சாருவின் வலைமனைக்கு வருபவர்கள் எண்ணிக்கை குறைந்து விட்டது என்று நினைக்கிறேன். மனிதர் மீண்டும் ஜெயமோகன் மீதான தாக்குதலை ஆரம்பித்து விட்டார். பாருங்களேன், இதற்காக சாரு ஒரு வலைமனை கூட ஆரம்பித்திருக்கிறார். கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பு இன்று சாருவின் வலைமனையில் வந்துள்ளது. ஸ்டீபன் மாணிக்கம் என்பவர் சாருவுக்கு அனுப்பிய மடலில் உள்ளது இந்த இணைப்பு.
http://arivuputhiran.blogspot.com/2010/05/blog-post.html
எனக்கென்னவோ இந்த ஸ்டீபன் மாணிக்கம் சாரு தான் என்று தோன்றுகிறது. எப்படி என்கிறீர்களா? அந்த இணைப்பில் வேறு ஒரு பதிவு கூட இல்லை. ஒரே ஒரு பதிவு ஜெயமோகனை திட்டி. அதுவும் இரண்டு நாட்களுக்கு முன்பு. இரண்டு நாளில் 507 ஹிட்ஸ். எங்கிருந்தோ சுட்டு போடப்பட்டுள்ள Profile புகைப்படம் என்று நிறைய சந்தேகம் தரும் விஷயங்கள். இந்த இணைப்பில் இன்னும் என்னென்ன பதிவுகள் வருகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
தன்னைத்தானே புகழ்ந்து கொள்வது ஒரு கலை. அது எல்லாருக்கும் கைகூடுவதில்லை. கீழே ஸ்டீபன் மாணிக்கம் எனப்படும் சாரு, சாருவுக்கு அனுப்பியுள்ள மடலின் இணைப்பையும், ஸ்டீபன் மாணிக்கம் எனப்படும் சாருவுக்கு சாருவே எழுதி இருக்கும் பதிலுக்கான இணைப்பையும் தந்திருக்கிறேன். சும்மா சொல்ல கூடாது, சாரு கலக்கியிருக்கிறார். "உலக இலக்கியத்தில் நிறைய படித்திருக்கும் ஸ்டீபன் அது எல்லாம் ஜீரோ டிகிரி புத்தகத்தில் இருக்கிறது" என்கிறார். பதில் கடிதத்தில் சாரு "உங்கள் நம்பரை கொடுங்கள், பேச வேண்டும்" என்கிறார்.
http://charuonline.com/blog/?p=597
http://charuonline.com/blog/?p=600
அந்நியன் படத்தில் வரும் "Multiple Personality Disorder" சாருவுக்கு வரும் அபாயம் நிறைய உள்ளது. ஏற்கனவே கோடம்பாக்க உதவி இயக்குனர் ஒருவர் ஜெயமோகனை கண்ட மேனிக்கு திட்டுவது போல ஒரு கடிதத்தை சில மாதங்களுக்கு முன் பிரசுரித்தார் சாரு. இப்போது இது.
8 comments:
சாருவுக்கு ”Multiple Personality Disorder” என்று சொல்ல முடியாது. வேண்டும் என்றால் சுயமே (பெர்சனாலிடியே) இல்லாதவர் என்று சொல்லலாம். அவருக்கு மற்றவர்கள் கொடுக்கும், வண்ணம் பூசும் பிம்பமே முக்கியம். அது இன்னமும் சிக்கலாகி தன்னுடைய பிம்பத்தை தக்க வைக்க என்ன செயவதென்றே தெரியாமல் அவதிப்படுபவர்.
உதாரணத்திற்கு நீயா நானாவில் தன்னை வலுக்கட்டாயமாக மன்னிப்பு கேட்க வைத்துவிட்டார்கள் என்று இப்போது புலம்புகிறார். ஆனால் அதற்க்கு முதல் நாள் “அடியேன் விஜய் டிவி நிகழ்ச்சியில் வருகிறேன். தவறாமல் பாருங்கள்” என்று பெருமையாக தனது தளத்தில் அறிக்கை விட்டவர். அப்போதே தன்னை மன்னிப்பு கேட்க வைத்துவிட்டார்கள் அதில் என்று சொல்ல முடியவில்லை. அது உறுத்தவும் இல்லை. மற்றவர்கள் எடுதுக் கூறியபின் ஓ இது தவறு என்று உரைத்து இப்போது புலம்புகிறார்.
அதிசயம் என்றால் அது சாருதான். மனுசன் எப்படித்தான் இவ்வளவு நாள் தாக்குப் பிடிக்கிறார் என்று தெரியவில்லை.
:)
அமர்நாத் அல்லது ஸ்டீபன் என்ற பெயர்களில் எழுதுவது சாநி என்கிற அறிவழகன் தான் ,
மூன்று மாதங்களுக்கொரு முறை சொரிந்து கொள்ள ஏதாவது ஒன்று தேவை ,
ஜெயமோகன் இவனை இப்போதெல்லாம் கண்டுகொள்வதேயில்லை , எதிர்வினையும் ஆற்றுவதில்லை என கடுப்புதான் .
நித்தி விசயத்தில் காசு வாங்கி எழுதியதை ஜெ சுட்டிவிட்டார் , நீயா நானாவில் செருப்பால் அடித்தார்கள் , அதை திசை திருப்பதான் இந்த கடிதம் ,
இவருடைய சாராயக்கடை ஸ்பான்ஸருக்கு இணைய உலகில் ஏற்பட்டுள்ள பிரச்சனையை திசை திருப்ப்ப கூட சாரு இதை எழுதியிருக்கலாம்
அந்த பதிவையே சாரு தன் வலைமனையில் இருந்து இன்று எடுத்து விட்டார்
@தேடுதல்,
நீங்கள் சொல்வது உண்மை. இன்று அந்த ஸ்டீபன் மாணிக்கம் பதிவையே மனிதர் தன் வலையில் இருந்து எடுத்து விட்டார். காமெடி பீஸ் தான் அவர் :-))
@மதி.இந்தியா
வருகைக்கு நன்றி. உங்கள் கருத்து முற்றிலும் சரி.
தல, இன்னைக்கி http://arivuputhiran.blogspot.com வலைபதிவே கானோம் :)
என்ன கொடுமை சார் இது????
தொடர்வதற்காக....
Post a Comment