தமிழ் சினிமா எழுபத்தைந்து ஆண்டுகளை தாண்டி சென்று கொண்டு இருக்கிறது. இந்த எழுபத்தைந்து ஆண்டுகளில் எத்தனையோ மாற்றங்கள். ஆரம்ப காலங்களில் மன்னர் மரபை சேர்ந்த கதைகளே பெரிதும் படமாக்கப்பட்டன. அதன் பின் கால மாற்றத்திற்கு ஏற்ப கதைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு திரைப்படங்களாக மாற்றப்பட்டன.
இந்த மாற்றங்களின் பின்னணியில் முக்கியமான ஒரு அம்சம் பாடல்கள் படமாக்கப்படும் விதம். முதலில் சினிமா அரங்குகளில் படமாக்கப்பட்ட பாடல்கள் பின்னர் வெளியுலகில் எடுக்கப்பட்டன. நிஜமான மலை,அருவி,தடாகம் போன்றவை படங்களில் இடம்பெற்றன. செட்டுக்களில் சுற்றிக்கொண்டு இருந்த தமிழ் சினிமாவை வெளியுலகிற்கு கொண்டு வந்தவர் என்று பாரதிராஜாவை பற்றி சொல்வார்கள். இவர் வந்த பின்பு தான் வெளிப்புற படபிடிப்பு அதிகம் நடைபெற்றது. இருந்தாலும் எம்.ஜி.யார் தான் அன்பே வா, உலகும் சுற்றும் வாலிபன் போன்ற படங்களின் வாயிலாக இதை முதல் முதலில் முயற்சி செய்தார் என்று நினைக்கிறேன்.அதே போல் பாடல்கள் பல்வேறு ஊர்திகளில் படம் பிடிக்கப்பட்டன. மலைக்கள்ளனில் குதிரையில் பாடிய எம்.ஜி.ஆர், பின்னாளில் ரிக்க்ஷாகாரனாக மாறி பாடினார். இப்படி ஊர்திகளில் படமாக்கப்பட்ட பாடல்களை பற்றியதே இந்த பதிவு.
எம்.கே.டி, பி.யு.சி கால படங்கள் பெரும்பாலும் ஆன்மிகம், மன்னர் கால கதைகள் போன்றவற்றை சார்ந்தே இருந்தன. ஆகையால், இந்த காலகட்டத்தில் படமாக்கப்பட்ட பாடல்கள் பெரிதும் குதிரை சார்ந்தவை. இதன் பின்னர் வந்த எம்.ஜி.ஆர், சிவாஜி ஆகியோரின் இளமைக்கால படங்களில் கூட குதிரை, படகு போன்றவை தான் பாடல்களில் பிரதான பங்கு வகித்தன. இவர்கள் பின்னாளில் நடித்த படங்களில் தான் கொஞ்சம் கொஞ்சமாக சைக்கிள், பைக், கார் என்று தமிழ் சினிமா ஊர்திகளின் பரிணாம வளர்ச்சியை கண்டது.
இதற்கு முன் சைக்கிள், கார் போன்றவை தமிழ் சினிமாவில் காட்டப்படவில்லை என்று நான் சொல்லவில்லை. ஆனால், ஒரு பாடலை முழுவதுமாக ஒரு ஊர்தியில் படம் எடுக்க ஆரம்பித்தது 1960 பிறகு தான் என்று எண்ணுகிறேன்.இதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டிய பாடல், "வந்த நாள் முதல் இந்த நாள் வரை" என்னும் பாவமன்னிப்பு படத்தின் பாட்டு. முழுப்பாடலையும் சிவாஜி சைக்கிள் மேல் அமர்ந்து பாடியிருப்பார். அந்த சைக்கிளில் எதோ "வைத்தியசாலை" என்று பெயர் கூட இருக்கும். என்ன பெயர் என்று இப்போது நினைவில்லை.
கப்பலையே காட்டாமல் கப்பலில் நடப்பதாக எடுக்கப்பட்ட பாட்டு புதிய பறவை படத்தில் வரும் "உன்னை ஒன்று கேட்பேன்,உண்மை சொல்ல வேண்டும்" பாடல். கப்பலோட்டிய தமிழன் படத்தில் வரும் "வெள்ளி பனி மலையின் மீதுலவுவோம்" பாடலில் கப்பல் வரும் என்று நினைக்கிறேன்.நினைவில்லை.இதை படிப்பவர்கள் உறுதி செய்யுங்கள்.
