Thursday 21 October 2010

மும்பையில் ஒரு நாள்

இன்று காலை பணி காரணமாக மும்பை வந்தேன். மாலை ஆறு மணிக்கு சென்னை விமானம். இன்று ஒரு நாளில் மும்பையில் கவனித்தவை.

1. டெல்லியை போல மும்பை Taxi ஓட்டுநர்களுக்கும் செல்லும் இடத்தை பற்றிய விபரம் தெரியவில்லை. நம்ம சென்னை ஆட்டோ/டாக்சி மக்கள் எல்லாம் கில்லி.

2. மடிப்பாக்கத்தில் இருந்து வடபழனி செல்லும் தூரத்திற்கு மும்பை ஆட்டோவில் வெறும் 85 ரூபாய். நம்மூரில் குறைந்த பட்சம் முன்னூறு கறந்து விடுவார்கள்.

3. மும்பை பெண்களை பார்க்கும் போது சென்னை "பட்டிக்காடு" என்றே சொல்ல தோன்றுகிறது. சும்மா பட்டையை கிளப்புகிறார்கள்.

4. வெளிநாடுகளுக்கு இணையாக கட்டப்பட்டிருக்கும் "Mall" எனப்படும் வெவ்வேறு அங்காடிகள் நிறைந்த பல மாடி கட்டிடங்கள்.

5. சாலை பராமரிப்பு படு மோசம். நான் சென்ற பெரும்பாலான சாலைகள் "வேலை நடைபெறுகிறது" என்ற அட்டையுடன் பாதி தூரத்திற்கு அடைக்கப்பட்டிருந்தது.

6. Lexus, Benz, Outlander என்று எங்கு பார்த்தாலும் வெளிநாட்டு கார்கள். இந்தியாவின் பணக்கார நகரம் இது தான் என்று நினைக்கிறேன்.

7. மேலே சொன்னதற்கு எதிர்மறையாக எந்த சிக்னலில் நின்றாலும் பிச்சை எடுக்கும் "slumdog" குழந்தைகள்.

8. பொறுமையை சோதிக்கும் போக்குவரத்து நெரிசல்.

2 comments:

ராம்ஜி_யாஹூ said...

thanks for sharing

Gokul said...

வாசு,
உனக்கு ஆனாலும் லொள்ளு ஜாஸ்தி .. மும்பை பொண்ணுங்க , மும்பை பணம் பத்தியெல்லாம் ஒண்ணுமே தெரியாத மாதிரி எழுதி இருக்க ...

ராம்ஜி,
உங்களுக்கு கொஞ்சம் லொள்ளு ஜாஸ்திதான், Thanks for sharing அப்படிங்கற கம்மெண்ட.. எப்படி பாவிப்பது என்றே தெரியலை..