இருந்தா .. திட்டிகிட்டேதான் இருப்பாங்க..அதனால கேவலமா பேசறப்போ ஒரு வரைமுறை இருக்கணும்னு ஒரு ஒப்பந்தம் போட்டுக்கணும், அப்புறம் சாப்புடும்போதோ, பெரிய மனுஷனா பேசிகிட்டு இருக்கும்போதோ, காலையில ஏழு மணிக்கு முன்னே, பக்கத்து வீட்டு சின்ன பசங்க முன்னாடியோ (நம்ம குழந்தைகளை விடுங்க ..எல்லாம் ஒரே குடும்பம்),வேலைக்காரி முன்னாடியோ,பொது இடத்திலயோ,ராத்திரி முக்கியமான நேரத்திலோயோ திட்டக்கூடாது அப்படின்னு ஒரு முறை வெச்சாதான் முடியும், மத்தபடி இந்த கோர்ட் ஜட்ஜ் இவங்க மேலே இருக்கற நம்பிக்கையெல்லாம் எனக்கு போயிடுச்சுங்க ..நீங்க என்ன சொல்றீங்க?
6 comments:
Nalla Velai, uthaicha poruthukanum nu sollala illa athu varaikum sandhoshappaduvom.
ரொம்ப நொந்து போய் இருக்கீங்களோ...
//மும்பை ஹைகோர்ட் "மனைவி எவ்வளவு திட்டினாலும் பொறுத்து கொள்ள வேண்டும்" என்று சொல்லி இருக்கிறது// - வெளங்கும்.
ஸ்ரீராம்,
சரியா சொன்னிங்க .. நான் சொல்லிட்டேன், பல பேரு சொல்லலை :-)
வாசு,
எவ்வளவு உதைச்சாலும் பொருத்தக்கலாம்னு சொல்லி இருந்த ..அந்த ஆளு கேஸ் போட கோர்ட்டுக்கு போயே இருக்க முடியாது :-))
ராபின்,
வருகைக்கு நன்றி
Post a Comment