ஊர்தியில் படமாக்கப்பட்ட மற்றுமொரு அழகான பாடல், "அழகிய மிதிலை நகரினிலே" என்று காரில் சென்னை நகரை சுற்றி எடுக்கப்பட்ட பாடல். படப்பெயர் தெரியவில்லை. சிட்டுக்குருவி படத்தில் வரும் "என் கண்மணி உன் காதலி" பாடல் மற்றுமொரு முக்கியமான ஊர்திப் பாடல். அந்த கால பல்லவன் பஸ்சில் படமாக்கப்பட்டது. இதில் கண்டக்டர் சொல்லும் வசனங்கள் மிகப் பிரபலம். ஆனால், பாடல் முழுதும் பஸ்சில் படமாக்கப்பட்டது என்று சொல்ல முடியாது. ஒரு வழியாக, சைக்கிள், கார், பஸ்ஸை தாண்டிய தமிழ் சினிமா "பறந்தாலும் விடமாட்டேன்" என்கிற பாடலின் மூலம் தன் பறக்கும் இச்சையை தீர்த்துக்கொண்டது. பாடல் இடம் பெற்ற படம் குரு. பாடல் முழுதும் விமானத்தில் எடுக்கப்பட்டது. இந்த படம் வெளிவந்த நேரத்தில் நிச்சயம் இந்த பாடல் பரபரப்பாக பேசப்பட்டிருக்கும். இன்று வரை இந்த மாதிரி ஒரு விமானப் பாடல் எடுக்கப்படவில்லை என்றே தோன்றுகிறது.
ரயில் பாடல்கள் நிறைய உண்டு. "ஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது(பச்சை விளக்கு) ஆரம்பித்து ரயிலே ரயிலே ஒரு நிமிஷம்(5 ஸ்டார்)" வரை எத்தனை பாடல்கள். சொல்ல ஆரம்பித்தால் கணக்கே இல்லை. இன்னும் சில பிரபலமான ஊர்திப் பாடல்கள்:
பாரப்பா பழனியப்பா(பெரிய இடத்து பெண்) - மாட்டுவண்டி
ஓஹோ எந்தன் பேபி(தேன்நிலவு) - இது ஊர்தி பாடல் என்று சொல்ல முடியாது ஆனால் வித்தியாசமான விதத்தில் படமாக்கப்பட்ட பாடல்
கூட்ஸ் வண்டியிலே ஒரு காதல் வந்திருச்சு(குங்குமச்சிமிழ்) - கூட்ஸ் ரயில்
ஆஹா, இன்ப நிலாவினிலே(மாயாபஜார்) - படகு
சின்னத்தாயவள்(தளபதி) - கூட்ஸ் ரயில்
தாலாட்டும் காற்றே வா( பூவெல்லாம் உன் வாசம்) - ரயில்
அந்த நாலு பேருக்கு நன்றி(நம்நாடு) - ரயில்
ஸெந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்(முள்ளும் மலரும்)- ஜீப்
என்னை கொஞ்சம் மாற்றி(காக்க காக்க) - ஜீப்
நீங்களும் கொஞ்சம் யோசித்து நான் மறந்த பாடல்களை கொஞ்சம் பின்னூட்டம் இடுங்களேன்.
5 comments:
வண்டி வண்டி ரயிலு வண்டி - ஜெயம்
வளையோசை கலகலவென - சத்யா - footboard டூயட் :-)
"ஒன்று எங்கள் ஜாதியே" - பணக்கார குடும்பம் படத்தில் எம்.ஜி.ஆர வாயசைக்கும் பாடல் - வாகனம் - சைக்கிள்
"கவிதை பாடு குயிலே குயிலே" - தென்றலே என்னை தொடு படத்தில் மோகன் வாயசைக்கும் பாடல் - வாகனம் கார்
பாடல் நினைவில்லை - திரிசூலம் படத்தில் - சிவாஜி இருவேடங்களில் வாயசைக்கும் பாடல் - வாகனம் பைக்.
மூன்று முடிச்சு படத்தில் - கமல் ரஜினி ஸ்ரீதேவி நடித்த - "வசந்த கால நதிகளிலே" - வாகனம் படகு (ரஜினி வாயசைக்கும் கடைசி காட்சிகள் சூப்பர்)
பாசம் படத்தில் - சரோஜா தேவி வாயசைத்து - "ஜல் ஜல் என வரும் சலங்கை ஒலி" - வாகனம் மாட்டு வண்டி
கழுகு படத்தில் - ரஜினியும் ரதியும் வாயசைக்கும் "ஒரு பூவனத்துல சுகம் குளுகுளுங்குது" - வாகனம் பஸ்
லாரி டிரைவர் ராஜாகண்ணு படத்தில் சிவாஜி லாரி ஓட்டிக்கொண்டே ஒரு பாட்டு பாடுவார் - பாடல் நினைவில்லை
சரோஜா படத்தில் - ஹைதராபாத் போகும் வழியில் - பாடும் பாடல் - வாகனம் வேன்.
Super Gokul. Good ones
Few that came to my mind....
Chayya Chayya - Dil se (Uyire) in Train
Nila adhu Vaanathu mele - Nayagan in Boat
En peru meenakumari - Kandhasamy:-) in Bus (I guess but not sure...)
Kallai mattum kandaal - Dasavatharam (not sure if this can be classified under this category...)
Andhi nera thendral kaatru - Inaindha Kaigal in Train
Hi Mahalakshmi,
Really very famous songs based on vehicles, I thought a few of yours but forgot to note.
Thanks for coming..
-Gokul
Post a Comment