Saturday, 6 March 2010

ரஞ்சிதா என்றொரு பெண்

நித்யானந்தாவின் படுக்கையறை வீடியோ பற்றி இனிமேல் யாரும் எழுத முடியாதபடி எல்லோரும் எழுதியாச்சு... ஆனால் நான் படித்த வரை யாரும் அவருடன் கூட இருந்த நடிகை ரஞ்சிதா பற்றி எழுதவேயில்லை, அப்படியே எழுதினாலும் எதிராகவே எழுதுகிறார்கள்.

ரஞ்சிதா என்ற பெண் ராஜசேகர் (எ) நித்யானந்தா என்ற ஆணிடம் உடலுறவு கொண்டார் என்பதுதான் எழுத்தில் எழுத முடிகிற விஷயம். ரஞ்சிதாவிற்கு திருமணம் ஆகிவிட்டது என்று படித்ததாக நினைவு, அவர் கணவருடன் இருக்கிறாரா அல்லது விவாகரத்து பெற்று விட்டாரா என்று தெரியவில்லை, விவாகரத்து பெறவில்லை என்றால் கள்ள உறவு என்று ஒரு பெயர் சூட்டலாம் , அதுவும் கணவர் மட்டுமே குற்றம்சாட்ட தகுதி கொண்டவர், மற்றபடி சுயமாக சிந்திக்கும் வயது வந்த ஒரு பெண் ஒரு 32 வயது ஆணிடம் உறவு கொண்டு இருக்கிறார் (அந்த ஆணின் பின்புலம் என்ன , தொழில் என்ன என்பதெல்லாம் வேறு விஷயம்). அவ்வளவுதான், இதில் அவர் படுக்கை அறை விஷயத்தில் நுழைந்து அவர் முகத்தை / பெயரை சொல்லும் உரிமை யாருக்கும் இல்லை.

so called சமூக ஒழுக்க விதிகளின்படி கண்டிக்க வேண்டியது நித்யானந்தாவைதான் தவிர இந்த விஷயத்தில் ரஞ்சிதா என்ற பெண்ணிற்கு நேர்ந்தது மிகப்பெரிய கொடுமை , ஒரு மிகப்பெரிய (sexually starved) கும்பல் வெறித்தனமாக போட்டு அவரை மிதிக்கிறார்கள்.

இங்கே மார்கெட் போன நடிகை தனது status-ஐ தக்க வைத்துக்கொள்வதற்கு ஒன்று சீரியல் நடிக்க வேண்டும் (வாய்ப்பு வந்தால்) அல்லது இது போன்ற விஷயங்களில் ஈடு பட்டு இருக்க வேண்டும். ஒரு நடிகையை maintain செய்வதற்கான பணபலம் அரசியல்வாதிகள், நடிகர்கள் அல்லது சாமியார்களிடம் மட்டும்தான் இருக்கிறது, இதுவே ரஞ்சிதா ஒரு அரசியல்வாதியிடம் உறவு கொண்டு இருந்தால் வெளியேவே தெரிந்து இருக்காது. இது வரை தமிழ்நாட்டில் எந்த அரசியல்வாதியின் வீடியோவாது வந்து இருக்கிறதா?

தனது TRP ரேட்டிங் ஏற்றி கொள்வதற்காக ஒரு தொலைக்காட்சி நடத்திய தாக்குதலில் அடிபட்டது அமைதியாக வாழ்ந்த ஒரு முன்னாள் நடிகை.

ரஞ்சிதா எல்லோரும் தாகாத காமத்தை விட்டு விட்டு மேலான வாழ்க்கையை வாழுங்கள் என்று உங்களிடம் வந்து சொன்னாரா அல்லது ஐம்புலன்களை அடக்கும் வழிமுறைகளை போதித்து வந்தாரா?

இப்போது நித்யானந்தாவின் மேல் செக்ஷன் 420-வின் அடிப்படையில் வழக்கு போட்டு இருக்கின்றனர், ஏனெனில் அவர் நம்பிக்கை துரோகம் செய்து விட்டாராம் அதாவது பத்திரிக்கையில் / மீடியாவில் தனது புத்தகத்தில் "எந்த வகையிலும் உடலுறவு கொள்ள மாட்டேன் என்று சத்தியம் செய்து " அதனை மீறிவிட்டாறாம்... :-)

இதற்கு 420 செக்ஷனில் கேஸ் என்றால் தேர்தலுக்கு தேர்தல் வாக்குறுதி கொடுத்து விட்டு அதனை மீறுபவர்களை என்ன செய்வது? பண வீக்கம் அடுத்த மாதம் குறைந்து விடும் என்று வாக்கு கொடுக்கும் நபர்களை என்ன செய்வது?

