Saturday, 5 June 2010

அமெரிக்க NRI-களின் பெரியப்பா
ரஜத் குப்தா என்ற பெயரை கேட்டு இருக்கறீர்களா? பிறந்தது 1948, இன்று அவருக்கு வயது 62!

 டெல்லி மாடர்ன் ஸ்கூலில் மிகச்சிறந்த மாணவனாக வெளிவந்தார் , 16 வயதில் தந்தையை இழந்தவர் 18 வயதில் தாயையும் இழந்தார். டெல்லி IIT-யில் சேர்ந்தார் , IIT-JEE-யில் அகில இந்திய அளவில் 16-வது ரேங்க். 1971-இல் IIT-யை விட்டு வெளியே வந்த குப்தாவிற்கு காத்திருந்தது 3 வாசல்கள் IIM-அகமதாபாதில் MBA சீட் , ITC-யில் உயர் அதிகாரியாக வேலை , மூன்றாவது முழு financial aid-உடன் Harward University-இல் MBA. எதிர்பார்த்த மாதிரியே Harward-ஐ தேர்ந்தெடுத்தார்.

ஹார்வர்ட் கல்லூரியில் MBA படிப்பு.பிறகு 1973-யில் MBA மாணவர்களின் கனவான McKinsey நிறுவனத்தில் சேர்ந்தார். அந்த நிறுவனத்தின் கெட்ட பழக்கம்,  up or out  என்ற கொள்கை அதாவது மூன்று வருடங்களுக்குள் நீங்கள் promotion பெற வேண்டும் இல்லையென்றால் கம்பெனியை விட்டு வெளியே செல்லலாம் (வெளியே செல்ல வேண்டும்).

இந்த சூழ்நிலையில்தான் ரஜத் அங்கு வேலைக்கு சேர்ந்தார், ஆனால் சேர்ந்த 7-8 வருடங்களில் டென்மார்க்கில் உள்ள கிளையை நிர்வகிக்கும் manager-ஆக விமானத்தை பிடித்தார்.இன்றும் McKinsey நிறுவனத்தின் perfect ஆபீஸ் என்றால் அது டென்மார்க்கில் உள்ளதுதான் , ரஜத் குப்தாவின் கைவண்ணம் அது.

நினைத்து பாருங்கள் 70-களில் IT வளராத நேரத்தில் ஒரு management consultant வேளையில் ஒரு அமெரிக்க நிறுவனத்தில் பிரதிநிதியாக Denmark நாட்டின் கிளை அலுவலகத்தை நிர்வாகித்து , அதை மிகச்சிறந்த அலுவலகமாக மாற்றுவது என்பது சாதாரண விஷயம் இல்லை. ஒரு படத்தில் கமல் சொல்வது போல ' அதெல்லாம் அப்படியே வர்றதுதான் இல்லை'!

பிறகு chicago நகரத்தில் உள்ள Mckinsey-அலுவலகத்தில் Director வேலை - இது நடந்தது 1989-இல். பிறகு ஐந்து வருடம் கழித்து 1994-இல் Managing Director-ஆக தேர்ந்தெடுக்கபட்டார்.இந்த சமயத்தில் McKinsey நிறுவனம் பற்றி சொல்ல வேண்டும் , அதன் செல்லப்பெயர் 'The Firm'. உலகின் மிகச்சிறந்த Management Consultant நிறுவனம் அது, அங்கே Managing Director (C.E.O) வேலைக்கு சேர்வது என்பது ஏறக்குறைய ஒரு மட அதிபரை / ஜீயரை தேர்ந்து எடுப்பது போன்ற விஷயம், உலகெங்கும் உள்ள Director-கள் வோட்டு போட்டு தங்கள் தலைவரை தேர்ந்து எடுப்பார்.

இங்கே கவனிக்க வேண்டிய விஷயம் Mckinsey தலை சிறந்த MBA மாணவர்களையே உலகம் முழுவதில் இருந்து தேர்ந்து எடுக்கும். அப்படி வந்த மாணவர்களில் இருக்கும் தில்லாலங்கடி ஆட்கள்தான் Director வரை போகமுடியும் , அப்படி பட்ட தில்லாலங்காடிகள் ஒன்று கூடி உங்களை நம்ப வேண்டும் , நீங்கள்தான் எங்கள் தலைவர் என்று சொல்ல வேண்டும்.இங்கே கவனிக்க வேண்டிய விஷயம் Mckinsey தலை சிறந்த MBA மாணவர்களையே உலகம் முழுவதில் இருந்து தேர்ந்து எடுக்கும். அப்படி வந்த மாணவர்களில் இருக்கும் தில்லாலங்கடி ஆட்கள்தான் Director வரை போகமுடியும் , அப்படி பட்ட தில்லாலங்காடிகள் ஒன்று கூடி உங்களை நம்ப வேண்டும் , நீங்கள்தான் எங்கள் தலைவர் என்று சொல்ல வேண்டும்.

