Monday, 1 March 2010

Seppuku a.k.a Hara Kiri

Tom Cruise நடித்த The Last Samurai படத்தை கடந்த வெள்ளி இரவு பார்த்தேன். Ken Watanabe இறுதிக் காட்சியில் மரணமடையும் விதம் கொஞ்சம் வித்தியாசமாக இருந்ததால் அதை பற்றி கூகுளித்தேன். படத்தில் Ken Watanabe வயிற்றில் கத்தியை சொருகிக் கொண்டு Tom Cruise உதவியுடன் வயிற்றின் ஒரு பக்கத்திலிருந்து இன்னொரு பக்கம் எடுத்துச் செல்வார். கூகுளித்ததில் இதற்கு பெயர் "Seppuku" என்று அறிந்தேன். இதையே பேச்சு வழக்கில் சொல்லும் போது ஜப்பானியர்கள் "Hara Kiri" என்று குறிப்பிடுவார்களாம்.

ஜப்பானிய சாமுராய் வீரர்கள் bushido எனப்படும் "வீரர்களுக்கான நியதிகளுக்கு" உட்பட்டே வாழ்ந்தாங்களாம். அதில் ஒன்று தான் Seppuku(கௌரவமான மரணம்). சரி, இது ஏதோ சாமுராய் காலத்தில் மட்டும் தான் இருந்தது என்று நினைத்தால் இன்று வரை இந்த முறை ஜப்பானில் நடைமுறையில் இருக்கிறது. Dede Fortin என்பவர் 2000 ஆண்டு இந்த முறையில் மரணத்தை தழுவியுள்ளார். அதன் பிறகு 2001 ஆண்டு Isao Inokuma தனது நிறுவனம் கடன் தொல்லையில் மாட்டிக்கொண்டு ஏற்பட்ட அவமானத்தால் இந்த முறையால் மரணமடைந்துள்ளார். நம்ம ஊர்ல, நான் கவரி மான் பரம்பரை, ஒரு மசிரு உதிர்ந்தா கூட உயிரோட இருக்க மாட்டேன்னு படம் போடுவாங்க இல்ல? சாமுராய் வழி வந்த ஜப்பானியர்கள் நிஜமாவே கவரிமான் ஜாதி தான். ஏன்னா, இப்போ கூட அவங்க இந்த முறை மரணத்தை வரவேற்க்கறாங்க.

ஏன்பா இந்திய அரசியல்வாதிகளே, உங்க காதுல இதெல்லாம் விழுதா?

2 comments:

Zahoor said...

வாசு,
இரண்டாம் உலகப் போரில் பெரும்பாலான சாமுராய்க்கள் ஜப்பானுக்காக போரிட்டனர். அதில் பலர் 'Kamikaze' என்ற விமான தற்கொலைப்படையில் சேர்ந்து 'seppukku' முறையில் மரணமடைந்தனர். 'Pearl Harbour' தாக்குதலில் ஈடுபட்டதும் 'Kamikaze' படையினரே.

சாமுராய்க்களின் வரலாறு உங்களுக்கு பிடித்திருந்தால், 'Kamikaze' வின் நெகிழ்வான இருண்ட வரலாறும் உங்களுக்கு பிடிக்கும்.

Vasu. said...

Thanks for the comment Zahoor. Will definitely try to know about Kamikaze.