ஜாதி மத பேதங்களை பார்க்க மாட்டேன் என்று உறுதி மொழி எடுத்துக்கொண்டு , வாரிசு வேறு ஜாதியில் கல்யாணம் செய்து கொண்டால் கையை அறுப்பவர்களை என்ன செய்வது? சுமார் 30,000 வாடகை தரவேண்டிய கோவில் நிலத்திற்கு ரூ.50 தருவோரை என்ன செய்வது? இதையெல்லாம் சன் டிவி சொல்லுமா? , "சாமியாரின் மாமியார்" , "அந்தரங்க லீலை" என்ற மசாலா செய்திகள்தான் TRP ரேட்டிங்கை எகிற வைக்கும் என்பதால் அதற்குதான் முக்கியத்துவம்.

மேலும், இந்த சந்நியாச தர்மம் இந்த corporate யுகத்தில் மாற வேண்டும் என்றே தோன்றுகிறது, சந்நியாசி என்ற தருமம் பிராமச்சர்யா விரதத்தை பூன வேண்டும் என்ற விதியையே மாற்ற வேண்டும் நித்யானந்தா , ஈஷா ஜாக்கி வாசுதேவ் , ரவிசங்கர் போன்றோர் தற்போதுள்ள சூழ்நிலையில் மடத்தலைவர்கள் அல்லர் , அவர்கள் இன்றைய நவீன வாழ்வில் மக்கள் தங்கள் தனிப்பட்ட வாழ்வையும் ,
தொழிலையும் மேம்படுத்தி கொள்ள யோசனை சொல்பவர் , உங்கள் கம்பெனியில் leadership training குடுக்க வரும் trainer / mentor போன்ற மனிதர்களிடம் நீங்கள் எனன எதிர்பார்க்க வேண்டுமோ அதைத்தான் இவர்களிடம் எதிர்பார்க்க வேண்டும்.அதை இவர்கள் சற்று ஆன்மிகம் கலந்து போதிக்கிறார்கள்.

ஏனெனில் இயற்கைக்கு எதிரான விஷயங்களை (உணவை, காமத்தை மறுப்பவர்கள்) கடைபிடிப்பவர்கள் இன்றைய சமூகத்தில் வாழமுடியும் என்றே தோன்றவில்லை , வேண்டுமென்றால் இமய மலையில் / காட்டில் இருக்கலாம் (..லாம்).

அப்படி இருக்க ஒவ்வொரு முறையும் பல சாமியார்கள் இந்த விஷயத்தை முயன்று / தோற்று அதில் இந்து மதம் என்ற விஷயம் வேறு அடிபட்டு... ஒரு பால் தினகரன் போலவோ , மோகன் லாசரஸ் போலவோ இவர்கள் இருக்கலாமே எதற்கு தேவையில்லாத பிரம்மச்சர்யம் என்ற சுமக்க முடியாத சுமை?

இதற்காக நித்யானந்தாவின் ஆசிரமத்தின் மீது தாக்குதல் நடத்தி , அவரின் உருவ பொம்மைக்கு தீ வைத்து, போங்கய்யா போய் புள்ளை குட்டிங்களை படிக்க வைங்க...

4 comments:

ராம்ஜி_யாஹூ said...

I have written this comment in alomost60 posts, again I am repeating the same.

If Ranjitha had affair with a business man, actor, employee, student I am not going to object.

If Nitthi also a yoga teacher or meditation teacher/trainer alone its ok.

If Nithi is a saint (sanyasi) then what ranjitha did is a mistake.
As a devotee we should not seduce to a saint for money, s-ex, fame.

Gokul said...

Hi Ramji,

Thanks for the comments..

If Nithyananda is that much easy to seduce, then he is not a saint.

Thats why I am claiming that the dharma of sanyaasis should change in this period.

More over, even if she had sex with him,we can object it but no body has the right to expose her name and face to media.

Please note that according to our law, she cannot be punishable.

சி.வேல் said...

Don’t worries be happy?

ok ranjitha can get kalaimamani for her role in the Tape

கரியவன் said...

மக்களின் கவனத்தை திசை திருப்பும் இது போன்ற டிவி செய்திகளை மக்கள் புறக்கணிக்க வேண்டும். இவர்கள் மக்களின் வாழ்வாதார பிரச்சனையை பற்றியோ, அரசியல்வாதிகளின் ஊழலை பற்றியோ பேசபோவதில்லை இவர்கள் ஆச்சியில் இருக்கும் வரை.