சென்னையில் டிசம்பர் சங்கீத சீசன் களை கட்ட துவங்கிவிட்டது. மயிலாப்பூர் பைன் ஆர்ட்ஸ், மியூசிக் அகாடமி போன்ற சபாக்கள் இன்னும் தங்கள் மார்கழி மாத நிகழ்ச்சிகளை வெளியிடவில்லை ஆனால் பெரும்பாலான சபாக்கள் நேற்றைய நாளிதழ்களில் தங்கள் அரங்கில் நடக்கவிருக்கும் நிகழ்ச்சிகளை தேதிவாரியாக வெளியிட்டுள்ளன.
டி.எம்.கிருஷ்ணா, பாம்பே ஜெயஸ்ரீ, நித்யஸ்ரீ, சஞ்சய் சுப்ரமணியம், உன்னிகிருஷ்ணன் போன்ற பெரிய வித்வான்/விதுஷி ஆகியோரின் கச்சேரிகளை சென்னையில் உள்ள எல்லா சபாக்களிலும் கேட்கலாம். ஆகையால் நான் அதை பற்றி எதுவும் சொல்லப்போவதில்லை. நான் கீழே குறிப்பிட்டுள்ள கச்சேரிகள் கொஞ்சம் "ஸ்பெஷல்" ரகம். நேரம் கிடைத்தால் அவசியம் செல்லுங்கள்.
சபா: மீனாக்ஷி சுந்தரராஜன் பைன் ஆர்ட்ஸ் அகாடமி
நிகழ்ச்சி நடக்கும் அரங்கம்: கோடம்பாக்கம் மீனாக்ஷி கல்லூரி K.R.S. அரங்கம்
நிகழ்ச்சி: A.K.C.நடராஜன்-கிளாரினெட்
தேதி மற்றும் நேரம்: 18-12-2009 6:30p.m
சபா: மீனாக்ஷி சுந்தரராஜன் பைன் ஆர்ட்ஸ் அகாடமி
நிகழ்ச்சி நடக்கும் அரங்கம்: கோடம்பாக்கம் மீனாக்ஷி கல்லூரி K.R.S. அரங்கம்
நிகழ்ச்சி: காயத்ரி கிரீஷ் பாட்டு, ஹரித்வாரமங்கலம் ஏ.கே.பழனிவேல் தவில்
தேதி மற்றும் நேரம்: 21-12-2009 6:30p.m
சபா: பார்த்தசாரதி சுவாமி சபா
நிகழ்ச்சி நடக்கும் அரங்கம்: வித்யா பாரதி, பீமசேனா கார்டன் ரோடு, மயிலாப்பூர்
நிகழ்ச்சி: Carnatic-Hindustani Jugalbandhi, Dr.Sriram Parasuram & Anuradha Sriram
தேதி மற்றும் நேரம்: 23-12-2009 6:30p.m
சபா: ஸ்ரீ கிருஷ்ண கான சபா
நிகழ்ச்சி நடக்கும் அரங்கம்: கிருஷ்ண கான சபா அரங்கம், தி.நகர்
நிகழ்ச்சி: டி.எம்.கிருஷ்ண பாட்டு, டி.கே.முர்த்தி & பி.சிவராமன் (இரட்டை மிருதங்கம்)
தேதி மற்றும் நேரம்: 31-12-2009 4:30p.m
சபா: ஸ்ரீ கிருஷ்ண கான சபா
நிகழ்ச்சி நடக்கும் அரங்கம்: கிருஷ்ண கான சபா அரங்கம், தி.நகர்
நிகழ்ச்சி: விசாகா ஹரி, "ஸ்ரீனிவாச வைபவம்" Musical Discourse
தேதி மற்றும் நேரம்: 23-12-2009 9:30a.m
சபா: ஸ்ரீ கிருஷ்ண கான சபா
நிகழ்ச்சி நடக்கும் அரங்கம்: கிருஷ்ண கான சபா அரங்கம், தி.நகர்
நிகழ்ச்சி: திருப்பாம்பரம் சகோதரர்கள் நாதஸ்வரம், இரட்டை தவில்
தேதி மற்றும் நேரம்: 17-01-2010 6:30p.m
சபா: நுங்கம்பாக்கம் கல்சுரல் அகாடமி
நிகழ்ச்சி நடக்கும் அரங்கம்: ராமராவ் கலா மண்டப், தி.நகர்
நிகழ்ச்சி: Dr.M.Balamuralikrishna
தேதி மற்றும் நேரம்: 17-01-2010 6:30p.m
வளரும் கலைஞர்களில் கவனிக்கப்பட வேண்டியவர்கள்
நிஷா ராஜகோபால்
அபிஷேக் ரகுராம்
ரித்விக் ராஜா
இவ்வளவு எல்லாம் சொல்றியே இந்த கச்சேரிக்கெல்லாம் நீ போக போறியா அப்படின்னு கேக்கறீங்களா? நான் பனிரெண்டாம் தேதி துபாய் போயிட்டு ஜனவரி கடைசியில் தான் வரேன். அதனால இந்த சீசன் கச்சேரி எதுக்கும் போக முடியாது.
3 comments:
உபயோகமான தகவல்கள். அனுராதா-ஸ்ரீராம் கச்சேரி கேட்டே ஆக வேண்டும். நான் ஆச்சரியப் படுவதெல்லாம் இவ்வளவு திறமை இருக்கிற ஸ்ரீராம் ஏன் இவ்வளவு அடக்கி வாசிக்கிறார் என்பதுதான்! ஹிந்துஸ்தானியில் அவர் போடுகிற ஒவ்வொரு பிருகாவும் ஒரு மாயச் சுழல்!
http://kgjawarlal.wordpress.com
ஜவஹர்,
நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை. ஸ்ரீராம் ஒரு தேர்ந்த வயலின்ஸ்டும் கூட. இதே சீசனில் நிறைய கச்சேரிகளுக்கு அவர் பக்க வாத்திய சேவையும் செய்கிறார்.
வாசு, சுவாரசியமான துபாய் பயண அனுபவத்தை ஆவலுடன் எதிர்பார்த்திருக்கிறோம் :-)
Post a Comment