மற்றொரு விஷயம், இவர்கள் இருப்பது Management Consultancy - குறிப்பாக senior management consultancy - அதாவது மற்ற CEO , CFO, COO போன்றவர்களுக்கு அறிவுரை கூற வேண்டிய வேலை , அங்கே ஒரே PPT அல்லது flash presentation வைத்து ஓபி அடிக்க முடியாது, ஏன் என்றால் அவர்கள் போடும் bill அப்படி.

இப்படி தில்லாலங்கடிகளுக்கு அறிவுரை கூறும் பலே தில்லாலங்கடிகள்  சேர்ந்து நீதான் எங்கள் CEO என்று ஒரு இந்தியனை நம்புவது அதுவும் 90-களின் ஆரம்பத்தில் என்பது-... இப்போது தெரிந்து இருக்கும் ரஜத் அடைந்து இருக்கும் உயரம்.

அது மட்டுமல்ல அந்த CEO போஸ்ட் மூன்று வருடங்களுக்கு ஒரு முறை  போகக்கூடியது , மறுபடியும்  தேர்தல் , மறுபடியும் வேலை, இப்படி ரஜத் 1994,1997,2000 என மூன்று முறை வென்று இருக்கிறார்.2003-ஆம் ஆண்டு உலகெங்கும் உள்ள IITians சேர்ந்து அமெரிக்காவில் ஒரு Get Together நடத்தினார்கள் , அதற்கு பிரதம விருந்தினர் Bill Gates, அவருடன் மேடையில் அமர்ந்தவர் ஒருவர் மட்டுமே ..அது ரஜத் குப்தா.மேடையின் கீழ் அமர்ந்த அனைவரும் IITians , அதில் பல பேர் கோடீஸ்வரர்கள்.   
2003-யில் retire ஆன பின் அவர் என்ன செய்தார் ........... மூச்சை பிடித்து கொள்ளுங்கள்,

  • Member of Advisory board of Harward University
  • Member of Advisory board of Kellogs School of Management
  • Chariman of Indian school of Business, Hyderabad
  • Chair of Global Fund to Fight AIDS,Malariya and Tuberclosis
  • Board of Governors of the Lauder Institute of Management & International Studies, The Wharton school, Pennsylvania
  • Chairman of the Board of Associates, Harward Business School
  • Dean Advisory Council MIT Sloan school of Management
(ஸ்ஸ்...ஹப்ப்பா கண்ணை கட்டுதடா சாமி........)

அது மட்டுமல்ல..

Gupta serves on the board of American Airlines Inc. (Director and Member of Audit Committee)
Genpact LTD. (Chairman and Member of Nominating and Governance Committee)
Procter & Gamble Co. (Director)
Goldman Sachs Group Inc. (Independent Director) தற்போது இந்த பதவியை ராஜினாமா செய்து விட்டார்..
Sberbank (Independent Member of the Supervisory Council)
பிறகு ஐ.நா சபை General secretary-ஆக Kofi Annaan இருந்த பொது, அவருடைய Advisor on management reform என்ற பதவியிலும் இருந்து இருக்கிறார்
(இன்னும் சில பதவிகள் இருக்கிறது ..கை வலிக்கிறது)

இவருடையது   காதல் திருமணம், மனைவி கூட IIT-யில் படித்தவர் , IIT-Delhi Gold medalist. அவரும் AT&T நிறுவனத்தில் விஞ்ஞானியாக வேலை பார்த்தவர் (1970-களில்). படிக்கும்போது இருவரும் சேர்ந்து நிறைய நாடகம் எழுதி நடிப்பது உண்டாம். இத்தனை வேலைகளுக்கு நடுவில் இவருக்கு 4 பெண் குழந்தைகள் ... 

சாப்ட்வேர்-இல் ஒரு patented technology-யை வைத்துக்கொண்டு ஒரு product company-ஆரம்பித்து அதனை பிறகு பல மில்லியன்களுக்கு விற்று கோடீஸ்வரர் ஆன எத்தனையோ அமெரிக்கர்களை (அமெரிக்க இந்தியர்களை) கேள்வி பட்டு இருப்போம். ரஜத் விஷயம் வேறு மாதிரியானது ..காலத்தில் முந்தையது... நம்புவீர்கள் என்று நினைக்கிறேன்...

No comments: